சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தங்கம் வென்று சாதனை!

0

சமீபத்தில் போர்சுகல் நாட்டின் லிஸ்பன் பகுதியில் நடைபெற்ற 49-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் ஐந்து இந்திய மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். 1998-ம் ஆண்டில் இருந்து இந்தியா முதல் முறையாக பதக்கத்தை வென்றுள்ளது.

லே ஜெயின் மற்றும் பவன் கோயல் (ராஜஸ்தான்), பாஸ்கர் குப்தா (மும்பை), சித்தார்த் திவாரி (கொல்கத்தா), குஜராத்ஹின் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த 17-வயதான நிஷாந்த் அபாங்கோ ஆகிய ஐந்து பேரும் இந்திய அணியைச் சேர்ந்த வெற்றியாளர்கள். இவர்கள் அனைவருமே 18 வயதிற்கும் குறைவானவர்கள். இந்த வெற்றியாளர்கள் உலகம் முழுவதும் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடர விரும்புவதாக ’தி லாஜிக்கல் இண்டியன்’ பதிவு தெரிவிக்கிறது.

சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கும் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் தீவிர செயல்முறைகளைக் கடந்தே இந்த குழுவைத் தேர்ந்தெடுத்தனர். இந்த மையம் மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்ததாகும்.

இந்த போட்டி இந்த ஆண்டு ஜூலை மாதம் 21 முதல் 28 வரை நடைபெற்றது. 86 நாடுகளைச் சேர்ந்த சுமார் 396 மாணவர்கள் இதில் பங்கேற்றனர். முதலிடத்தைப் பிடிக்க இந்தியாவும் சீனாவும் போட்டியிடுகையில் இந்தியா பதக்கத்தை வென்றது.

கோட்பாடு மற்றும் செய்முறை சார்ந்த தேர்வுகள் இந்த போட்டியில் இடம்பெற்றன. எனினும் இந்த ஆண்டின் கேள்விகள் புவி ஈர்ப்பு அலைகளை LIGO கண்டறிந்தது தொடர்பாகவும் லார்ஜ் ஹேட்ரன் கொலைடர் எனும் அட்லஸ் கருவி தொடர்பாகவும் கேட்கப்பட்டன.

போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஊடகங்களுக்கு HBCSE அறிவியல் அதிகாரி பிரவீன் பதக் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார். இந்த ஆண்டு இந்திய அணி சிறப்பாக பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா நான்கு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளி பதக்கத்தத்தையும் வென்றுள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA