50 ஆயிரம் விவசாயிகள் பேரணியாகச் செல்ல ஊக்குவித்த விஜு கிருஷ்ணன்!

1

2018-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி 50,000 விவசாயிகள் பாதங்களில் காயங்களோடும் மனதில் நிறைவோடும் வீடு திரும்பியதை நாடே உற்று நோக்கியது. மும்பை வெயிலின் தாக்கம் இந்த விவசாயிகளின் மனநிலையை சற்றும் பாதிக்கவில்லை. 35,000-க்கும் அதிகமான விவசாயிகள் 200 கிலோமீட்டர் வரை ஆறு நாட்கள் பேரணியாகச் சென்றனர். மஹாராஷ்டிர அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்களைகளில் பலவற்றை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டதை அடுத்து இவர்கள் பேரணி முடிவடைந்தது.

சமூக ஊடகங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கையில், 44 வயதான ஜேஎன்யூ முன்னாள் தலைவர் இந்த வெற்றிக்கு பின்னணியில் செயல்பட்டுள்ளார்.

விஜூ கிருஷ்ணன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (JNUSU) முன்னாள் தலைவர் மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவராவார். தற்போது அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலாளராக இருக்கும் இவர் விவசாயிகளின் பிரச்சனைகளை மனதிற்கு நெருக்கமான ஒன்றாகப் பார்க்கிறார்.

மலபார் பகுதியில் முதன் முதலில் ஏற்பட்ட மிகப்பெரிய விவசாயிகள் எழுச்சி சம்பவங்கள் குறித்து கேட்டே அவர் வளர்ந்துள்ளார். விஜூ கண்ணூரின் கரிவெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அங்குதான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகளையும் எதிர்த்து விவசாயிகள் போராடினர். கிராமத்தில் கடும் பஞ்சம் நிலவியபோது நெல் கடத்தலில் ஈடுபட்ட பண்ணையார்களோடு சண்டையிட்டனர் என்று நியூஸ்18 தெரிவிக்கிறது.

கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த விஜூ, பெங்களூருவின் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையின் முதுகலைப் பிரிவில் பேராசிரியராக இருந்தார். அதன் பிறகு இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவரானார். முழு நேர ஆர்வலரான இவர் பாலியல் துன்புறுத்துல்களுக்கு எதிரான அமைப்பான GSCASH-ன் உறுப்பினராவார்.

விஜு நியூஸ்18 உடனான நேர்காணலில் தெரிவிக்கையில்,

”இது விவசாயப் பிரிவில் ஏற்பட்டு வரும் எழுச்சியாகும். இது கடந்த இரண்டாண்டுகளாக நடந்து வருகிறது. மஹாராஷ்டிரா மட்டுமல்லாமல் ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் இத்தகைய எழுச்சி நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பும் இதே போல் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் தற்போதைய போராட்டத்தில் 50,000 விவசாயிகள் ஒன்றிணைந்துள்ளனர்.”

கடந்த ஆண்டு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல், வன உரிமைச் சட்டம் 2006 நடைமுறைப்படுத்துதல், தொற்று காரணமாக பருத்தி பயிர்கள் சேதமானதால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தே விவசாயிகள் வீங்கிய கண்களுடனும், காயம்பட்ட பாதங்களுடனும் கிழிந்த ஆடைகளுடனும் பேரணியாகச் சென்றனர்.

மாநில அமைச்சர்கள் விவசாயிகள் தலைவர்களுடன் இணைந்து ஆசாத் மைதானத்தில் விவசாயிகள் கூடியிருந்த பேரணியில் தீர்மானத்தை வெளியிட்டனர். அதன் பிறகு AIKS தலைவர்கள் போராட்டம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவித்தனர்.

”பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற பழங்குடியினர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டோம்,” என்று பத்னாவிஸ் மும்பையில் தெரிவித்தார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL