பலவித அத்தியாவசிய சேவைகளை வீட்டு வாசலில் குறைந்த விலையில் அளிக்கும் ’HouseJoy’

1

இந்த கட்டுரையை Vodafone வர்த்தக சேவைக ஸ்பான்ஸர் செய்துள்ளது

இன்று நாம் வாழும் ஸ்மார்ட்போன் காலத்தில் நமக்குத் தேவையான அனைத்தும் நம் விரல் அசைவில் கிடைக்கிறது. போனில் ஸ்க்ரோல் செய்தே நமக்கு தேவையான, துணி, சாப்பாடு, என அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்கிறோம். பொருட்கள் மட்டுமல்லாமல் அலங்கரித்து கொள்ளுதல், முடி திருத்தம் செய்வது போன்ற சேவைகளையும் பெறுகிறோம்.

இ-காமர்ஸ் அதிகம் வளர்ச்சி அடைய ஆகஸ்ட் 2014-ல் ’Housejoy’ ஸ்டார்ட்-அப் ஆன்லைன் சேவையாக தொடங்கப்பட்டது. அதாவது தொழில்நுட்ப உதவியோடு மக்களுக்கு வீட்டிலயே அவர்கள் விரும்பும் சேவையை சிறப்பாக கொண்டு சேர்ப்பதே ஹவுஸ் ஜாய்-ன் நோக்கம். பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னை போன்ற பெரும் நகரங்களில் ஹவுஸ் ஜாய் சேவை உள்ளது. 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஹவுஸ் ஜாயில் உள்ளனர். ஹவுஸ் ஜாய் 15 சேவைகளை வழங்குகிறது, இதுவரை இவர்கள் 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்துள்ளனர். மேலும் 10,000 க்கு மேற்பட்ட சிறந்த வல்லுனர்கள் ஹவுஸ் ஜாயுடன் இணைந்துள்ளனர்.

ஹவுஸ் ஜாய் இந்த இடத்தை அடைய பல மேடு பள்ளங்களை சந்தித்துள்ளனர். UrbanClap, Stayglad மற்றும் AtHomeDiva போன்ற இ-காமர்ஸ் நிறுவனம் ஏற்கனவே சந்தையில் ஒரு இடத்தை பிடிக்க, தங்களுக்கு என ஒரு இடத்தை பிடிப்பது ஹவுஸ் ஜாய்க்கு சாவலாகவே இருந்தது.

எதிர்பார்ப்பை சந்திக்க புதுமுறை முயற்சி

“எங்களது மிக முக்கியமான தொழிநுட்ப முதலீடு - வாடிக்கையாளர் மற்றும் சேவை பங்குதாரரை பொருத்தும் வழிமுறை ஆகும். வாடிக்கையாளர் இடம், தேவையான சேவை சேவை வழங்குனரின் திறன், தொகுப்பு, இடம், மதிப்பீடுகள் போன்றவற்றை ஏற்று சரியாக பொருத்துவதே மிக முக்கியமாய் இருந்தது. அதை தவிர்த்து, ஆங்கிலம் அல்லாமல் மற்ற இந்திய மொழிகளிலும் எங்கள் ஆப்-ஐ டிசைன் செய்துள்ளோம்" 

மொழி எங்கள் சேவையை பயன்படுத்த தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி என்கிறார் கிருஷ்ணா மோகன் காடி. ஏ.வி.பி., தயாரிப்பு & தொழில்நுட்பம், ஹவுஸ்ஜாய்.

மேலும் ஹவுஸ்ஜாய் webapp உருவாக்கவும், ஆன்லைன் சாட் மற்றும் voice சாட் போன்ற வசதிகளை மொபைல் ஆப்-ல் கொண்டு வர உள்ளது. வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேலும் எளிதாக்கவே இந்த புது இணைப்புகள்.

ஆனால் இது வாடிக்கையாளர்கள் சமந்தப்பட்டது மட்டும் அல்ல, சேவை அளிப்பவர்களுக்கு பயனளிக்கும் முறையில் பல புதுமைகளை ஹவுஸ்ஜாய் வல்லுனர்கள் கொண்டு வந்துள்ளனர். அதாவது HJ expert என்கிற சேவை பங்காளர்களுக்கான Android ஆப்.

“இந்த ஒரு வருடத்தில் நாங்கள் கற்ற அனுபவமே HJ எக்ஸ்பெர்ட் ஆப் உருவாக்க உதவியுள்ளது. உதரணத்திற்க்கு, நாங்கள் டேட்டா பயன்பாட்டை குறைத்துள்ளோம், அதனால் எங்கள் ஆப் 2ஜி-யிலும் நன்றாக வேலை செய்யும். அடிப்படை ஸ்மார்ட்போனில் கூட எங்கள் ஆப் வேலை செய்யும், அதனால் அது பயன்பாட்டுக்கு உகந்ததாகும்,” என்கிறார் கிருஷ்ணா.

பெரியதாய் எண்ணுங்கள்!

ஆகஸ்ட் 2016-ல் ஹவுஸ்ஜாய் Geo தொழில்நுட்பத்தை தன் ஆப் உடன் இணைத்தது. இதன் மூலம் தங்கள் சுற்று வட்டாரத்தில் வாடிகையாளர்கள் தங்கள் சேவை பங்குதாரர்களை தேடி கொள்ளலாம்.

“தொழில்நுட்ப, புதிய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வது அவசியம். இணையதளம் மற்றும் ஆப்-ஐ புதிப்பிப்பது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை சுலபமாக்கும்,” என்கிறார் கிருஷ்ணா.

இதற்கு, எல்லா நகரங்களை குறிப்பிட்ட மையமாக பிரித்து, அதற்கு ஏற்றவாறு தங்கள் சேவைகளை map செய்துள்ளனர். அதாவது வேலை நேரம் மற்றும் முகவரி அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் சேவை விரைவில் அவர்களை அடைய உதவும் என்கிறார்.

“இவ்வாறு பிரிக்கப்பட்டதால் இந்த 5 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவையை 1 மணி நேரத்தில் பூர்த்தி செய்ய முடிகிறது. ஒரு நேரத்தில் பல இடங்களில் இதை செய்ய முடிகிறது. வருங்காலத்தில் இந்த நேரத்தை இன்னும் குறைக்க முயல்கிறோம்,” என்கிறார்.

நெட்வொர்க் மற்றும் இயக்கம்

இது போன்ற சேவை நிறுவனங்களுக்கு தொழில்நுட்பமே முதுகு எலும்பாக செயல்படுகிறது. சரியான நேரத்தில் வாடிகயாளர்களுக்கு தேவையான சேவை பங்குதாரர் இணைப்பதே மிக முக்கியமான ஒன்றாகும். நேரம், காலம், தேதி, தேவையான சேவை பொருட்டு அதற்கேற்ற அந்த சுற்றுபுறத்தில் இருக்கும் சிறந்த மதிப்பீடு பெற்ற சேவை பங்குதாரர்களை இணைக்க வேண்டும்.

ஒரு முக்கியமான அம்சத்தில் ஹவுஸ் ஜாய் தன் கவனத்தை செலுத்துகிறது, அதாவது பயண நேரத்தை குறைக்க பாதை தேர்வுமுறையை முறையாகச் செய்கிறது. பயணத்தில் செலவை குறைத்து வேரிடத்தில் அதிகபட்ச பயன்பாட்டை அளிக்க உதவுகிறது.

“எங்கள் ஆப்-ல் சேவையாளர்களின் வரவை வாடிக்கையாளர்களால் ட்ராக் செய்து கொள்ள முடியும். அவர்கள் வாடிக்கையாளர்கள் வீட்டை அடையே எதோ ஒரு வகையில் தாமதமானால் அது உடனே ஆப்-ல் அப்டேட் செய்யப்படும்,” என்கிறார் கிருஷ்ணா.

எதிர்கால வரைப்படம்

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி படிப்படியாகவே இருக்கும் என ஹவுஸ்ஜாய் நம்புகிறது.

“கடந்த வருடம் நகரங்களை மையமாக பிரித்தோம், இந்த வருடம் மையங்களை இன்னும் சிறியதாக பிரிக்க உள்ளோம் இதன் மூலம் சிறந்த சேவைகளை எங்களால் வீட்டிற்கு அளிக்க முடியும். இந்த நுண்ணிய அலகுகளின்படி அதனுடன் சப்ளைகளை எங்களால் வடிவமைக்க முடியும்.”

மேலும் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி உள்ளதால் பணமில்லாமல் ஆன்லைன் மூலமே பணம் செலுத்தலாம்.

“மேலும் எங்கள் ஆப்பை நெட்வொர்க் இல்லாமல் offline-ல் பயன் படுத்த முயற்சி செய்து வருகிறோம். இதன் மூலம் நெட்வொர்க் இல்லா இடத்திலும் மற்றும் பேட்டரி குறைந்தாலும் பயன்படுத்தலாம்.”

வோடபோன் வர்த்தக சேவைகள் ஹவுஸ்ஜாய் போன்ற நிறுவனங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?

தேவை மீது இயக்கம்

• செயலாக்க முன்னேற்றம், வலுவான நெட்வொர்க் மற்றும் சரியான சேவை வழங்குதல் ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட மொபைலிட்டி தீர்வு வழங்குகிறது.

• ஆன்லைன் ஆர்டரை செயலாக்குவது எளிதானது மேலும் தனியாக்கப்படுவது மூலம் இது சிக்கனமாக அமையும்

• ஒரு நிலையான இயக்குனராக வோடபோன் நகரம் முழுவதும் ஹவுஸ்ஜாய் தேவைகளுக்கு ஏற்ப ஒரு தீர்வை வழங்க முடியும்

• இந்த தொழில்நுட்பம் நிறுவனத்தின் பிராண்ட் பிம்பத்தை வலுப்படுத்துவதோடு வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்

M-Pesa மூலம் எளிதான கட்டணம்

• வோடபோன் இன் M-Pesa மூலம் எளிமையான, திறமையான மற்றும் வசதியான முறையில் பண வசூலிக்க முடியும்.

• வணிகங்கள் பாதுகாப்பான மற்றும் உடனடி நடவடிக்கைகளை உறுதி செய்யலாம்

• இது டிஜிட்டல் மற்றும் பணம் இல்லா பொருளாதாரம் அமைய உதவுகிறது.

• நாட்டிலுள்ள வங்கி வசதிகளை எளிதாக்கும் மற்றும் இந்தியாவின் தொலைதூர பகுதிகளிலும் இந்த சேவை உதவுகிறது