போக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு காணும் சென்னை ஐஐடி மாணவர்கள்! 

சென்னை ஐஐடி மாணவர்கள் மூவர், தானியங்கி கார்களில் இடம்பெறும் என கருதப்படும் அம்சங்களை, சாதாரண கார்களில் குறைந்த செலவில் கொண்டு வருவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். 

0

ஸ்டார்ட் அப் :டைனமூவ் (Dynamove)

நிறுவனர்: ரோஹன் ராவ், அபிஜித் குப்தா, ரஜத் ராவ்

நிறுவப்பட்ட ஆண்டு; 2017

இடம்: சென்னை

துறை: போக்குவரத்து, இயக்கம்

தீர்வு காணும் பிரச்சனை; டிரைவர்களுக்கான மேம்பட்ட உதவி அமைப்பை உருவாக்குவது

நிதி : சொந்தமாக திரட்டியது

ஹாஸ்டலில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களில், மூன்று பேர் குழு இணைந்து புதிதாக ஒன்றை துவக்க பொதுவான அம்சமாக எதை கருதக்கூடும். சென்னை ஐஐடியில் பிடெக் மற்றும் எம்.டெக் பயிலும் ரோஹன் ராவ், அபிஜித் குப்தா மற்றும் ரஜத் ராவை பொருத்தவரை அவர்களின் சொந்த ஊரான பெங்களூரு மற்றும் அதன் போக்குவரத்து பிரச்சனை இணைக்கும் அம்சமாக அமைந்தது.

இந்த மூவரும் 2017, புத்திசாலித்தனமான போக்குவரத்து அமைகளுக்கான ஒருங்கிணைந்த ஹார்ட்வேர் மேடையான டைனமூவ் நிறுவனத்தை துவக்கினர். பாதுகாப்பு, நம்பகத்தன்மையில் துவங்கி செயல்திறன் இன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு வரை வாகன பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பது தான் இந்த நோக்கம். .

துவங்கியது எப்படி?

“பெங்களூரு போக்குவரத்து பிரச்சனை மற்றும் இதில் சிக்கியிருக்கும் போது இதற்கான தீர்வு பற்றிய சிந்தனைகள் தான், இந்த திசையை நோக்கி தள்ளியது, இரண்டாம் ஆண்டில், சிக்னல் நேரம் மற்றும் உள்வரும் போக்குவரத்தை அடிப்படையாக கொண்டு சில பொருத்தமான தீர்வுகள் பற்றி யோசித்தோம். ஆனால், 2017 பிளிப்கார்ட் கிரிட்லாக் ஹேக்கத்தானினில் பங்கேற்கும் வரை இதன் நுட்பமான அம்சங்கள் பற்றி கவனம் செலுத்தவில்லை,”என்கிறார் அபிஜித்.

அதன் பிறகு மூவரும், பாடங்களை முடித்தபடி, இந்த ஐடியா குறித்து பகுதி நேரத்தில் கவனம் செலுத்தினர். பின்னர், இந்த ஐடியா அவர்களுக்கு பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டது. இந்த ஐடியாவுக்கு முழு செயல்வடிவம் கொடுக்க முற்பட்டனர். இப்போது இதில் முதன்மையாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

டைனமூவ் நிறுவனர்கள். 2019 ல் தங்களை பொருளை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். 
டைனமூவ் நிறுவனர்கள். 2019 ல் தங்களை பொருளை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். 

என்ன தீர்வு அளிக்கிறது?

2015 ஸ்டாடிஸ்டிகா அறிக்கை படி, உலகில் 100 கோடி வாகனங்களுக்கு மேல் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 25 மில்லியனுக்கு மேல் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு 10 சதவீதம் எனும் அளவில் வளர்ந்து வருகின்றன.

இந்த மூவரும் தானியங்கி கார்களில் இடம்பெறக்கூடியதாக கருதப்படும் அம்சங்கள், வழக்கமான வாகனங்களில், குறிப்பாக இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில், குறைந்து விலையில் கொண்டு வர விரும்புகின்றனர்.

“வாகன டிரைவர் முன் பொருத்தக்கூடிய, எளிதான மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்பு மூலம் இதை செய்ய விரும்புகிறோம். காமிரா, திரை மற்றும் இதர மின்னணு சாதனங்களுடன் பயனாளியின் செல்போனை கொண்டு உதவ நினைக்கிறோம்? என்கிறார் ரோஹன்.

ஹார்ட்வேர் கொண்டு இயங்கும் இந்த கம்ப்யூட்டர் மென்பொருள் அல்கோரிதம், மோதலுக்கான வாய்ப்பு, போக்குவரத்து நெரிசல், பாதை விலகல் உள்ளிட்டவற்றை கணிக்கும் திறன் கொண்டது என நிறுவனர்கள் கூறுகின்றனர்.

டிரைவர் தூக்க கலக்கத்தால் அவதிப்படுகிறாரா? என்பதை உடனடியாக கண்டறிந்து சொல்வது உள்ளிட்ட அம்சங்களை டைனமூவ் கொண்டிருக்கிறது. 
டிரைவர் தூக்க கலக்கத்தால் அவதிப்படுகிறாரா? என்பதை உடனடியாக கண்டறிந்து சொல்வது உள்ளிட்ட அம்சங்களை டைனமூவ் கொண்டிருக்கிறது. 

