ஸ்டார்ட் அப் செய்திகளுக்காக நீங்கள் தொடர வேண்டிய ட்விட்டர் முகவரிகள்!

2

ஸ்டார்ட் அப் உலகிற்கு நீங்கள் புதியவர் என்றால், ஸ்டார்ட் அப் உலகின் புதிய செய்திகளை எல்லாம் எங்கிருந்து பெறுவது என்பதை அறியமால் இருக்கலாம். ஆனால் கவலை வேண்டாம், இதற்கான துவக்கப்புள்ளியாக, ஸ்டார்ட் அப் உலக தகவல்களுக்காக நீங்கள் ட்விட்டரில் பின் தொடரக்கூடிய முக்கிய கணக்குகளை இங்கே பட்டியலாக தருகிறோம்.

1. எலன் மஸ்க் (@elonmusk ) - உங்களுக்கு சுவாரஸ்யம் தேவை என்றாலோ அல்லது, புதிய ஐடியாக்களுக்கான உந்துதல் தேவை என்றாலோ, டெஸ்லா நிறுவனரின் குறும்பதிவுகள் உங்களுக்கு வழிகாட்டும்.

2. பால் கிரஹாம் (@paulg ) - ஸ்டார்ட் அப் பள்ளி என்று வர்ணிக்கப்படக்கூடிய ஒய் காம்பினேட்டர் நிறுவனரான பால் கிரஹாம், தன்னை கவரும் ஸ்டார்ட் அப்களை குறும்பதிவுகளாக பகிர்ந்து கொள்கிறார்.

3. சாம் ஆல்ட்மேன் (@sama ) - ஒய் காம்பினேட்டருக்கான பொறுப்புகளை கவனித்து வருபவர். ஸ்டார்ட் அப் ஆலோசனகளை பஞ்ச் வசனம் போல பளிச் என வழங்கி வருபவர்.

4. மார்க் ஆண்டர்சன் (@pmarca ) - இணைய பிரவுசரான நெட்ஸ்கேப் நிறுவனரான மார்க் இப்போது ஆண்டர்சன் ஹோரோவிட்ஸ் எனும் வென்ச்சர் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது குறும்பதிவுகள் கேலியும், கிண்டலும் கலந்தவை. தகவலும் இருக்கும்.

5. ஓம் மாலிக் (@om ) - கிகாஓம் வலைப்பதிவின் நிறுவனரான இவரது குறும்பதிவுகள் செய்தி மற்றும் தகவல் நோக்கிலானவை.

6. டேவ் மெக்கிலூர் (@davemcclure ) - ஸ்டார்ட் அப் ஊக்க திட்டமான ஆக்சலேட்டர் 500 ஸ்டார்ட் அப் நிறுவனரான இவர் ஸ்டார்ட் அப் செய்திகளை பகிர்ந்து வருகிறார்.

7. பெனடிக்ட் இவான்ஸ் (@BenedictEvans ) - தொடர் தொழில்முனைவோர் மற்றும் ஆண்டர்சன் ஹோரோவிட்ஸ் பங்குதாரர். தனது புரிதலை குறும்பதிவுகளாக பகிர்பவர். வரைபடங்கள், புள்ளிவிவரங்கள் அதிகம் இருக்கும்.

8. ஆரோன் லெவி ( @levie) - பாக்ஸ் நிறுவனரான ஆரோன் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் அப்டேட்களை வழங்கு வருகிறார்.

9. பிராட் பெல்ட் (@bfeld ) - பவுண்டரி குழுமத்தில் வி.சி. தொழில்நுட்பம் தொடர்பாக தகவல்களை பகிர்பவர்.

10. ஜேக் டோர்சி (@jack ) - ட்விட்டர் மற்றும் ஸ்கொயர் இணை நிறுவனரான டோர்சி, ஸ்டார்ட் அப்கள், சான்பிரான்சிஸ்கோ, மற்றும் சிலிக்கான பள்ளத்தாக்கு செய்திகளை பகிர்கிறார்.

11. மார்க் கியூபன் (@mcuban) - தொடர் தொழில்முனைவோரான மார்க், என்பிஏ டல்லாஸ் மேவரிக்ஸ் கூடை பந்து குழு உரிமையாளரும் கூட. இவரது குறும்பதிவுகளில் ஸ்டார்ட் அப் செய்திகளை காணலாம்.

12. பால் சிங் ( @paulsingh) - ஏஞ்சல் முதலீட்டாளரான பால்; ஸ்டார்ட் அப்கள், புதுமை முயற்சிகள் பற்றி பகிர்ந்து கொள்பவர்.

13. அனில் டாஷ் ( @anildash) - சமூக ஊடக அனல்டிக்ஸ் ஸ்டார்ட் அப்களான திங் அப் மற்றும் ஆக்டிவேட் நிறுவனரான அனில், நகைச்சுவையான குறும்பதிவுகளுக்காக அறியப்படுபவர்.

14. விவேக் வாத்வா (@wadhwa ) - தொழில்முனைவோராக இருந்த வாத்வா இப்போது பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்துகிறார். புதுமைகளை விரும்பும் வாத்வா அவற்றை பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்.

15. விநோத் கோஸ்லா (@hnshah ) - கோஸ்லா லேப்ஸ் நிறுவனர். தனது கருத்துக்களை குறும்பதிவுகளாக பகிர்கிறார்.

16. ஹிடென் ஷா (@hnshah ) - கலிப்போர்னியா தொழில்முனைவோர். இவரது குறும்பதிவுகள் சுவாரஸ்யமாக இருக்கும். ட்விட்டரில் தொடர்பு கொள்ளலாம்.

17. முகுந்த மோகன் (@mukund ) - மைக்ரோசாப்ட் வென்சர்ஸ் பொறுப்பாளர். ஸ்டார்ட் அப் உலகம் பற்றி நன்றாக அறிந்தவர்.

18. ஜீஷன் ஹயத் ( @Zishaan) - டாப்பர்.காம் (Toppr.com ) நிறுவனர். மும்பையை சேர்ந்த போவாய் லேக் வென்ச்சர்ஸ் நிதியாளர். ஸ்டார்ட் அப் சூழலை அறிந்தவர்.

19. ராஜன் ஆனந்தன் (@RajanAnandan ) - கூகுள் இந்தியா நிர்வாக இயக்குனர். முதலீட்டாளரும் கூட. ஸ்டார்ட் அப் கட்டுரைகளை பகிர்ந்து வருகிறார்.

20. நவல் ரவிகாந்த் (@naval ) - ஏஞ்சல் லிஸ்ட் நிறுவனர். தனது ஸ்டார்ட் அப் தளம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

21. ஆனந்த லூனியா (@anandlunia ) - இந்தியா குவாஷன்ட் நிதி நிறுவனர். ஸ்டார்ட் அப் தகவல்களை அறியலாம்.

22. ரேஹன் யார் கான் ( @rehanyarkhan) - ஓரியோஸ் வென்ச்சர் நிர்வாக பங்குதாரர். ஸ்டார்ட் அப் பற்றிய சுவையான தகவல்களை பகிர்கிறார்.

23. விஜய் ஆனந்த் (@vijayanands ) - சென்னையில் ஸ்டார்ட் அப் மையம் நடத்தி வருபவர். ஸ்டார்ட் அப் உலகம் பற்றி வெளிப்படையாக தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

ஸ்டார்ட் அப் செய்திகள் மற்றும் தகவலுக்கு பின் தொடரவும்:@YourStoryCo

ஆக்கம் : அபர்னா கோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

பெண்கள் தொடர வேண்டிய ஏழு ட்விட்டர் பக்கங்கள்!