மாற்றுத் திறனாளிகளுக்கு பலனளிக்கும் பிரத்யேக வலைத்தளம் உருவாக்கிய இளைஞர்!

1

மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில், மாற்றுத் திறனாளிகளும் அதிகமாகவே காணப்படுகின்றனர். அதிலும், 2011-ஆம் ஆண்டின் சென்சஸ் படி இந்தியாவில் 2.1% மக்கள் மாற்றுத் திறனாளியாக இருக்கின்றனர். அதில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, வளர்ந்த நாட்டைக் காட்டிலும் மிகக் குறைவாகவே உள்ளது. படிப்பிலிருந்து வேலை வாய்ப்பு வரை தினமும் ஏதோ ஒரு சவாலை சந்தித்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இதில் இவர்களுக்கு மிகப் பெரிய சவாலாய் இருப்பது தங்களுக்கு ஏற்றவாறு அமையும் வேலைவாய்ப்பே. சில வருடங்களுக்கு முன் எந்த துணையும் இல்லாமல் தனியாக வாழ்கையை நடத்த முடியுமா என்பது அவர்களுக்கு கேள்விக் குறியாகவே இருந்தது. இப்போழுது அந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருகிறது.

ஊனமுற்றோருக்கு உதவும் பொருட்டு சதாசிவம் கண்ணுபையன் (மாற்றுத்திறனாளி) www.enabled.in என்னும் வலைதலத்தை 2009-ஆம் ஆண்டு உருவாக்கினார்.

சதாசிவம் கண்ணுபையன்
சதாசிவம் கண்ணுபையன்

சதாசிவம், சிறு வயதிலே போலியோவால் பாதிக்கப்பட்டவர், 

“பொருளோ அல்லது சேவையோ எதுவாயினும் எந்த பாகுப்பாடுமின்றி அனைவரையும் அடைய வேண்டும். அதற்காக தோன்றியதே இந்த வலைதளம் என்கிறார்." 

www.enabled.in மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு வலைதளம். இங்கு ஊனமுற்றவர்களுக்கான வேலைவாய்பு, கல்வித்திட்டம், அவர்களுக்கான நிகழ்வுகள், வெற்றிக் கதைகள், வொர்க்க்ஷாப்ஸ் பற்றிய தகவல், உதவிப் பொருட்கள், இன்னும் இது போன்று அவர்கள் படிப்புக்கும் மற்றும் வேலைக்கும் தேவையான பல விதமான தகவல்கள் தருகின்றனர்.

சதாசிவம் ஒரு  பட்டதாரி, அவர் தொழில்நுட்பத்தால் மக்களை இணைக்கே முடியும் என்றால், அதே தொழில்நுட்பத்தால் மாற்றத்தையும் ஏற்படுத்தலாம் என்கிறார்.

2015 ஆம் ஆண்டு “Best Accessible Website” பிரிவில் தேசிய விருது
2015 ஆம் ஆண்டு “Best Accessible Website” பிரிவில் தேசிய விருது

இந்த வலைதளத்தில், வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களின் வெற்றிக் கதையை பகிரவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் மற்றவர்கள் ஊக்கம் அடையவும், அவர்கள் சாதிக்கவும் உதவுகிறது. இதில் அரசு துறையினர், நிறுவனர்கள், பேச்சாளர்கள், கல்வியாளர்கள் என பல துறையில் சாதித்தவர்களின் கதைகள் உள்ளது.

இந்த வலைதளத்தின் முக்கியமான அம்சம் வேலைவாய்ப்பு தேடும் மாற்று திறனாளிகள் தங்களது protfolio-வை ஆடியோ-வீடியோ வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ பதிவு செய்யலாம்.

தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி அமைப்பு பல இருந்தாலும், enabled.in வலைதளம் மிக சிறப்பாக இயங்கிக் கொண்டு வருகிறது. தொடக்கத்தில் இருந்தே enabled.in குழு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

“இணையத்தளமே, மக்களை தொடர்பு கொள்ளும் ஒரு முக்கிய தளமாக இருக்கிறது. அது போலவே இணையத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கும் சமமான தகவல்கள் எந்த தடையும் இன்றி கிடைக்க வேண்டும்,” என்கிறார் சதாசிவம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்துடன் இந்த வலைத்தளத்தை உருவாகியதற்காக சதாசிவதிற்கு NCPEDP-Mphasis யுனிவர்சல் டிசைன் விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு “Best Accessible Website” பிரிவில் தேசிய விருதையும் சதாசிவம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.