'உங்களிடம் குழந்தைகளுக்கான இயற்கை சிகப்பழகு கிரீம் உள்ளதா?'

0

2012 ஆம் ஆண்டிற்கான இந்திய எப் எம் சி ஜி (FMCG) சந்தையின் மொத்த வருமானம் 36.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது 2015 ஆம் ஆண்டில் 47.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த சந்தையில், தனி பாதுகாப்பு பொருட்கள் (22 சதவீதம்) தலை முடி பராமரிப்பு பொருட்கள் (8 சதவீதம்) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பொருட்கள் (2 சதவீதம்) என மொத்ததமாக சுமார் 32 சதவீதம் இடம் பிடித்துள்ளனர். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக, இந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட் நிறுவனம் தனது மிக பிரபல பொருளான ஃ பேர் அண்ட் லௌலி (Fair & Lovely) யை கொண்டு தனி பாதுகாப்பு (Personal care) சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதன் பின் தான் கோத்ரேஜ் (Godrej), டாபர் (Dabur), இமாமி (Emami) போன்ற நிறுவனங்கள் வருகின்றன. அதிகமாக தயாரிக்கப்படும் ரசாயன மிகுதியானவையே தனி பாதுகாப்பிற்கான தீர்வு என நகர்ப்புறம் மற்றும் கிராமபுறத்தவரின் அடித்தளக் கோடாக இருக்கிறது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருட்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த சந்தையில், குளியல் பொருட்கள் தயாரிப்பவர்கள் முன்னேறுவது கடினமே. ஆனால், நல்ல சுகாதாரம் மிக்க, பாதுகாப்பான பொருட்களின் தேவை அதிகரிக்கும் போது, புதிய இயற்கை குளியல் பொருட்கள் சந்தையில் நுழைகின்றன. அதில் ஒன்று தான் "ரஸ்டிக் ஆர்ட்" (Rustic Art) நிறுவனம்.

2011 ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம், சதார நகரில் மாமியார் - மருமகளான சுவாதி மகேஸ்வரியும் சுனிதா ஜாஜு வும் இணைந்து சிறிய அளவிளாக சோப்புக்களை தயாரிக்க தொடங்கினர். சுவாதி கூறும் போது, " வீட்டில், நாங்கள் உபயோகிக்கும் எல்லா பொருட்களுக்கு பதிலாக மாற்று இயற்கை பொருட்களை உபயோகித்து வந்தோம். "இந்தியாவில் உள்ளவர்கள், ரின், சர்ப் மற்றும் ஏரியல் உபயோகிக்க தொடங்கியபோது, சுவாதி யும் அவர் குடும்பத்தினரும் தேங்காய் எண்ணையால் தயாரிக்கப்பட்ட இயற்கை சலவை சோப்பினையே உபயோகித்து வந்தார்கள்.

சுவாதி மகேஸ்வரி (இடது) மற்றும் சுனிதா ஜஜு, ரஸ்டிக் ஆர்ட்
சுவாதி மகேஸ்வரி (இடது) மற்றும் சுனிதா ஜஜு, ரஸ்டிக் ஆர்ட்

