’விசி’க்களின் பணியை விட தொழில்முனைவோரின் பணியே மிகவும் கடினமானது’- செகோயா கேப்பிடல் மோஹித் பட்னாகர்

0

ஸ்டார்ட்-அப் உலகமே முதலீடு, மதிப்பீடு, பிசினஸ் ஜாம்பவான்கள், வெளிநடப்பு என்று பல கதைகள் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மையில் ‘சிட்ரஸ் பே’ நிறுவனம் அவர்களது விசி முதலீட்டாளர்களான செகோயா கேப்பிடலில் இருந்து வெளிவந்திருப்பது பரப்பரப்பான செய்தி ஆனது. இது எப்படி நடந்தது? முதலீட்டாளர்களுடன் சமரசமாக பந்தத்தை எப்படி முறித்துக் கொள்வது போன்ற பல விஷயங்களை செகொயா காப்பிடல் இந்தியா’வின் நிர்வாக இயக்குனர் மோஹித் பட்னாகரும் சிட்ரஸ் பே நிறுவனர் ஜிதேந்திர குப்தா புது டெல்லியில் நடைப்பெற்ற யுவர்ஸ்டோரியின் ‘மொபைல் ஸ்பார்க்ஸ்’ விழாவில் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். 

யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா இவர்கள் இடையே கலந்துரையாடி கேள்விகள் மூலம் தொழில்முனைவோர்களின் சந்தேக கேள்விகளுக்கு பதில்களை பெற்றார். 

ஷ்ரத்தா ஷர்மா: ஒரு துணிகர முதலீட்டாளராக உங்களின் பணி கடினமாக உள்ளதா?

மோஹித் பட்னாகர்: விசி’க்களின் பணி சுலபமானது. தொழில்முனைவோர்களின் பணியே மிகவும் கடினமானது என்பேன். ஏனெனில் அவர்கள் தான் தங்களின் கடின உழைப்பை நிறுவனத்துக்கு செலுத்தவேண்டும். ஆனால் ஒரு சில துணிகர முதலீட்டாளர்கள் மட்டுமே தொழில்முனைவோரின் கஷ்ட, நஷ்ட என் இரண்டு காலங்களிலும் அவர்களுடன் பணிபுரிய விரும்புகின்றனர். 

ஷ்ரத்தா ஷரமா: துணிகர முதலீட்டாளரான நீங்கள், முதலீடு செய்த நிறுவனத்தில் இருந்து ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் எப்படி சுலபமாக அதேசமயம் சமரசத்துடன் வெளியே வருகிறீர்கள்? விளக்குங்களேன்?

மோஹித் பட்னாகர்: என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்-அப்’கள் பல இன்னமும் தொடக்கக் கட்டத்தில் தான் உள்ளனர். துணிகர முதலீடு பெற்று, நிறுவனத்தை வளர்ச்சி அடையச் செய்து, தேவையான உதவிகளை செய்து, பின் ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தை விட்டு வரவேண்டிய நேரம் வரும்போது அதை செய்வதே இயல்பு. ஆம் சிலமுறை சில நிறுவனங்களோடு ஆரம்ப கட்டத்தில் இருந்து கஷ்ட நஷ்டங்களை கடந்த எங்களின் பயணத்தை நினைக்கும்போது, வெளியே வரும்பொழுது கடினமாகவும் வருத்தமும் இருக்கும். ஆனால் இது ஸ்டார்ட்-அப் வாழ்வில் ஒரு சக்கரம். இதை செய்துதான் ஆகவேண்டும். 

ஜிதேந்திர குப்தா: ‘விசி’க்களை விட்டு வெளிவருவது பற்றி ரொம்ப யோசிக்கத்தேவை இல்லை என்பார் மோஹித். அது தானாக, முறையாக நடைபெறும். நாங்கள் எப்பொழுதும் உங்களுடன் இருப்போம் என்று நம்பிக்கை அளித்துள்ளார். 

