இந்தியாவின் முதல் பெண் கடல் உலாவர் இஷிடா மால்வியா!

0

நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய மக்கள் தொகையில், நமக்கு ஒரே ஒரு பெண் கடல் உலாவர்தான் உள்ளார் என்று கூறினால் நம்ப முடிகிறதா ஆம் மும்பையைச் சேர்ந்த இஷிடா மால்வியாதான் அந்தப் பெண். கடல்மீது இஷிடா கொண்ட காதலால் இது சாத்தியமாகியிருக்கிறது. கடலின் அலைகள் போலவே அவரது குரலும் அழகாக மிகவும் நிதானமாகவே இருந்தது.

மும்பையை சேர்ந்த இஷிடா மால்வியா இயற்கையைத் தேடி வெளியே சுற்றும் பெண். ஒரிடத்தில் இருப்பதை இஷிடா மால்வியா விரும்பவில்லை. அவருக்கு கடலில் சாகசங்கள் புரிய வேண்டும் என்ற கனவு தோன்றியபோது, இந்திய கடல்களில் அலைகளின் சீற்றம் குறைவாக இருந்தது. இதனால் வெளிநாட்டிற்கு போய் பயிற்சி பெற்றார் இஷிடா. 2007 ஆம் ஆண்டு மும்பையிலிருந்து கர்நாடகவிற்கு மேல் படிப்புக்காக சென்றார் அங்கு அவரது இலக்குகளை அடைய வழிகள் பிறந்தது.

அங்குதான் அவரது காதலர் துஷாரை சந்திந்தார். காதல் அலைகளும் அவரது கனவுகளுடன் இணைந்து கொண்டது.

"என்னுடைய முதல் கடல் அலை சருக்கல் அனுபவம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. என்னை நோக்கி வந்த அலைகளை பார்த்து புன்னகையுடன் பயணித்துக் கரையை அடைந்தேன் ".

ஒரு படக்கில் இருவர்

இஷிடா இதழியலுக்கு படித்து கொண்டிருக்கும் போது துஷார் கட்டிடக்கலையில் பட்டபடிப்பை படித்து கொண்டிருந்தார் , "படகு வாங்க பெற்றோர்கள் அனுமதி தராதலால், நானும் துஷாரும் இணைந்து எங்களது பொருட்களை விற்று கடலில் சர்ஃப் செய்ய படகு ஒன்றை வாங்கினோம்", என்கிறார் இஷிடா.

வாழ்க்கை அன்றிலிருந்து சீராக இல்லை. நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம்.

________________________________________________________________________

தொடர்பு கட்டுரை:

இரண்டு குழந்தைகளின் தாயான 'பேஸ் ஜம்ப்பர்' அர்ச்சனா வானத்தை வசப்படுத்தும் ஆச்சர்யம்!

________________________________________________________________________

தொழில்முனைவு பயணம்

இஷிடா இரண்டாம் ஆண்டு கல்லூரியில் இருந்தபோது தொழில்முனைவு வாய்ப்பு அவரது கதைவைத் தட்டியது. நண்பர்கள், தெரிந்தவர்கள், வெளிநாட்டவர் என பலரும் அவரிடம் சர்ஃப்பிங் பயிற்சி பெற விருப்பம் தெரிவித்தனர். அப்போதே அவர் தன் துணையுடன் பயிற்சியாளராக மாறி வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். "தி ஷாகா சர்ஃப் க்ளப்" பிறந்தது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி அருகே கொடி பெங்கரே என்ற சிறிய கிராமத்தில் கடலருகே இந்த க்ளப் அமைக்கப்பட்டது. இடம், சூழல், அனுமதி, நிதி என பல சவால்களை சந்திக்க வேண்டி இருந்தாலும் மனம் தளராத இஷிடா எந்த காரணத்திற்காகவும் தன் கனவை விடவில்லை.

"நீங்கள் உங்களுக்கு தொடர்பில்லாத இடத்திலிருந்து வாழ்வை தொடங்கினால் அங்குள்ள மக்கள் மற்றும் சூழலுடன் ஒத்து போக வேண்டும் அதுவே வெற்றியை தரும் "என்கிறார் இஷிடா.

இஷிடாவின் கனவு நனவானது

2007 ஆம் ஆண்டு பல ஆண்களுக்கு மத்தியில் தனி ஒரு பெண்ணாக சர்ஃபிங் செய்யத் தொடங்கிய இஷிடா எதைக் கண்டும் அஞ்சவில்லை. பல பெண்கள், கடலில் நீந்துவதால் தோலின் நிறம் கருமையாக மாறுவதால் கடலில் சர்ஃப் செய்வதை விரும்ப மாட்டார்கள். ஆனாலும் நான் தனியாக என் பயனத்தைத் தொடர்தேன். என் முயற்சியில் பின்வாங்காமல் தொடர்ந்து பயணித்து என் இலக்கை அடைந்தேன், என்கிறார்.

இஷிடாவின் பயணத்தில் ஷாகா சர்ஃப் க்ளப்பின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் பெண் கடல் சர்ஃப்பர் ஆனார் இஷிடா. இந்தியா, அமெ ரிக்கா, ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா என எல்லா கடல்களிலும் பயணித்தார். ஷாகா சர்ஃப் மற்றும் ஆஸ்திரலியாவின் லைஃப் சேவிங் சோசைடியும் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு லைப் கார்ட் பயிற்சி அளித்து வருகிறது. இந்தியாவில் முதல் கடல் சர்ஃப்பராக மட்டுமில்லாது சமுக சேவகராகவும் மாறியுள்ளார் இஷிடா. இளம் பெண்களுக்கு அவர் கூறுவதெல்லாம்.

"நீங்கள் நீங்களாகவே இருங்கள். போலியைவிட நிஜத்துக்கே அதிக மதிப்பு உள்ளது. உலகின் முடிவில்லா எல்லைகளை நோக்கிச் செல்லுங்கள். அதை அடையமுடியாதவை என்ற காரணங்களை உதறித்தள்ளிவிட்டு, வெற்றியடைய முடியும் என்ற காரணிகளை நம்புங்கள்".

கனவை பின்வாங்காது தொடருங்கள் நிச்சயம் நீங்களும் இஷிடா ஆகலாம்.

இணையதள முகவரி: The Shaka Surf Club

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்கள் தொடர்பான கட்டுரைகள்:

வெறுங்கால்களில் ஓடும் பிந்துவின் மாரத்தான் மோகம்!

அலைகளின் கரங்களில் நீந்தும் பக்தி ஷர்மா