TechSparks 2018- யுவர்ஸ்டோரி’ன் 9வது பிரம்மாண்ட ஆண்டு விழா அறிவிப்பு! 

0

இந்த ஆண்டு ஸ்டார்ட்-அப் உலகில் பல நிகழ்வுகள் நடந்துள்ளது என்றே சொல்லலாம். முக்கியமாக ஃப்ளிப்கார்ட்-வால்மார்ட் டீல் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அடி எடுங்கள்... இஞ்சினை தொடங்குங்கள்... வேகமாக பறந்திடுங்கள்...

7.3 சதவீத ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் நீங்களும் பங்கெடுக்க தொடங்கிடுங்கள்.

யுவர்ஸ்டோரியின் 9-வது பிரம்மாண்ட வருடாந்திர விழாவான ‘டெக்ஸ்பார்க்ஸ் 2018’ தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்டார்ட்-அப்கள் மத்தியில் நீங்களும் ஒருவராக எங்கள் நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்.

இந்த ஆண்டு விழாவில் உலகெங்கும் உள்ள சிறந்த பேச்சாளர்கள், தங்கள் அனுபவங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதே இவ்விழாவின் சிறப்பம்சமாகும். இந்தியா மற்றும் உலக வெற்றிக்கதைகள் முதல் தோல்வி அனுபவங்கள் வரை, தாங்கள் சந்தித்த சவால்கள் என்று பலரது தொழில் பயணங்களை தெரிந்து கொள்ள வாருங்கள்.

’டெக்ஸ்பார்க்ஸ் 2018’ இந்தியா முழுதுமுள்ள தொழில்முனைவோர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் தொழிலதிபர்களை அழைத்து பிரம்மாண்டமாக கொண்டாடும் விழா ஆகும். 

Techsparks 2018

விழா தேதிகள்: 5 - 6 அக்டோபர் 2018

இடம்: தாஜ் யெஷ்வந்த்பூர், பெங்களுரு 

சிறப்பம்சங்கள்

கடந்த எட்டு ஆண்டுகளாக, டெக்ஸ்பார்க்ஸ் பல புதிய ஸ்டார்ட்-அப்’கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் புதுயுக தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பல வெற்றிக் கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்திய ஸ்டார்ட்-அப் உலகில் தாக்கத்தை ஏறப்டுத்தக்கூடிய நிறுவனர்களை கெளரவித்து, இந்த சமூகத்துக்கு வலுவை சேர்த்துள்ளது. கடந்த ஆண்டுகளில் 30 ஆயிரம் பங்கேற்பாளர்களை கண்டுள்ள டெக்ஸ்பார்க்ஸ், சுமார் 10 ஆயிரம் ஸ்டார்ட்-அப்’கள் கண்டுள்ளது. 

டெக்ஸ்பார்க்ஸ் உங்களுக்கு பரந்த அறிவையும், சில அத்தியாவசிய கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கவுள்ளது. முதலீடுகளை எங்கே, எப்படி பெறுவது, அதை வைத்துக்கொண்டு எப்படி தொழிலை விருத்தி செய்வது, தொழில்நுட்பம் கொண்டு எவ்வாறு முன்னேறவேண்டும் என்றெல்லாம் விளக்கவருகிறது இந்தாண்டு டெக்ஸ்பார்க்ஸ். 

கடந்த டெக்ஸ்பார்க்ஸ்’கள் பல பிரபலங்கள் அடங்கிய 500 சிறப்புப் பேச்சாளர்களை கொண்டிருந்தது. நிதி ஆயோக் சிஇஒ அமிதாப் கந்த், கிஷோர் பியானி, ஃப்ளிப்கார்ட் பின்னி பன்சல், ஓலா கேப்ஸ் பாவிஷ் அகர்வால், நந்தன் நிலகேனி போன்ற பலருடைய சிறப்பு உரையாடல்களும் இடம் பெற்றிருந்தது.

மேலும் இந்த ஆண்டு டெக்ஸ்பார்க்ஸ் 2018-ல் புதிய தயாரிப்பு லான்ச், விவாத மேடை, பாலிசி பற்றிய விவாதங்கள், மற்றும் அனுபவ பகிர்தல்கள் நடக்கவுள்ளது. 

Tech30 விண்ணப்பங்கள் வரவேற்பு

எல்லா ஆண்டையும் போல், இந்த டெக்ஸ்பார்க்சிலும் சிறந்த 30 தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் பெற வாய்ப்புள்ளது. விண்ணப்பித்தவர்களில் இருந்து சிறப்பான, வெற்றிகரமான தொழில் பயணம் கொண்டுள்ள நிறுவனங்கள் பட்டியலை யுவர்ஸ்டோரி வெளியிடும். கடந்த வருடங்களில் தேர்வான டெக்30 நிறுவனங்களில் பல இன்று பெரிய அளவு வளர்ச்சியடைந்து நிற்கின்றன. Little Eye Labs, Forus, Capillary, Freshdesk, Loginext, மற்றும் Niki.ai போன்றவை அதில் அடங்கும்.

கடந்த 8 ஆண்டுகளில் ‘டெக்30’ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டும் இதுவரை சுமார் 750 மில்லியன் டாலர் நிதியை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இனி ஏன் காத்திருக்கிறீர்கள். நீங்களும் ஒரு சிறந்த டெக் நிறுவனம் என்றால் உடனே ‘டெக்30’ல் இடம்பெற விண்ணப்பியுங்கள். 

டெக்30 விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது! உடனே பதிவு செய்யுங்கள்

TechSparks 2018 தளத்தை க்ளிக் செய்து TS18SEB என்ற ப்ரோமோ கோட் பயன்படுத்தி சிறப்பு தள்ளுபடி பெறுங்கள்.

டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வுக்கு ஸ்பான்சர் செய்ய, ஸ்டால் வசதியை பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: honey.bengani@yourstory.com | 9789826889

பல துறைகளைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அவர்களின் கதைகளை பகிர்ந்து, முதலீட்டாளர்கள் முன்னிலையில் பிட்ச் செய்து, தேவையான ஆலோசனை, வழிகாட்டுதலை பெறலாம். பல புதிய வாய்ப்புகளுக்கான கதவு திறக்க டெக்ஸ்பார்க்ஸ் வழி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. 

Related Stories

Stories by YS TEAM TAMIL