விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் தொழில்முனை நிறுவனங்களை ஊக்குவிக்கும் 'அக்ரிப்ரூனர்ஸ் 2016'

2

விவசாயிகளின் கடன் தொல்லை, வறட்சி, விளைச்சல் தவறல் போன்ற சிக்கல்களுக்கும், அதற்கு தீர்வு காண உதவும் தொழில்முனைவோர்களுக்கும் இருக்கும் இடைவெளியைத் தகர்க்க, 'தி மென்டார்ப்ரீனர்ஸ்' (The Mentorpreneurs) அமைப்பு, 'பை தி ஸ்டார்ட் அப்ஸ்' (By the Startups) நிறுவனத்துடன் இணைந்து "அக்ரிப்ரூனர்ஸ் 2016" 'Agripreneurs 2016' எனும் நிகழ்ச்சியை கோயம்பத்தூரில் ஜூன் 18ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளது. விளைச்சல் பலனின்றி வாடும் உழவர்களின் அவலநிலை மாற, இந்நிகழ்ச்சியின் மூலம் கூட்டுநிதி திரட்டி அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. 

விவசாயிகளின் நிலைமை

நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதே தற்போது எங்கும் ஒலிக்கும் செய்தியாகும். கடந்த ஐந்து வருடங்களில் மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக 2,016 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 2014ஆம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணப் பிரிவு (NCRB) கணக்கெடுப்பின்படி 5657 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஒடிசா, குஜராத், உத்திரப் பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களே அதிகளவில் இந்த பிரச்சனையைச் சந்திக்கின்றன. 

அரசின் விவசாய நலத்திட்டங்கள்

தமிழக அரசு தொடங்கியுள்ள 'உழவுத்தொழில் முன்னேற்ற திட்டங்கள்,' விவசாயிகளுக்கு விளைச்சல் உற்பத்தி அதிகரிக்க உதவியுள்ளது. அதுமட்டுமின்றி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலையில் விவசாய கல்லூரிகளும் மற்றும் திருச்சியில் தோட்டக்கலை படிப்பும் கூடிய மகளிருக்கான விவசாய கல்லூரியும் அரசால் நிறுவப்பட்டுள்ளது. உழவர்களுக்குக் கைக்கொடுக்கும் வகையில், வங்கிகள் மூலமாக பிரச்சனைகளிலிருந்து மீண்டு வர அரசு நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. இருப்பினும், அரசு திட்டங்களின் விநியோகம் உள்ளாட்சியைச் சார்ந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ரி ஸ்டார்ட்அப்ஸின் தீர்வு

பயிர் உற்பத்தி அதிகரிக்கத்தல், சிறந்த பயிர் செய்முறை மேற்கொள்ளுதல், விளைச்சல் தவறலைத் தவிர்த்தல், உணவு சேமிப்பு கிடங்கை நிர்வகித்தல், விவசாய விநியோகச் சங்கிலியில் வளர்ச்சியடைதல், விவசாய சாதனங்களின் உழவுக்கேற்ற வரவு பெறுதல் போன்றவற்றிக்கு விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களால் நல்ல தீர்வு காண முடியும். இந்த நற்செயல்களை ஊக்குவிக்கும் வகையில் 'தி மென்டார்ப்ரீனர்ஸ்', தனது சுற்றுச்சூழல் பங்குதாரர் 'பை தி ஸ்டார்ட் அப்ஸ்' உடன் இணைந்து நடத்தும் நிகழ்ச்சியே 'அக்ரிப்ரூனர்ஸ் 2016'.

அக்ரி ஐடியாகளுக்கு அழைப்பு

விவசாய தடைகளைத் தகர்க்கும் யோசனைகளைக் கொண்டுள்ள விவசாய தொழில் முனைவோர்களுக்கு, அக்ரிப்ரூனர்ஸ் 2016 அழைப்பு விடுத்துள்ளது. 'அக்ரிஸோகேஸ்' AgriShowcase எனும் தளத்தில், தங்களின் தொழில்நுட்பப் பொருட்களையும் அதன் செயல்பாடுகள் பற்றியும், பதிவு செய்துள்ள நிறுவனங்கள் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கலாம். பின்பு, 'அக்ரிபிச்' 'AgriPitch' எனும் நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்கள் மதிப்புமிக்க முதலீட்டாளர்கள் முன்பு விளக்கப்பட்டு, நிதி திரட்ட வழிவகிக்கும். பிறகு அவை முறையான வழியில், விடிவு தேடும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும். 

மேலும் அக்ரிப்ரூனர்ஸ் 2016' இல் விவசாயம் குறித்த கருத்தரங்குகள், விவாதமேடைகள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சியும் இடம்பெறும். 

தமிழ் யுவர்ஸ்டோரி இந்நிகழ்வின் ஆன்லைன் மீடியா பார்ட்டனராக உள்ளது.

கோயம்பத்தூரில் திருமலயாம்பாளையத்தில் உள்ள 'நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூட்' இல் வருகிற ஜூன் 18ஆம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அக்ரிப்ரூனர்ஸ் 2016 நடக்க இருக்கிறது.

இதில் பங்கு பெற விரும்பும் தொழில்முனைவோர்கள், பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் 

Stories by YS TEAM TAMIL