தமிழக கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்ய அமெரிக்க பணியைத் துறந்த ஆராய்ச்சியாளர்!

0

தமிழகத்தின் பென்னகரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் உழைத்துக் கொண்டிருக்கும் டாக்டர் ஹரிநாத் காசிகணேசன் இயற்கை விவசாயத்தையும் பாரம்பரிய விவசாயத்தையும் வலுவாக ஆதரிக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த மருந்துகள் ஆராய்ச்சியாளர், லாபகரமான தனது பணியை விட்டுவிட்டு பாரம்பரிய விவசாயத்தில் ஈட்படுகிறார் என்பதே இவரது தனித்துமாகும்.

ஹரி அமெரிக்கா செல்வதற்கு முன்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். அந்த சமயத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுடன் பணியாற்றியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அவருக்கு பெரிதும் உந்துதலளித்துள்ளதாக கூறுகிறார்.

ஹரி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது இளம் வயதிலேயே அவரது அப்பா இறந்துபோன காரணத்தால் ஹரியின் அம்மா தனியே அவரை வளர்த்துள்ளார்.

ஹரி சென்னையில் முதுகலைப் பட்டம் படித்தார். அதன் பிறகு வேலூர் சிஎம்சியில் பேராசிரியராக பணியாற்றினார். 1993-ம் ஆண்டு Defence Institute of Physiology and Allied Sciences-ல் சீனியர் ரிசர்ச் ஃபெலோவாக DRDO-வில் இணைந்தார்.

அப்துல் கலாம் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஹரி ’தி லாஜிக்கல் இண்டியன்’ உடன் பகிர்ந்துகொள்கையில்,

”பலமுறை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாட வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்ட்டமாக கருதுகிறேன். பெருந்தன்மை நிறைந்த அவரது ஆளுமை பிரமிக்கவைக்கும் அளவில் எனக்கு உந்துதலளித்தது,” என்றார்.

2005-ம் ஆண்டு ஹரி அமெரிக்கா சென்று சார்ல்ஸ்டன், தெற்கு கலிஃபோர்னியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அடுத்த பத்தாண்டுகளில் இருதயவியல் துறையில் மருந்து ஆராய்ச்சியாளராக பனியாற்றினார். ஹரியின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது அவர் இந்தியா திரும்பினார். அவரது அம்மாவிற்கு தீவிர மூட்டுவாதம் மற்றும் ஸ்பாண்டிலைடிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது சிகிச்சைக்கு அதிக வீரியமுள்ள மருந்துகள் வழங்கபட்டது. இதனால் அவருக்கு வயிற்றுப்பகுதியில் கட்டி உருவானது.

”நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகிக்கொண்டே இருந்தது. நான் மருத்துவத் துறையிலேயே இருந்ததால் என்னுடைய சொந்த அம்மாவையே பராமரிக்கமுடியாமல் போனது வலியை ஏற்படுத்தியது. என்னுடைய பரிந்துரையின் பேரில் என் அம்மா தினமும் காலை கொதிக்கவைத்து தயாரிக்கப்பட்ட முருங்கை சாறு குடிக்கத் துவங்கினார். விரைவிலேயே முழுமையாக குணமடைந்தார்,” என்றார்.

இதனால் மற்றவர்களும் பயனடைவார்கள் என்பதால் பாரம்பரிய மூலிகை மருத்துவம் மற்றும் ஆர்கானிக் விவசாயம் குறித்து சிந்தித்தார். 

2015-ம் ஆண்டு தனது கிராமத்திற்குச் சென்று நிலம் வாங்கி பாரம்பரிய காய்கறிகளையும் மருத்துவ குணம் நிறைந்த செடிகளையும் வளர்த்தார். அவர் கூறுகையில்,

"தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, கருங்குருவை, வாசனை சீரா போன்ற அதிக பயன்பாட்டில் இல்லாத, அதே சமயம் மருத்துவ குணம் நிறைந்த அரிசி வகைகளைக் கண்டறிந்தார். இத்தகைய வகைகள் பண்டைய தமிழ் மருத்துவ முறையான சித்தா இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. என்னுடைய நிலத்தில் முருங்கை, கருவேப்பிலை, நெல்லி போன்றவற்றுடன் இந்த அரிசி வகைகளையும் பயிரிடத்துவங்கினேன்,” என்றார்.

பின்னர் அவர் ஆர்த்ரைடிஸ், நீரிழிவு நோய், ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க ’முருங்கை புல்லட்’ என்பதை அறிமுகப்படுத்தினார். விவசாய சந்தைக்கும் மற்ற கூட்டங்களுக்கும் சென்று ஆர்கானிக் விவசாயத்தின் நன்மைகளை ஹரி பகிர்ந்துகொண்டார். ’தி பெட்டர் இண்டியா’ உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

”விவசாயம் எனக்கு அறிவியல் போன்றது. அது ஒரு கலை; கலாச்சாரம். அது ’வாசுதேவ குடும்பம்’ என்பேன். அதாவது ’ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம்’ என்று பொருள்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL