'மாற்றமாய் இரு' - தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பாரதிராஜாவின் 'பீ எ சேஞ்ச்' 

2

பாரதிராஜா தங்கப்பாலம் - தொழில்முனைவோரின் கூட்டமைப்புகளில் பிரபலமான பெயரும், நபரும் கூட ! 2013-ல் தொழிலல் தொடங்கி, பல்வேறு தடைகளை சந்தித்து, இப்போது ஸ்திரமான மக்களுக்கான நிறுவனமாக 'பீ எ சேஞ்ச்' (BeAChange)-ஐ வடிவமைத்திருக்கிறார். தமிழ் யுவர்ஸ்டோரியின் சார்பாக நான் அவரிடம் பேசும் போது, அவருடைய துடிப்பையும், தெளிவையும் பார்த்து வியந்தேன்.

பீ எ சேஞ்ஜ் - எதனால் தொடங்கப்பட்டது?

பாரதிராஜா ஏற்கனவே ஊடக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சமுதாயத்திற்கும், வருங்கால தொழில் முனைவோர்களுக்கும் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழுந்தபோது, தன்னுடைய நண்பர்களுடன் கலந்துரையாடினார். அபோது எழுத்ததுதான் 'பீ எ சேஞ்ச்' என்னும் ஒரு யோசனை.

தொழில்முனைவோருக்கான கூட்டங்களுக்குச் சென்று, அங்கே தொழில்முனைவோர்கள் பொதுவாக சந்திக்கும் இன்னல்களை ஆராய்ந்து, அதற்கான விடைகளை சரியான குறிப்பேடுகளின் மூலம் தெரிவித்தார் பாரதிராஜா.

பீ எ சேஞ்ஜ் நிறுவனத்தின் நோக்கங்கள்

வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த தொழில்முனைவோர்களுக்கிடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கியமான நோக்கம். இதை தவிர அவர்கள் முன்நிறுத்தும் 6 முக்கிய அம்சங்கள்:

1. 2021 டிசம்பர் 25-ற்குள் இந்தியா முழுவதும் தொழில் முனைவோர்களை உருவாக்கி, 5,00,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

2. அறிவைப் பகிரும் அமைப்புகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்த வேண்டும்.

3. வறுமை நிலையிலிருந்து வரும் தொழில்முனைவோருக்கான பிரத்யேக தளத்தை உருவாக்க வேண்டும்.

4. வளர்ச்சிக்கான மாதிரி விடைகளை நாடு முழுவதும் அமைக்க வேண்டும்.

5. வளமான, இயற்கையான பொருட்களை உபயோகப்படுத்த தேவையான வாழ்வாதார நிலையை ஏற்படுத்த வேண்டும்.

6. தொழில் முனைவோரை உற்பத்தித் துறையில் சேர்க்க வேண்டும்.

இந்த அம்சங்களை அடைவதற்கான வேலைகளை ஒரு கூட்டாக இருந்து செயல்படுகின்றனர்.

பீ எ சேஞ்ஜ் நிறுவனத்தின் நிகழ்வுகள்

இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும், பயிற்சி வகுப்புகளும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

பாரதிராஜா இதை பற்றி கூறுவது,

"எங்களுடைய தனித்துவமே விலை உயர்ந்த பயிற்சி வகுப்புகளை, விலை இல்லாமல் வழங்குவது தான். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளின் மூலம் பயன்பெற்று, தொழிலுக்கான பயிற்சியாளரையும் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்".

மேலும், அவருடைய திட்டங்களைப் பற்றி விவரிக்கையில், அவரின் பேச்சில் வெற்றியைத் தொடும் இலக்கு தெரிய வந்தது.

பாரதிராஜா வேலும் கூறுகையில்,

"என் தொழில் மூலம், நான் மட்டும் பயனடைவதில் எனக்கு விருப்பமில்லை. என்னால் மற்றவர்களுக்கு உபயோகம் இருக்கிறது என்றால், அதுவே எனக்கான வெற்றி" என்றார்.

பெரும்பாலான நிகழ்வுகளைப் பாரதிராஜா, பங்கேற்பவர்களை ஆலோசித்து தான் வடிவமைக்கிறார். இதன் மூலம் அவரது கனவை நோக்கி பயணிப்பது நமக்கு தெரிகிறது. 

எதிர்கால திட்டங்கள்

"ஒருவர் பணத்தைக் கொடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் மட்டுமே தொழில் முனைவோர் ஆக முடியாது. இந்த காலத்தில், தொழில் முனைவோருக்குத் தேவையான அம்சங்கள் என்று பல இருக்கிறது. இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்", என்கிறார் பாரதிராஜா.

திட்டங்களைப் பற்றி சேசும்போது, பீ எ சேஞ்ச் சந்தாதாரர்கள் என்னும் புதிய சேவையின் மூலம் தொழில்முனைவோர்களையும், மக்களையும் எளிதில் இணைக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.

தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வை நிகழ்வுகளை கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்பவர்கள் மத்தியில் அவ்வப்போது நடத்தி தொழில்முனைவுச் சூழலை உருவாக்குவதில் தீவிரமாகச் செயபடும் பீ எ சேஞ்ச் அமைப்பு, தமிழக தொழில்முனைவோர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நிச்சயமாக இருந்து வருகிறது.

இணையதள முகவரி: BeAChange

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

கோவையில் இரண்டு தொழில்முனை நிறுவனங்களை திறம்பட நடத்திச் செல்லும் காயத்ரி ராஜேஷ்

ஸ்டார்ட் அப் உலகின் நம்பிக்கைமிகு ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் உருவாக்கியுள்ள 't-hub' மையம்


Stories by Sowmya Sankaran