ஊட்டச்சத்து உணவு உங்கள் வீடு தேடி வரும்: 'டன்டுருஸ்ட்'

நிலையற்ற இந்த வாழ்க்கையை ஒருவர் ரசனை மிகுந்ததாக ஆக்கிக்கொள்ள ஆரோக்கியமான மனமும், உடலும் அவசியம் என புஷ்பேஷும், சுதான்சும் நம்புகிறார்கள்.

0

புஷ்பேஷ் தத் மற்றும் சுதான்சு சர்மா ஆகிய இரு உடற்பயிற்சி ஆர்வலர்களும் சேர்ந்து "டன்டுருஸ்ட்"(TANDURUST) என்ற நிறுவனத்தை 2014 டிசம்பர் மாதம் துவங்கினார்கள். பெங்களூரில் உள்ளவர்களுக்கு அளவான கலோரியும், ஊட்டச்சத்தும் நிறைந்த சத்தான உணவை இந்த நிறுவனம் மூலம் வழங்குகிறார்கள். நிலையற்ற இந்த வாழ்க்கையை ஒருவர் ரசனை மிகுந்ததாக ஆக்கிக்கொள்ள ஆரோக்கியமான மனமும், உடலும் அவசியம் என புஷ்பேஷும், சுதான்சுவும் நம்புகிறார்கள்.

இருவரும் சேர்ந்து சக பணியாளர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து பல சின்ன சின்ன தொழில்களை முயற்சித்த பிறகு உருவான ஒன்று தான் இந்த டன்டுருஸ்ட். இதற்கு முன்பு சுதான்சு, வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் இணை நிறுவனராக இருந்தார். அதற்கு முன்னர், எம்பசிஸ் என்ற நிறுவனத்தில் வியாபார ஆய்வாளராக பணியாற்றினார். புஷ்பேஷ் எச்எஸ்பிசி நிறுவனத்தில் பங்குச்சந்தை ஆய்வாளராக பணியாற்றினார்.

புஷ்பேஷ் தத் மற்றும் சுதன்சு சர்மா
புஷ்பேஷ் தத் மற்றும் சுதன்சு சர்மா

டன்டுருஸ்ட் மூலம் ஆரோக்கியமான காலை உணவு, மதிய உணவு மற்றும் தின்பண்டங்களை வழங்குகிறார்கள். புஷ்பேஷ் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் எண்ணிடலங்காத புது உணவுகளை உருவாக்கியிருக்கிறார்.

”வாழ்க்கைமுறையில், சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் அதிகபட்ச பலன் கிடைக்கிறது. நான் ஊட்டச்சத்து பற்றிய போதுமான அறிவை வளர்த்துக்கொண்டதன் மூலம் உடற்பயிற்சியோடு சரிவிகித உணவை எடுத்துக்கொண்டதன் விளைவாக கடந்த மூன்று மாதத்தில் மட்டும் பனிரெண்டு கிலோ எடை குறைந்திருக்கிறேன்” என்றார் புஷ்பேஷ்.

சுதான்சு மற்றும் புஷ்பேஷ் ஆகிய இருவரும் இந்த நிறுவனத்திற்காக தங்கள் சேமிப்பிலிருந்தும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலமாகவும் 13 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்.

தொடர்புகள் நீள்கிறது

டன்டுருஸ்ட் தன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் நான்கு வேளைக்கு ஆறு உணவுகளை வழங்குகிறது. இப்போது ஒரு நாளைக்கு 170லிருந்து 180 சாப்பாடுகள் வரை விநியோகிக்கிறார்கள். எச்எஸ்பிசி, கோல்ட்மேன் சாக்ஸ், சிஸ்கோ, நாராயணா ஹ்ருதயாலயா போன்ற பெருநிறுவனங்கள் உட்பட பலரும் இவர்களின் வாடிக்கையாளர்கள். எண்பது சதவீதத்தினர் ஒரு முறை வாங்கிவிட்டு அது பிடித்ததால் திரும்பவும் வாங்குபவர்கள்.

