சுதந்திர இந்தியாவில் தலித் என்கிற அடையாளத்தின் எழுச்சி- ஒரு பார்வை!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியது பின்தங்கிய வகுப்பினருக்கு ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக இருந்தது...

0

சுதந்திரப் போராட்டம் மற்றும் சுதந்திர இயக்கம் ஆகியவை பிரிட்டிஷ் மற்றும் காலனித்துவத்தை மட்டும் வெளியேற்றவில்லை, ’தீண்டாமை’ என்பது ஒழிவதற்கும் துவக்கப்புள்ளியாக இருந்தது. கடந்த எழுபது ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. இன்று தலித் சமூகத்தினர் பெருமிதத்துடன் வலம் வருகின்றனர்.

அவர்களது பிறப்புத் தகுதி அவர்களுக்கு இனி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அரசியல் தத்துவவாதி மற்றும் யுனைடட் கிங்டம், ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸின் லேபர் உறுப்பினரான லார்ட் பிக்கு பரேக் நினைவுகூறுகையில் இந்திய அரசியலமைப்பு பின்தங்கிய வகுப்பினருக்கு ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக இருந்தது என்றார்.

மனு ஸ்மிரிதி பீம் ஸ்மிரிதியாக மாறியது. தாழ்ந்த குலமான மஹர் சமூகத்தில் பிறந்த டாக்டர் பி ஆர் அம்பேத்கார் கௌரவமான உடையணிந்து கையில் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்துடம் காட்சியளிப்பது இதையே உணர்த்துகிறது. அவர்,

“உங்களது சுதந்திர சாசனத்தை உங்களுக்கு வழங்குகிறேன். குடியரசு உரிமையை உங்களுக்கு வழங்குகிறேன். அடுத்த நூறாண்டுகளுக்கான பாதையை நான் வகுத்துள்ளேன். அதுதான் நான் அளித்துள்ள அரசியலமைப்புச் சட்டம்." என்றார்.

சுதந்திர இந்தியாவில் தீண்டாமை

தீண்டத்தகாதவர்களைத் தொடுவது கூட பாவச்செயலாகவும் அவ்வாறு தொட்டுவிட்டால் உடனே குளிக்கவேண்டும் என்றும் கருதப்பட்டது. இன்று இந்தியாவின் ஜனாதிபதி ஒரு தலித் சமூகத்தினர். மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரே பிரதமர். இதுதான் 70 ஆண்டுகளில் நாடு சந்தித்த மாற்றமாகும்.

”இந்த கலாச்சர மாற்றத்திற்கு தலித் மக்கள் துணிச்சலாக தங்களது உரிமையை நிலைநாட்டுவதும் மற்றொரு புறம் உயர் சமூகத்தினரின் அணுகுமுறை நெகிழ்ச்சியாக மாறியதுமே காரணம். தீண்டாமை இன்றளவும் காணப்பட்டாலும் விரைவில் மறைந்துவிடும்,” என்று விவரித்தார் லார்ட் பரேக்.

தலித் மக்கள் அதிகாரத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர். அவர்கள் முடிவெடுத்து அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இந்த அதிகாரமளித்தல் சுய மரியாதை மற்றும் பெருமையை அளித்துள்ளது. அதன் காரணமாக உயர் குலத்தைச் சேர்ந்த தனிநபர்கள் பின்தங்கிய பிரிவினரை ஒடுக்கமுடியாது என்பது உறுதிபட தெளிவாகிறது.

நான் தலித் என்பதில் பெருமை கொள்கிறேன் என்கிற துணிச்சல் நம்பிக்கையளிப்பதாகவும் முக்கிய மாற்றமாகவும் காணப்படுகிறது. தங்களது உரிமையை நிலைநாட்டவேண்டும் என்கிற தலித் மக்களின் துணிச்சலானது அங்கீகரிக்கப்படவேண்டும். அனைத்து தலித் மக்களது கருத்துக்களை ஒன்றுபடுத்தி ஒரே மாதிரியான கருத்தாக வெளிப்படுத்தி முத்திரை குத்தும் தவறை இழைக்கக்கூடாது. உரிமையை நிலைநாட்டும் போராட்டமானது பன்முகத்துவத்தைக் கொண்டது என்றார்.

