அறிவை அடித்தட்டு மக்களின் உடைமையாக்கும் முழக்கம்!

0

பெங்களூரைச் சேர்ந்த முப்பத்தொன்பது வயது வக்கீலான ஷாம்னட் பஷீர் சற்று வித்தியாசமானவர். அறிவைத் தமது சொத்தாக்கும் உரிமையைப் பெற அடித்தட்டு மக்களைச் சட்டரீதியாகப் பயிற்றுவிக்கிறார். அவரது முயற்சியால் துவக்கப்பட்டுள்ள IDIA (Increasing diversity by increase to legal education – 'பன்முகத் தன்மையை அதிகரிப்பதன் மூலமாக சட்டம் அறிவோரை அதிகரித்தல்') அமைப்பும், P.PIL (Promoting Public interest law – 'சட்டம் குறித்த பொது ஆர்வத்தை மேம்படுத்துதல்') என்ற அமைப்பும் அடித்தட்டு மக்கள் முடிந்தவரை சட்டக் கல்வி பயிலவும், சட்டத்தின் அதிகாரம் என்ன என்பதை சமூகத் தலைவர்கள் புரிந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து சட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பதற்குத் தேவையான உதவிகளை அளித்து அவர்களைத் தமது சமூகத்திற்காக வாதாடும் வழக்கறிஞர்களாக மாற்றும் பணியைச் செய்கிறது IDIA. மாணவர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படும் இந்த இயக்கம் பெரும்பாலான சட்டக் கல்லூரிகளில் பட்டம் மட்டுமே பயின்று வெளி வரும் மாணவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்குவதற்காகவும், புகழ் பெற்ற சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்காகவுமான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள், இந்தியாவின் நீள அகலங்கள் முழுதும் பயணித்து சட்டக் கல்வியில் மிகவும் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் காண்கின்றனர். அவ்வாறு தேர்வு செய்த குறிப்பிட்ட மாணவர்களுக்கு சட்டக் கல்வியில் தொடர் திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்து முன்னணி (பொதுச் சட்ட சேர்ப்பிற்கும், அகில இந்திய சட்ட நுழைவுச் சோதனை ஆகிய) சட்ட நுழைவுத் தேர்விற்குத் தயார்ப்படுத்துகின்றனர். இந்த வகையிலும் சமூகம் வலிமை பெற IDIA தொண்டர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். தற்போது பல முன்னணி சட்டக் கல்லூரிகளிலும் வசதியான பின்புலத்தைக் கொண்டவர்களே மாணவர்களாக இருக்கின்றனர். அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில் சட்டக் கல்வி பெறவும் பல தடைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இந்த செய்தியை இந்தியா அறிந்துகொள்ள வேண்டும். மிகச் சில ஆண்டுகளிலேயே மேல்தட்டினராவது உயர்ந்து வருகிறது. சட்டக் கல்லூரிகள் பன்முகத் தன்மை பெறவேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது IDIA’’ என்று தெரிவிக்கிறார் பேராசிரியர் பஷீர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக IDIA தொண்டர்கள் அளித்த பயிற்சியால் இன்று 40 தேர்ந்த வல்லுனர்களை இந்தியாவின் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க முடிந்துள்ளது. இதில் விவசாயிகள், கல் குவாரித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், இடைநிலை ஊழியர்கள் எனப் பல்வேறு பிரிவினரின் பிள்ளைகள் இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதிலும் இவர்கள் மேற்கு வங்கம், ஜார்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான், பிகார், மணிப்பூர், மிஜோரம் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது எங்களது தொண்டர்களின் உண்மையான உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும். இம்மாணவர்கள் சட்டம் பயில்வதற்குத் தேர்வு பெற்றதும் வழிகாட்டுதல் திட்டத்தின் படி அவர்களது கல்விச் செலவிற்கு ஸ்பான்சர்ஷிப் பெற்றுத் தருதல், கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஏற்பாடு செய்தல் போன்ற ஆதரவினை அளித்து அவர்களது திறமையை வெளிக்கொணர்கிறது எமது IDIA. அடித்தட்டு சமூகத்தில் இருந்து திறனாளர்களை உருவாக்கி தமது சமூகத்திற்காக அவர்களைத் துணை நிற்கச் செய்து அச்சமூகத்தை வலிமை மிக்கதாக மாற்றுவதே எங்களது முதன்மையான இலக்கு ஆகும்.

