475 இளைஞர்களை தொழில்முனைவர்களாக உருவாக்கும் 'ஜாக்ரிதி யாத்ரா'

0

475 பேர் கொண்ட ஒரு குழு. இந்தியா முழுவதும் உள்ள 12 நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்களில் சுற்றிவந்த அனுபவம் அவர்களுக்கு தொழில்முனைவின் தலை முதல் கால் வரைக் கற்றுக்கொடுத்துவிட்டது. புதிய நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் அவர்கள் புதிய இந்தியாவை அவர்களால் கட்டமைக்கமுடியும்.

அது சாதிக்கத் துடிக்கும் பேரார்வத்தின் ஒரு துளி. ஆனால் ஒருவர் அந்த லட்சியத்தை மனதில் ஏற்றிக்கொண்டால் மாற்றம் விளையாமல் போய்விடுமா என்ன?

புதிய இந்தியாவுக்கான ஜாக்ரிதி அல்லது விழிப்புதான் ஜாக்ரிதி யாத்ராவின் நிறுவனர்களான சஷாங்க் மணி மற்றும் ராஜ் கிருஷ்ணமூர்த்தியின் நோக்கம். அதன் மூலம் அவர்கள் கண்டுபிடிப்பையும் மாற்றத்தையும் தர விரும்பினார்கள். அவர்கள் கூறுகிறபடி, இளைஞர்களின் உதவியுடன் 20 ஆண்டுகளில் முன்பைவிட வலிமைமிக்க ஒரு நாடாக உருவாக்கிவிடமுடியும்.

இந்த ஆண்டு 'ஜாக்ரிதி யாத்ரா', மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற ரயில் பயணத்தின் 100வது ஆண்டுவிழாவை இந்தியா முழுவதும் கொண்டாடினார்கள். இந்த யாத்திரையில் பங்குகொள்கிறவர்கள் தேசத் தந்தையின் நினைவுகளுடன் பயணம் செய்யவேண்டும் என்பதுதான் இந்தப் பயணம் அறிமுகம் செய்யப்பட்டதின் நோக்கம்.

இந்த முக்கியத்துவமான குறிப்பைத் தவிர யாத்ராவின் எட்டாவது பகுதியான இந்த ஆண்டின் சில உண்மைகள்…

  • இதுதான் முதல் முறை, யாத்ராவில் ஆண், பெண் தலைவர்கள் அல்லது பங்குபெறுகிறவர்கள் சரிசமமாக உள்ளனர். ஒருங்கிணைப்பாளர்கள் பாதிக்கு மேல் பெண்கள் (42 சதவிகிதம்).
  • பங்கேற்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் 27 மாநிலங்கள் மற்றும் ஆறு யூனியன் பிரதேசங்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து 23 நாடுகளில் இருந்தும் பங்கேற்கிறார்கள். ஒரு தீவை மட்டுமே விட்டுவிட்டார்கள். அது லட்சத் தீவு. ஆனால் அடுத்த ஆண்டில் அதையும் பங்கேற்கவைத்துவிடுவோம் என்கிறார்கள் நிறுவனர்கள்.
  • மக்கள் தொகையியல் பற்றியும் பேசப்படும், 33 சதவிகிதம் பயணிகள் நாட்டுப்புறத்தில் இருந்து வருகிறவர்கள். 36 சதவிகிதம் சிறு நகரங்களில் இருந்து வருகிறவர்கள் மற்றும் 31 சதவிகிதம் பேர் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.
  • இது பயணிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். பதிவு செய்யப்பட்ட 17 ஆயிரம் பேர்களில் இருந்து 475 பேர் மட்டுமே பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தப் பயணம் நாட்டுக்குள் பரந்து விரிந்திருக்கிற புவியியல் மத்திய இந்தியா வழியாக நடக்கும். சஷாங்க் கூறுவதைப்போல, ஏழை கிராமங்களை முன்னேற்றும் பல்வேறுபட்ட மனிதநேய முயற்சிகளும் இருக்கின்றன. உண்மையான இந்தியா வாழும் சில வசதி குறைவான நகர்ப்பகுதிகளும் அதில் உள்ளன. இந்த மத்திய இந்தியாவில்தான் 42.3 சதவிகித மக்கள் வாழ்கிறார்கள். அதில் 550 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பயணத்தின் வடிவம்

இந்தப் பயணம் 12 நகரங்கள் மற்றும் டவுன்ஷிப்புகளைச் சுற்றி(மும்பை, ஹூப்ளி, பெங்களூரு, மதுரை, சென்னை, விசாகப்பட்டினம், புவனேஷ்வர், பாட்னா, தியோரியா, டெல்லி, தியோரியா மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்கள்) ககக்கும். மேலும் அதன் வழியாக பங்கேற்பவர்களுக்கு பல்வேறு நிலைகளிலான கற்றலுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஏற்பாட்டாளர்களால் இந்தப் பயணம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பிரிவு 1 (மும்பை டு டெல்லி)ஆய்வுக்கான நிலை, பயணிகள் ரோல் மாடல்கள் மற்றும் வருகையாளர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் ஈர்த்துக்கொள்ளவும் பாடங்கள் உண்டு. அதாவது உரையாடல் மற்றும் விவாதத்தில் பயணிகள் கலந்துகொள்வதால் அது நடைபெறும். பிரிவு 2 (சென்னை டு டெல்லி) ராஜ் கூற்றுப்படி இது மேஜிக்கல் பிரிவு. இந்தப் பயணத்திற்கு க்ரியேஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அவர் மேலும், இந்தப் பயணத்தில் பயணிகளில் உள்ள உள்முகச் சிந்தனையாளர்கள் பேச முன்வருவார்கள். பேசக்கூடியவர்கள் மேலும் அதிகமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அடுத்து முழுவதுமான முன்னுதாரணமான மாற்றம். பிரிவு 3 (டெல்லி டு மும்பை) ஒருங்கிணைப்பு நிலை என்று அழைக்கப்படுகிறது. பயணத்தில் பங்குபெறுகிறவர்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு புரிந்துகொள்ளும் நிலை அது.