இந்த அமைப்பை கொண்டு, வாகனத்தில் நிலையை கண்காணித்து, அது தொடர்பாக எச்சரிக்கை குறிப்புகளை வழங்குவது மற்றும் அருகே உள்ள வாகனங்களுடன் தொடர்பு கொண்டு போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்த உதவும் தகவல்களையும் வழங்க நிறுவனர்கள் விரும்புகின்றனர்.

“வேறு விதமாக சொல்வது என்றால், ஆம்புலன்சில் உள்ள எங்கள் அமைப்புடன் தொடர்பு கொள்வது மூலம் போக்குவரத்து சிக்னல் தானாக பச்சையாக மாறும். மேலும் போக்குவரத்து தடை ஏற்படுவதற்கு முன்னரே மற்றொரு வாகனம் அதை எதிர்கொண்டதால், அது பற்றி கணித்து எச்சரிக்க முடியும். இந்தியாவில் அதிகம் காணப்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளை எதிர்கொள்ள இவை உதவும்,” என்கிறார் அபிஜித்.

பல் திறன்கள்

தெரியாத பாதையில் நுழைவது தவிர, தொழில்முனைவு பயணத்தில் பல சவால்களை ஒருவர் எதிர்கொள்ள வேண்டி வரும். 

“எந்த ஹார்ட்வேரையும் உருவாக்கு விநியோகிக்க தேவைப்படும் பலவகையான திறன்கள் தான் முக்கிய சவால். எங்கள் திட்டம் மிகவும் பரந்து விரிந்தது என்பதால், மைய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்திய படி அம்சங்களை இணைத்துக்கொண்டிருக்கிறோம்,” என்கிறார் அபிஜித்.

போக்குவரத்திற்கான முழு அளவிலான இயங்குதளத்தை உருவாக்க, ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க டைனமூம் விரும்புகிறது.

இந்த அமைப்பின் அம்சங்களில் ஒன்று, எதிரே உள்ள பொருளை உடனடியாக உணரும் தன்மையாகும். இதன் மூலம் காரின் முன் உள்ள பொருளை அறியலாம். 
இந்த அமைப்பின் அம்சங்களில் ஒன்று, எதிரே உள்ள பொருளை உடனடியாக உணரும் தன்மையாகும். இதன் மூலம் காரின் முன் உள்ள பொருளை அறியலாம். 

மாறுப்பட்ட அம்சங்கள்

ரோஹன் ஏ.ஐ, ரோபோடிக்ஸ் மற்றும் வயர்லெஸ் இணைப்பில் ஆர்வம் மற்றும் திறன் கொண்டுள்ளார். அபிஜித், செயல்பாடுகள் ஆய்வு, அல்கோரிதம் மற்றும் வர்த்தக பொருட்களில் ஆர்வம் கொண்டுள்ளார். ரஜத் ஹார்ட்வேர் அமைப்பில் திறன் கொண்டுள்ளார். எனவே இது போன்ற சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான மாறுபட்ட திறன்களை தாங்கள் பெற்றிருப்பதை மூவரும் உணர்ந்துள்ளனர்.

இந்த சேவைக்கான பல்வேறு அம்சங்களில் ஐஐடி- எம்மில் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுவை டைனமூவ் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்திய அரசின் 5-ஜி திட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் மின் பொறியியல் துறையின் பேராசிரியர் ராதாகிருணன் கந்தி இக்குழுவுக்கு வழிகாட்டி வருகிறார். ஐஐடிஎம்மின் பிரி இன்குபேட்டர் திட்ட்மான நிர்மானிலும் நிறுவனம் அங்கம் வகிக்கிறது. வழிகாட்டல் மற்றும் நிதியை அளித்துள்ளது.

உலகம் முழுவதும் இயக்கம் மற்றும் போக்குவரத்து பரப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல இருந்தாலும், இந்திய சந்தை மற்றும் வளரும் நாடுகள் மீது கவனம் செலுத்துபவை குறைவு. மொபைல் ஐ, ஹடே ஆகிய சர்வதேச ஸ்டார்ட் அப்கள் மற்றும் ஜைமே மற்றும் உருமி (Zyme and Uurmi ) போன்ற இந்திய ஸ்டார்ட் அப்களும் போட்டியாளர்களாக உள்ளன. இணைக்கப்பட்ட வாகன பிரிவில் ஜியோவும் செயல்பட்டு வருகிறது.

“எங்கள் ஹார்ட்வேர் சார்ந்த அணுகுமுறை தனித்துவம் வாய்ந்தது என நம்புகிறோம். இது குறைந்த செலவில் அதிக பிராசஸிங் திறனை அளிக்க உதவுகிறது. எளிதாக பொருத்தக்கூடிய மாடலில், அனைத்து போக்குவரத்து நிர்வாக அம்சங்களையும் ஒருங்கிணைக்க விரும்புகிறோம். இந்த பிரிவில் உள்ள மற்ற நிறுவனங்களிடம் இருந்து எங்களை வேறுபடுத்தும் அம்சமாக இது திகழ்கிறது,” என்கிறார் அபிஜித்.

இணையதளம் 

ஆங்கிலத்தில்: நேஹா ஜெயின் / தமிழில்;சைபர்சிம்மன்