அதிகார அமைப்பில் மாற்றம்

எனினும் அதிகார அமைப்பில் மாற்றங்கள் இருப்பதால் எதிர்ப்பு மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கிறது. உயர் குலத்தவரான ஹிந்து சமூகத்தினர் மீது அதிகாரம் செலுத்தப்பட்டால் அவர்கள், “நான் ஒரு குஜராத்தி. என்னிடமே அதிகாரத்தை காட்டுகிறார்களா? நான் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் சொல்லவேண்டுமா?” என்று கேள்வியெழுப்புகின்றனர்.

சாதி, மதம், பாலினம் என்கிற பாகுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமையும் அதிகாரமும் அளிக்கப்படவேண்டும் என்பதையே இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அப்படியிருக்க அடக்குமுறையுடன்கூடிய வன்முறை என்பது சரியான தீர்வல்ல. தங்களை தற்காத்துக்கொள்ளும் நிலையிலும் பதற்றமாகவும் இருக்கும் பின்தங்கிய வகுப்பினர் மீது இன்றளவும் வன்முறை என்பது மிகவும் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டம் சமத்துவ இந்தியாவிற்கான அடித்தளத்தை அமைக்கிறது

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தது உலக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணம். ஏனெனில் அது தீண்டாமையை மட்டும் ஒழிக்கவில்லை அதை வடிவமைத்ததே ஒரு தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

கையில் அரசியலைப்புச் சட்டத்தின் ஒரு பிரதியை வைத்திருந்தபடி காட்சியளிக்கும் அம்பேத்கரின் சிலை என்னுடைய நினைவிலும் ஒவ்வொரு இந்தியனின் நினைவிலும் வரலாற்றின் ஒரு சிறப்பான தருணமாகவே பதிந்திருக்கும் என்கிறார் பத்மபூஷன் விருது பெற்றவர்.

மேலும் ஆதிதிராவிட வகுப்பு மற்றும் ஆதிதிராவிட பழங்குடியினர் திருத்தப்பட்ட சட்டம், 2015, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக ஹிந்து மதத்தினரின் வன்முறையை சமாளிக்க மிகப்பெரிய சக்தியாக இருந்தது. இந்த சட்டத்தின்படி நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவர் மீது அல்லாமல் குற்றம்சாட்டப்பட்டவர் மீது காணப்படும். இது குறித்து குறிப்பிட்ட அவர், 

“தலித் மக்கள் தங்கள் மீதான தாக்குதல்களுக்குக் காரணம் தங்களது சாதிதான் என்கிற நினைப்பே போதுமானதாகும். ஒரு தலித்தின் சுய தீர்மானமே இறுதியானது. இதுவே சிறப்பான விஷயம் என்று நான் கருதுகிறேன்.”

அரசியலமைப்புச் சட்டம் எண்ணம், நம்பிக்கை, சமத்துவம், நீதி ஆகியவற்றில் சுதந்திரத்தை ஆதரித்தால் போதுமானதாகக் கருதப்படாது. அத்துடன் மனிதனின் மரியாதை மற்றும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தவேண்டும். இதுவே தேசிய உணர்வை ஏற்படுத்தி அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவாக உருவெடுக்க உதவும்.

”பிற நாடுகளைப் போல அல்லாமல் முதலில் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அதன் பின்னரே அரசியலமைப்பின் கொள்கைகள் வடிவமைக்கப்படுகிறது. அம்பேத்கரின் எண்ணங்களைப் பின்பற்றி இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கொள்கைகளை ஒருங்கிணைப்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கெடியா