சுவாதி கூறுகையில், "ஒரு பொருளை தொடக்கத்திலிருந்து புதிதாக தயார் செய்வதற்கு மக்களிடம் நேரம் இல்லை. அவர்களுக்கு உடனடியாக உபயோகிக்க பொருட்கள் தேவை. மேலும் தனி பாதுகாப்பு சாதனங்கள் என்பது மக்கள் அன்றாடம் உபயோகிக்கப்படுகின்றவை ஆகும். அதனால் தான் ரஸ்டிக் ஆர்ட் டை தொடங்கினோம்". ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த பொருளுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை." இயற்கை பொருட்கள் என்றால், அது விலை உயர்ந்ததாக இருக்கும் என்பது மக்களின் எண்ணம். இப்படி தான் என மனதளவில் உறுதிபடுத்திவிட்டார்கள். அவ்வாறு இல்லை என்றால், இது ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேலை என கருதுகிறார்கள்" என்றுஅவர்களின் சந்தேகத்தினை நியாயப்படுத்துகிறார்கள். ரஸ்டிக் ஆர்ட் டின் மிகப் பிரபலமான பொருட்கள், அதன் ஆலே வெரா ஜெல்ஸ் (aloe vera gels) ஆகும். அலே வெராவை மொத்தமாக வாங்க, பகுதி நேர தயாரிப்பாளர்கள் ரஸ்டிக் ஆர்ட் டை தொடர்பு கொள்வார்கள். அவர் கூறும்போது, "எனக்கு, 20 கிலோ 'ஆலே வெரா தேவைக்காக அழைப்புகள் வரும். இவ்வளவு குறைவான அளவு கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு. அவர்கள் சொன்னது, "அட, சிறிது ஆலே வெரா வை சேர்ப்பதன் மூலம் நாங்கள் ஆலே வெரா ஜெல் என்று சொல்லிக்கொள்ள முடிகிறது” என்பார்கள்.

ரஸ்டிக் ஆர்ட் க்கு இரண்டாவது சவாலாக இருப்பது, வாடிக்கையாளர்களின் பழக்க வழக்கங்கள். அதிக அளவில் தயாரிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு உபயோகிக்க அதிக அளவினான அதாவது தரம் குறைந்த பொருட்கள் கொடுக்கப்படுகிறது. ஆக, ஒவ்வொரு மாதமும் குளியலறை பொருட்களை நாம் வாங்கவேண்டி உள்ளது. ஆனால், கைகளால் செய்யப்பட்ட பொருட்கள் இவ்வாறு அமைவதில்லை. அவை நீண்ட நாட்கள் உபயோகிக்க முடியாது. ஆனால் சுவாதி கூறுகிறார், "அவை ஒரு மாதத்திற்கு மேல் உபயோகிக்க முடியும். ஏனென்றால், அதனை சிறிதளவே உபயோகித்தால் போதும். ஆக இவை சிக்கனமானதாகவே விளங்குகிறது".

ரஸ்டிக் ஆர்ட் ஆர்கானிக் காஃபி சோப்பு , பருத்தி துணி பேக்கேஜிங்குடன்
ரஸ்டிக் ஆர்ட் ஆர்கானிக் காஃபி சோப்பு , பருத்தி துணி பேக்கேஜிங்குடன்

ரஸ்டிக் ஆர்ட் டின் சுற்றுச்சூழல் பற்றிய உணர்வு கொண்ட வாடிக்கையாளர்கள், மறு நிரப்பீடு எனும் ரீபில் முறையிலும் கிடைக்க சுவாதி மற்றும் சுனிதா விடம் தொடர்ந்து வலியுறித்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பாக்கிங் செய்ய 100 சதவிகிதம் மக்கும் பொருளையே உபயோகிப்பதில் உறுதியாக இருக்கும் சுவாதி, பாட்டில் சரியாக இருக்கும் பட்சத்தில், குப்பையை அதிகரிக்காமல், ஏன் ரீபில் வாங்கக்கூடாது என வாடிக்கையாளர்கள் வாதாடுகிறார்கள்.

தேவையை விட அதிக பொருட்களை உபயோகிக்க வேண்டும் என நினைக்கும் போது, குறைந்த பட்சம் அவர்கள் முடிவெடுப்பதற்கான தகவல்கள் தெரிந்திருக்கவேண்டும் என சுவாதி நம்புகிறார். "இது வினோதமானது, நாங்கள் புதிதாக பிறந்த குழந்தைகளுக்காக ஏராளமான பொருட்கள் வைத்திருக்கிறோம். உங்கள் குழந்தைக்கு உண்மையாகவே நல்லது செய்ய வேண்டுமாயின், லேபிலில் உள்ள மூலப் பொருட்களை பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்வதாகும்", என அவர் கூறுகிறார்.