P-PIL என்பது மாணவர்களையும் வழக்கறிஞர்களையும் கொண்ட முறைசாராக் கூட்டமைப்பாகும். சமூகப் பொது நோக்கிற்காகப் பாடுபடும் அமைப்பாகும் இது. "சட்டக் கல்வி பயிலும் மாணவர்களை அதிகபட்சமாக சமூகப் பொது நலனில் ஈடுபடச் செய்து அதற்காக அவர்களை வாதிடச் செய்வதை நோக்கமாகக் கொண்டது. சட்டம் பயிலும் மாணவர்கள் சட்டம் பயில்வதுடன் மட்டுமில்லாமல் சமூகப் பொதுக் கோட்பாட்டினை கற்றுக் கொள்வதற்கான துவக்கநிலைப் பயிற்சியாகும் இது. எமது P-PIL இன் மற்றொரு முக்கியமான இலக்கு சாமான்ய மனிதர்கள் எளிதாகச் சட்ட உதவி பெறுவதற்கான சாத்தியங்களை மேம்படுத்துவது ஆகும்’’ என்று தெரிவித்தார் பஷீர்.

P-PIL நிர்வாகக் குழு சட்டத்துறை வளர்ச்சிக்கு உதவிகரமான பல்வேறு பொது நல வழக்குகளை கையில் எடுக்கிறது. வழி தவறிய கப்பலில் சென்ற பயணிகளைக் கண்டுபிடிக்கவும், அவர்களது குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தரவும் துணை நிற்கிறது. சர்வதேசப் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் விலை உயர்வான மேல்நிலைக் கல்விக்கான பாடப்புத்தகங்கள் கிடைக்கப்பெறுவது மிக முக்கியமான பிரச்சனையாக இருந்து வருவதை தங்களது அனுபவப் பாடமாக வெளிப்படுத்துகிறது CLAT எனும் துணை அமைப்பு.

பெங்களூர் சட்டப் பல்கலைக் கழகத்தில் தனது படிப்பை முடித்த பேராசியர் பஷீர், இந்தியாவின் முன்னணி சட்ட நிறுவனமான ஆனந்த் & ஆனந்த் இல் தன்னை இணைத்துக் கொண்டார். மேற்படி நிறுவனத்தை தொலைத் தொடர்பு மற்றும் தொலை நுட்பத் துறையிலும் முன்னணி சட்ட நிறுவனமாக்கும் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பிறகு தனது முதுநிலைப் பட்டத்திற்கான கல்வியை முடிக்க ஆக்ஸ்ஃபோர்டு சென்றார். அங்கு பிசிஎல், எம்ஃபில், டிஃபில் படிப்புகளை முடித்தார். சமீப காலம் வரை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகப் பேராசிரியராக நீதி அறிவியல் தேசியப் பல்கலைக் கழகத்தில் அறிவுச் சொத்து சட்டம் கற்பிக்கும் முதல் நிலைப் பேராசிரியராக இருந்தார். இந்திய அறிவுக் காப்புரிமை வலைத் தளத்திற்கும் ஸ்பைசி ஐபி அமைப்பிற்கும் நிறுவனராவார். இந்திய சட்டவியல் முறை வெளிப்படையான ஒன்றாக இருக்க வேண்டும் என்று குரலெழுப்பக் கூடியவராகவும் இருக்கிறார்.

"பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிற மனு வெளிப்படையானதாக இருக்க வேண்டும். காப்புரிமைத் தகவல் மதிப்புமை மிக்கதாக யாரும் பொதுவில் பெறத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதற்கான இயக்கத்தை ஸ்பைசி ஐபி மூலமாக நடத்தினேன். காப்புரிமைத் தகவல் இப்போது யாரும் பெறத்தக்கதாக வைக்கப்பட்டிருப்பதால் நாங்கள் மேற் கொண்ட இயக்கம் வெற்றிப்பெற்றது. ஸ்பைசி ஐபி வலைத் தளம் இந்தியாவிலும் சர்வ தேச அளவிலும் முன்னணி வலைத் தளமாக விளங்குகிறது. குறிப்பாகச் சொல்வதென்றால் அறிவுக் காப்புரிமையைப் பராமரிக்கும் உலகின் பிரபலமான ஆளுமைகள் 50 பேரை உள்ளடக்கி, 2014 ஆம் ஆண்டிற்கான உலகின் முதன்மைப் பத்திரிகையாக இருக்கிறது ஸ்பைசி ஐபி வலைத்தளம். (2011 ஆம் ஆண்டிலும் இதே தகுதியைப் பெற்றிருந்தது)

அறிவுக் காப்புரிமை ஆய்வில் தனித்துவமான பங்களிப்பு செய்தமைக்காக பஷீருக்கு இன்போசிஸ் 2014-15 ஆம் ஆண்டிற்கான மனிதத்துவ விருதை வழங்கியது. பேராசிரியர் அமர்த்தியா சென்னை உள்ளடக்கியது இந்தத் தேர்வுக் குழு. சட்டம், நீதி, சட்டக் கல்வி ஆகியவற்றை அனைவரும் அடைவதற்காக உழைத்ததற்காகவும் மேற்படி விருது பஷீருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகில் இயலாத மக்களுக்குக் காப்புரிமையில் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அதற்கான இயக்கம் நடத்தும் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து வாதிட்டு வருகிறார் பேரா.பஷீர். காப்புரிமை பெற்ற படைப்புகளை இன்னொரு வடிவத்திற்கு மாற்றுதல் மிகவும் சிக்கலான ஒன்றாகும். குறிப்பாக கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் அச்சுப் புத்தகங்களைப் பெறுவது இயலாத ஒன்றாக இருக்கிறது. 90% நூல்களை அவர்களால் பெற முடிவதில்லை.

காப்புரிமை சட்டமானது சாதாரண பொது மக்களும் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு எளிமையான மொழியில் எழுதப்பட வேண்டும் என்பதை தனது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் பஷீர். ‘இன்றைய உலகில் அறிவை முறைப்படுத்துவது முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்திய பீனல் கோட் சட்டத்தின் பலன்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறேன். அதைச் சாத்தியமாக்குவதற்கான வழக்கறிஞர்கள் வசதியற்ற பின்னணியில் இருந்து வரவேண்டும். அறிவுப் பொருளாதாரத்தில் அனைவரும் பங்கேற்பு செலுத்த வேண்டும்’’ என்கிறார் பஷீர்.

பஷீரின் தந்தை பள்ளி ஆசிரியர். இவர் திருவனந்தபுரத்தில் இருந்து 3 மணி நேரப் பயணத்தொலைவில் உள்ள குளத்துப் புழாவில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். பயணிப்பதில் விருப்பம் உடைய பஷீர் எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளார். "மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவதால் பலரது வாழ்க்கை வரலாற்றையும் படிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளேன். எனக்கு எப்போதும் பிடித்தமானது ‘லாரா ஹில்லர்பிரான்ட்’ எழுதிய ''ஆன் அமெரிக்கன் லெஜண்ட்’’ என்கிறார் ஷாம்னட் பஷீர். புத்திய இலக்கியங்கள் உட்பட ஆன்மீக தத்துவ நூல்களை வாசிப்பதிலும் விருப்பம் உள்ளவர். பஷீர் ஓர் விளையாட்டு ஆர்வலரும் கூட. தனது கல்லூரிக் காலத்தில் தொடர்ந்து கால்பந்து, ஹாக்கி விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளார். ஜென் புத்திசத் தீவிரப் பற்றாளரான பஷீர் திட்டமிடலில் நம்பிக்கை இல்லாதவர். "ஒருநாள் ஒரு நேரம் உன்னைத் திட்டமிடாத போக்கு ஒன்றினுள் மிகச் சரியாகப் பொருத்தி விடும்’’ என்று நிதானமாகக் கூறுகிறார் இந்த இளம் பேராசிரியர்.

ஆங்கிலத்தில்: பைசாலி முகர்ஜி | தமிழாக்கம்: போப்பு