முதல் ஏழு மாதத்தில் மட்டும் பத்தாயிரம் ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக காலை உணவு, மதிய உணவு மற்றும் தின்பண்டங்கள் அடங்கிய வார மற்றும் மாத சந்தா முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சாப்பாடின் விலை 60ரூயிலிருந்து 120ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“ஒரு ஆரோக்கியமான உணவு என்பது ஆறு சரிவிகித சாப்பாட்டை உள்ளடக்கியது. இது உடலின் பரிணாம அளவை அதிகரிக்க உதவுகிறது. ஊட்டச்சத்து பற்றிய போதுமான அறிவில்லாமலும், ஊட்டச்சத்தான உணவு தட்டுப்பாட்டாலும், உணவு உட்கொள்ள போதுமான நேரமின்மையாலும் பலர் தங்கள் திட்ட உணவை(diet) வகுத்துக்கொள்ள தடையாக உள்ளது. இதற்காகவே மையபடுத்தப்பட்ட சமையல்கூடம் நடத்துகிறோம். அதன்மூலம் தரமான உணவை தடையற்ற முறையில் வழங்குகிறோம்” என்கிறார் சுதான்சு. அது மட்டுமல்லாமல் சில வணிகம் சார்ந்த ஊடகம் மூலமாக உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்களை அணுகியிருக்கிறார்கள். காரணம் டன்டுருஸ்ட் மூலமாக அவர்களின் உடல்கட்டுக்கோப்பு சார்ந்த தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியும் என்பதே.

இது மட்டுமல்லாமல் தங்கள் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவும், இணையதளம் மற்றும் சில நிகழ்ச்சிகள் மூலமாகவும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் அவசியம் பற்றிய தகவல்களை பரப்புகிறார்கள்.

”மக்கள் பீட்சா போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளுக்காக நிறைய செலவிடுகிறார்கள்.ஆனால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்காக இருபது ரூபாய் செலவிட கூட இரண்டுமுறைக்கு மேல் யோசிக்கிறார்கள். இது ஒன்றை தெளிவாக காட்டுகிறது, மிகக்குறைவான மக்களே ஆரோக்கியமான உணவு பழக்கம் சார்ந்து தொடர்ச்சியாக யோசிப்பவர்களாக இன்று இருக்கிறார்கள். தினமும் சாப்பாடோடு சிறிதளவு கூடுதலாக செலவிடுவதன் மூலமாக உடற்பருமன், சர்க்கரைநோய், இதயநோய் போன்றவற்றை தவிர்க்க முடிவதோடல்லாமல் எதிர்கால மருத்துவ செலவை கணிசமாக குறைக்க முடியும் என்பதை மக்களை உணர்ந்துகொள்ள வைக்க்கிறோம்” என்கிறார் புஷ்பேஷ்.

உணவுத்தொழில் துறை

2016ல் இந்தியாவின் உணவுத்துறையின் மதிப்பு 18லட்சம் கோடிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகவேலை செய்யும் இந்தியர்கள் சத்தான உணவுகளையே எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அந்த உணவு தங்கள் அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ வரவேண்டும் என விரும்புகிறார்கள். இந்த தேவை தான் இணையம் சார்ந்த உணவுத்தளங்களுக்கு வாய்ப்பாக அமைகிறது.

இருப்பினும் மையப்படுத்தப்பட்ட உணவுக்கூடத்தை அமைக்க அதிக செலவாகாது என்பதோடல்லாமல் உடனுக்குடன் ஆரோக்கியமான உணவை தயாரித்து விநியோகிக்கவும் முடியும். இந்த துறையில் இருக்கும் மிக முக்கியமான சவால், உணவுப்பொருட்கள் என்பது எளிதில் கெட்டுவிடக்கூடியது என்பதே. எனவே தயாரிக்கும் உணவுகளை மிக வேகமாக விநியோகிக்க வேண்டும். எனினும் இணைய உணவகங்கள் ஈகாமர்ஸ்க்கு ஈடாக குறைந்த விலையில் நிர்ணயம் செய்வது கடினமாக உள்ளது. எனவே மற்ற பெரிய ஹோட்டல்களுடன் ஒப்பிடும் போது இணைய வழி உணவகங்களுக்கு விநியோக செலவு மிக அதிகமாகிவிடுகிறது என்பது ஒரு பெரிய் பின்னடைவு.

அடுத்த கட்டம்

டன்டுருஸ்ட், பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் சில உணவுக்கூடங்களை துவங்க இருக்கிறார்கள். 2017ல் இரண்டு உணவுக்கூடங்கள் மற்றும் 2018ல் நான்கு என அவர்களின் வருங்கால திட்டப்பட்டியல் நீள்கிறது. அடுத்த பனிரெண்டு மாதத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் பொட்டலங்களாவது விநியோகிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள்.

"நாங்கள் வெளிப்படையான நிர்வாகத்தை கட்டமைக்கவே விரும்புகிறோம். இதன் மூலம் ஆரோக்கிய உணவு என்பது மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தையும், அழுத்தம் நீங்கிய சூழலையும் உருவாக்கி அதன் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வையும், தாக்கத்தையும் ஏற்படுத்த உதவும் என்கிறார் சுதான்சு.

இணையதள முகவரி: http://www.tandurust.co.in/