இந்தப் பயணத்தின்போது, பயணிகள் எதிரொலிப்பார்கள், உரையாடுவார்கள், தங்கள் நம்பிக்கைகளுக்கே சவால் விடக்கூடிய உள்முக பயணத்தை அவர்கள் செய்வார்கள் என்கிறார் ராஜ்.

பதினைந்து நாட்கள் பயணத்தின்போது பங்கேற்கும் பயணிகள் ஆறு நபர் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு வழிகாட்டி நியமிக்கப்படுவார். அவர்களின் ஆர்வத்தை வைத்து ஏழு பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள்: விவசாயம், சுகாதாரம், சக்தி, கல்வி, நீர் சுகாதாரவசதிகள், கலை மற்றும் பண்பாடு, அத்துடன் உற்பத்தியும். பின்னர் ஆறு பேர் கொண்ட குழுக்கள் பெருங்குழுவுடன் இணைக்கப்பட்டு செயல்பாடுகள் தொடங்கும். அவர்கள் 'பிக் க்யான் ட்ரீ' (Biz Gyan Tree) என்ற போட்டியில் பங்கேற்று தொழில் வாய்ப்புகள் பற்றிய எண்ணங்களை வழங்கவேண்டும்.

அனைத்து செயல்பாடுகளும் புதுமைப் படைத்தல், இணைந்து செயல்படுதல் மற்றும் மாற்றத்துக்கான முயற்சியை அணுகுவதற்காக கட்டமைக்கப்பட்டன. இதெல்லாம் புதிய தொழில்முனைவோர், தொழில்முனைதலுக்கான பண்புகள்.

முன்னாள் பயணிகள்

வதேலாவைச் சேர்ந்த சவிதா முந்தே, 2012ஆம் ஆண்டு யாத்ரியில் இருந்தார். இந்தப் பயணத்திற்குப் பிறகு ராஜலெட்சுமி சோயா புட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி தன்னுடைய கிராமத்தை முன்னேற்றி வருகிறார். இன்று போஹா என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்குவதற்காக கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டி வைத்திருக்கிறார். பயணத்தில் கற்றுக்கொண்ட பாடத்தின் விளைவாக அவர் தன் 21 வயது வயதில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக உயர்ந்தார்.

சவிதா, தன்னுடைய தொழிலை கட்டியெழுப்புவதில் வெற்றிகரமாக இருக்கிறார். கவிஷ் மற்றும் நேஹா இருவரும் புதிய பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். ஜாக்ரிதி பயணத்தில் இணைந்த பிறகு அவர்களுக்கு புதிய பாதைகள் தெரிந்தன. சுபான் என்ற இயக்கத்திற்குப் பிறகு சுதந்தரமான கலைஞர்கள் நாட்டின் முக்கிய பகுதிகளுடன் இணைக்கப்பட்டார்கள். கலையை நிகழ்த்துவதற்கான பொதுவான வெளி கிடைத்தபோதிலும், தனித்துவமான இசை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதேபோல, முன்னாள் பயணிகள் 350க்கும் அதிகமான புதிய தொழில்களை தொடங்குவதற்கான ஆயத்த நிலையில் இருக்கிறார்கள். பயணத்தில் பங்குகொண்டவர்களில் 49 சதவிகிதம் பேர் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்துவருகிறார்கள். ஆனால், பயணக்குழுவினர் கூறுகிறபடி, இந்தப் பயணம் ஆர்வத்துக்கானது மட்டுமல்ல.

ஒரு உதாரணத்துடன் பேசுகிறார் சஷாங், “நாங்கள் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்குச் செல்லப்போகிறோம். ஏனெனில் அது நம்முடைய தேசம். நாம் செய்யவில்லை என்றால் யார் செய்யப்போகிறார்கள்?” என்கிறார்.

இந்தப் பயணம் ஏற்படுத்துகிற அனுபவம், கற்றுக்கொள்ளும் பாடங்கள், நாட்டைப் பற்றிய ஆழமான புரிதல் எல்லாமும் புதிய தொழில்முனையும் ஆற்றலை இளைய தலைமுறைக்கு உருவாக்கியுள்ளது. அவர்கள் நாளை வலிமையான தொழில் அதிபர்களாக நாட்டுக்கு சேவையாற்றுவார்கள்.

புகைப்படம்: Pradnyesh (Saaku)

ஆக்கம்: TARUSH BHALLA | தமிழில்: தருண் கார்த்தி