ஒரு முதலீட்டாளராய் நான் கற்ற  3 முக்கிய படிப்பினைகள்!

0

ஸ்டார்ட்-அப் தொழில் தொடங்குவது ஆபத்தான செயலே ஆனால் அது வெற்றிகரமாய் அமைந்தால் அதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. ஸ்டார்ட் அப் தொழில் பொருளாதார ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் நமக்கு பலனளிக்கும் என்பது உண்மைதான் ஆனால் அதில் வெற்றிபெறுபவர் மிகவும் குறைவே. 

இந்தியாவில், ஸ்டார்ட்-அப் நிறுவனம் அதிகம் வர தொடங்கியுள்ளது. மேலும் இந்திய பொருளாதரத்திற்கு அதிக வலு சேர்க்கின்றது. அதனால் இந்தியாவில் ஸ்டார்ட்-அப் தொழிலில் ஈடுபடுவது சரியான சிந்தனை தான். எதோ ஒரு நேரத்தில் அனைவரும் தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறோம், அதில் இருந்து மீண்டு வர ஒரு சிறந்த வழிகாட்டி தேவை. அதேபோல்தான் ஸ்டார்ட்-அப் நிறுவனம் சரியான வழியில் செல்ல ஒரு சிறந்த வழிகாட்டி தேவை. ஒரு முதலீட்டாளராய், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டார்கள் இணைந்து வளர என்ன தேவை என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

சிறந்த குழுவே முறையான முதலீடு

இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மைதான், முதலீட்டார் ஒரு சிறந்த குழுவை உருவாக்கி அவர்களுக்கு வேலை செய்யும் சுதந்திரத்தை கொடுத்தால், வேலை அழுத்தத்திலும் அவர்களால் சிறந்த தயாரிப்பை கொடுக்க முடியும். அதனால், பல முதலீட்டாளர்கள் குழு மீது அதிகம் முதலீடு செய்கின்றனர். ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பல கடைசி நேரத்தில் பல மாற்றங்களை செய்வர், அதை உடனே ஏற்று அதற்கான மாற்றத்தோடு தங்கள் வேலையை உழியர்கள் அணுக வேண்டும். இதற்காகவே சிறந்த குழுவை அமைக்க வேண்டும்.

முதலீடு பணம் சமந்தப்பட்டது அல்ல வழிக்காட்டுதல் பொருத்தும் அமையும்.

“வழிகாட்டிகள் தங்கள் வழிகாட்டல், ஞானம் மற்றும் இணைப்புகள் மூலம் தொழில்முனைவோருக்கு ஒரு சிறந்த ஆயுதமாக அமைவர்,” 

என்று லார்ட்ஸ் மார்ட்டின் ரோஸா, ஒரு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் திறந்த ஆலோசகர் கூறியுள்ளார். இந்த கூற்று இப்பொழுது இருக்கும் தொழில் சூழலுக்கு மிகவும் ஏற்றதாகும். ஒரு தொழில் தொடங்க முதலீடு மற்றும் சிந்தனை எவ்வளவு முக்கியமோ அதே அளவு வழிகாட்டியும் முக்கியம்.

நிறுவனத்தின் தொடக்கத்திற்கு மட்டுமே வழிகாட்டிகள் தேவைப்படுவது இல்லை, நாளடைவில் ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக அவசியமாகும். வழிகாட்டுனர் தங்கள் பேச்சிலும், தீர்ப்பிலும் உண்மையாக இருக்க வேண்டும், அப்பொழுதே சிறந்த தீர்வை அந்நிறுவனம் காண முடியும்.

முதலீட்டாளருக்கும் நிறுவனர்களுக்கும் உள்ள உறவு மிகவும் முக்கியம்

முதலீட்டாளருக்கும் நிறுவனர்களுக்கும் இடையே நெடுங்கால உறவு ஏற்பட வேண்டும். ஏறக்குறைய கல்யாண பந்தம் போல நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இருவருக்கிடையே தேவை. இதில் ஒன்றை இழந்தால் கூட நீண்ட நாள் இந்த உறவு தொடருமா என்பது சந்தேகம் தான். முதலீட்டாளருக்கும் நிறுவனர்களுக்கும் இடையே ஏற்படும் புரிதல் தான் நிறுவனத்தை வெற்றியை நோக்கி எடுத்துச்செல்லும்.

இறுதியாக, முதலீடு செய்துள்ள நிறுவனம் சரியாக இயன்றால் மட்டுமே ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டின் நலன்களை பெற முடியும். எனவே முதலீட்டாளர்கள் தேவையான நேரத்தில் ஆதரவு மற்றும் வளங்களை நிறுவனதிற்கு வழங்க வேண்டும். இதுவே ஒரு நிறுவனம் தங்கு தடையின்றி நடக்க உதவும்