இணைந்து பயணித்தல்

ஜிதேந்திரா தனது அனுபவத்தை பகிர்கையில், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்கள் இடையே நிலவும் உறவு அரிதானது என்றார். 

“ஒரு நிறுவனத்தை கட்டமைப்பது அவர்வர்களின் விருப்பத்தின் பேரில். முதலீட்டை பெற்று ஒரு பிரபலமான நிறுவனம் ஆகவேண்டுமா? அல்லது உங்களின் விருப்பத்துக்கான நிறுவனத்தை கட்டமைத்து பணிவாக செயல்படவேண்டுமா? எப்போழுது உங்களுக்கு ஒரு கூட்டாளி தேவைப்படுகிறார்? எப்பொழுது நீங்கள் தனியாக நிறுவனத்தை நடத்த விரும்புகிறீர்கள்? இதை எல்லாம் தொழில்முனைவோர் ஆராய்ந்து விடை காணவேண்டும். 

ஸ்டார்ட்-அப் சூழலில், ஒரு நிறுவனம் வாங்கப்பட்டாலும், வாங்கப்படாவிட்டாலும் அது செய்தி ஆகிவிடுகிறது. உங்கள் நிறுவனத்துக்கு பல கோரிக்கைகள் வரும்போது சரியான ஒன்றை தேர்வு செய்யுங்கள். தங்கள் இருவரின் உறவை பற்றி பேசிய ஜிதேந்திரா,

“எங்களுக்கும் செகொயாவிற்கும் இருந்த உறவு இயற்கையாக உருவானது. ஒரு நாள் வெளியில் வந்துவிடுவோம் என்பதற்காக கட்டமைத்ததல்ல. பல சந்திப்புகள், புரிதல், தொழிலுள்ள போட்டிகள் பற்றியெல்லாம் விவாதித்துக் கொண்டே இருந்தோம். அப்போது ஒரு நாள் திடீரென தோன்றியதே வெளிவரும் முடிவு. மோஹித் இந்த சந்திப்பில் வந்தபோது சரியான தீர்வு வரத்தொடங்கியது,” என்றார். 

ஷ்ரத்தா ஷர்மா: இது போன்ற புரிதலுக்கென்று எதாவது குறிப்பிட்ட ரெசிபி இருக்கிறதா?

மோஹித் பட்னாகர்: இதற்கான தனி ரெசிபி எல்லாம் இல்லை ஆனால் ஒவ்வொரு தொழில்முனைவோரின் பயணத்திலும் வெற்றி, தோல்வி இருக்கும். உங்களது நண்பன் யார், பகைவன் யார் என்று நீங்கள் அறியவேண்டும். ஒரு நிறுவனம் முதலீட்டாளரை விட்டு வெளியேற நினைக்க இதுதான் சரியான நேரம் என்று எதுவும் இல்லை. ஆனால் இந்த எண்ணம் ஒரு தொழில்முனைவருக்கு சவாலான ஒரு கட்டம். உங்கள் தொழில் இருக்கும் இடத்தை சரியாக கணித்து. சுற்றியுள்ள சூழலை நன்கு ஆராய்ந்து, காரணங்களை விவாதித்த பின் முடிவை எடுக்கவேண்டும். 

ஷ்ரத்தா ஷர்மா: ஏன் எல்லாரும் தங்களுக்கு முதலீடு கிடைக்கவில்லை என்று ஏங்குகின்றனர்?

ஜிதேந்திரா: முதலீடு பெறுவது ஒரு உறவை வளர்ப்பதுக்கு சமம். ஒரு நிறுவனம் தங்களைப் பற்றி பிட்ஸ் செய்வது தனிநபர்களிடம், நிறுவனத்திடம் இல்லை. இதில் இருவருக்கும் ஏற்படும் உறவு, சகஜ நிலை இவையெல்லாம் முக்கியமாகிறது. சில சமயம் நல்ல தொடர்பு ஏற்பட்டுவிடும், சிலமுறை அமையாமலும் போகும். 

கட்டுரை: யுவர்ஸ்டோரி குழு