மாணவர்களை வழிகாட்டும் ‘மெண்டர் இந்தியா’ திட்டம்- நிதி ஆயோக் வழிகாட்டிகளுக்கு அழைப்பு! 

நிதி ஆயோக், நாடு முழுதும் தலைவர்களை தேர்ந்தெடுத்து, அடல் இனொவேஷன் லேப்கள் மூலம் ‘மெண்டர் இந்தியா’ திட்டத்தை அமல்படுத்தி, மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளது.

1

’நிதி ஆயோக்’ (NITI Aayog) ‘மெண்டர் இந்தியா கேம்பெயின்’ Mentor India Campaign, என்ற வழிகாட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி, யுக்தியுள்ள நாடாக இந்தியாவை வளர்க்க முயன்று வருகிறது. இதற்கு மாணவர்களை வழிகாட்டி, முன்னெடுத்துச் செல்ல தகுதியான தலைவர்களை தேர்ந்தெடுத்து, 900 அடல் டிங்கரிங் லேப் மூலம் நாடு முழுதும் செயல்படவுள்ளது. ’அடல் இனொவேஷன் மிஷன்’ என்ற முயற்சியின் மூலம், நிதி ஆயோக் சிஇஒ அமிதாப் கந்த் இத்திட்டத்தை நாடு முழுதும் இன்று அறிமுகப்படுத்துகிறார். 

’மெண்டர் இந்தியா’, அடல் டிங்கரிங் லேபின் தாக்கத்தை அதிகரிக்க உதவும். இது கல்வித் துறையில் உலக அளவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தலைமைப் பண்புள்ள வல்லுனர்களைக் கொண்டு மாணவர்களை வழிநடத்தி, இந்த லேப் செயல்படும். இந்த லேப் விதிமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டது, இதிலுள்ள வழிகாட்டிகள் ஒரு ஆசிரியரை போலல்லாமல், வளர்ச்சிக்கு உதவுபவர்களாக இருப்பார்கள்.

நிதி ஆயோக், இத்திட்டத்திற்காக சிறந்த தலைவர்களை தேடி வருகிறது. வாரத்தில் இரண்டு மணி நேரம் இந்த லேபில் செலவிட்டு, மாணவர்களுக்கு வழிகாட்டி, கற்றலை செயல்முறையோடு போதித்து, அவர்களுக்குள் உள்ள திறனை வெளிக்கொண்டு வரவேண்டும். Atal Tinkering Labs குறிப்பாக ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க திறனை, புதிய ஐடியாக்களை வடிவமைக்க உதவிடும். மேலும் இந்த முயற்சிகள் இந்தியாவை மாற்றத்துக்கான பாதையில் இட்டுச்செல்லவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.  

இந்த லேப்; 3-டி ப்ரிண்டர்கள், ரோபோடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் மற்றும் சென்சர்கள் போன்ற நவீன வசதிகளுடன், இயங்கி மாணவர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கும் விதத்தில் தயாராக உள்ளது. 

நிதி ஆயோகின் அடல் இனோவேஷன் மிஷன் என்பது இந்திய அரசின் முக்கிய முன்னோடி திட்டமாகும். இது தொழில்முனைவு மற்றும் புத்தாக்க முயற்சிகளை நாட்டில் ஊக்குவிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஆகும். அடல் டிங்கரிங் லேப் வசதிகள் அமைத்ததும் இதன் முக்கிய பங்கு ஆகும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 900 லேப்களை தற்போது இந்தியா முழுவதும் நிறுவி, 2017-ம் ஆண்டிற்குள் 2000 லேப்களாக அதை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.