கடந்த நான்கு ஆண்டுகள் ரஸ்டிக் ஆர்ட் டின் பெரும்பாலான வர்த்தகம் பெங்களுரு நகரில் இருந்தது. பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற நகரங்களிளும் கணிசமான விற்பனை காணப்பட்டது . பாண்டிச்சேரி யில் உள்ள கிராம பெண்களின் கை தொழிலை நம்பி இருப்பதால், தயாரிப்பு இயந்திரங்கள் கிடையாது. தமிழ்நாடு மற்றும் கேரளா வில் உள்ள சான்றிதழ் பெற்ற இயற்கை பண்ணைகளிலிருந்து மூலப் பொருட்கள் பெறப் படுகின்றன. விரிவாக்கம் என்பது ஒரு கடினமான வாய்ப்பாக உள்ளது. "எங்கள் மாத வருமானம் சுமார் 6 - 7 லட்சம் ரூபாயாகும். எங்களுக்கு தனி அங்காடி ஏதும் கிடையாது. நாங்கள் சில்லறை மற்றும் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்கிறோம்". இது ஒரு நிலையான தொழில் என்று அவர் கூறுகிறார். ஆனால் இதுவே அதன் பலவீனமும் ஆகும். "நாம் விருப்பப்பட்டாலும், ஒரு பெரிய பிராண்டாக ஆக்க முடியாது. கீழ்மட்டமே எங்கள் எல்லையாகும். அதிக தொழிற் சாலைகளை அமைப்பதே வளர்ச்சி அடைவதற்கான ஒரே வழி", என்கிறார் அவர்.

ஆர்கானிக் புளுபெரி பேபி வாஷ்
ஆர்கானிக் புளுபெரி பேபி வாஷ்

இயற்கை-தனிப் பாதுகாப்பு சந்தையில் கடுமையான விதிமுறைகள் இருந்தால், அது சிறப்பானதாக அமையும் என்று சுவாதி கருதுகிறார். இது பிராண்டுகளின் மீது நம்பகத்தன்மையை உண்டாக்கும். மேலும், போலி தயாரிப்பாளர்களை சந்தையிலிருந்து நீக்கும். இல்லையென்றால் இது இயற்கையானது என்பதை தக்கவைத்துக்கொள்ள வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கை பெருக்குவது கடினமானதாக இருக்கும். இதை நிரூபிக்க முத்திரை சீட்டு (label) தேவையில்லை. அவர் கூறுவதன் படி, அடுத்தக்கட்டமானது, சிறப்பான வாடிக்கையாளர் விழிப்புணர்வாகும். "பெரிய பிராண்டுகள், தீமை அளிக்கக் கூடிய பொருட்களை கிராமபுற சந்தையில் நுழைக்கும் போது அது வேதனை அளிப்பதாக உள்ளது. சதாரா அருகே உள்ள கிராமத்திலிருந்து பெண்கள் எங்களிடமிருந்து மக்கும் சலவை பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் . அதிக விலை கொடுத்து நல்ல பொருட்களை வாங்க கிராமப்புற மக்கள் தயாராக உள்ளனர். அவர்கள், நகர் புறத்தில் உள்ளவர்களை விட நன்றாகவே புரிந்து கொள்கின்றனர்.", என கூறுகிறார்.

ரஸ்டிக் ஆர்ட் டின் எதிர்காலம் குறித்து சுவாதி கூறுகையில், "தற்போது, இது எங்களுக்கு வேகமான வளர்ச்சி கட்டமாகும். இயற்கை பொருட்கள் மீது ஏராளமான மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எங்கள் பொருட்களை உயர்வாக கருதுகின்றனர். அவர்கள், இவை நல்ல பொருட்கள் என்றும் நம்பி வாங்கலாம் என கருதுகின்றனர். " உங்களிடம் குழந்தைகளுக்கான இயற்கை சிகப்பழகு கிரீம் உள்ளதா?" என்று எங்களிடம் கேட்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர். இது படிப்படியாகத்தான் மாறும், ஆனால் நல்ல மாற்றம் வரும் என்று நம்புகிறோம். மேலும், தாங்கள் என்ன உபயோகிக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழலுக்கும் தங்களுக்கும் எது அவசியம் என்ற தகவலறிந்து மக்கள் முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

Stories by Vishnu Ram