நோ - சாப்பாடு, நோ - பால் எனும் குழந்தைகளுக்கு டேஸ்டி + ஹெல்தியான கார்டூன் சாப்பாடு... 

சத்தான உணவுகளை சமைத்து பள்ளிக்கு கொடுத்துவிடும் உங்கள் குழந்தையின் லன்ச் பாக்சில், வைத்தது வைத்தப்படியே அப்படியே திரும்புகிறதா? ஆம் எனில், ஜேகப்பின் அம்மா சொல்வதை செய்து பாருங்கள்...

2

பாதி பக்கெட் தண்ணீரில் பளிச்சிடும் வெண்மை அளிக்க வேண்டும் என்று சேலஞ்ச் செய்தாலும் வெள்ளைத் துணியை அடித்து தொவம்சம் பண்ணும் இல்லத்தரசிகளுக்கு, குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பதோ பாகுபலி போரை விட ரணகளமானது. அதிலும், எட்டுமாடி பிளாட்டில் தனியே தன்னந்தனியே என வசிக்கும் புது மம்மிகளுக்கு, குழந்தைக்கு பூவா ஊட்டுவது ட்ரேட் மில்லில் 2 மணிநேரம் ஓடுவதற்கே சமம். பட், திஸ் ஃபாரின் மம்மியின் வேற லெவல் ஐடியாவை வொர்க் அவுட் பண்ணி பார்த்தீர்களாயின், குழந்தைகளை ‘ஆ’ வாங்க வைப்பதெல்லாம் அசால்ட்டு மேட்டராகிவிடும். 

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னைச் சேர்ந்த லாலே மோமேடி என்ற மம்மிக்கும், சேம் பிராப்ளம். அவருடைய இரண்டு வயது பையன் ஜேக்கப்புக்கு சாப்படுவது என்றாலே நஞ்சாகி போக அவனை விரட்டி விரட்டி உண்ண வைப்பதே லாலேவின் 24மணிநேர வேலையாகி உள்ளது. இதற்கு தீர்வே இல்லையா என்று சிந்தித்தவருக்கு கிடைத்த ஐடியா தான், கார்டூன் பாத்திரங்களில் பதார்த்தங்கள். 

நமது ஆயாக்களும், அம்மாக்களும் குழந்தைகளை உண்ண வைப்பதற்காக குட்டித் தோசையை சுட்டுக் கொடுத்தது போல் லாலே, ஐந்தாறு ஆரஞ்சுச் சுளைகள், வெட்டிய தர்பூசணித் துண்டுகள், பிளாக் பெர்ரி மற்றும் இன்னப்பிற அயிட்டங்களை கொண்டு, சிங்க உருவத்தில் தட்டில் அலங்கரித்து கொடுத்திருக்கிறார். 

ஜேக்கப்பும் பார்க்கவே அட்ராக்டிவாக இருந்த சாப்பாட்டை மிச்சம் வைக்கமால் சாப்பிட்டு இருக்கிறான். அவ்வளவு தான், அன்றிலிருந்து லாலே, ஜேக்கப்பிற்காக டிஸ்னி பாத்திரங்கள், ஹாலிவுட் கலக்கல் கேரக்டர்கள் என ரகளையான வடிவத்தில் சாப்பாட்டை தயாரித்து வருகிறார். இது தொடங்கியது 2015ம் ஆண்டு. இன்று லாலே, இன்ஸ்டாகிராமில் எல்லேருக்கும் பிடித்த பாபுலர் மம்மி.

“அப்போ ஜேக்கப்புக்கு 2 வயது. சாப்பாடு என்றாலே அடம்பிடிப்பான். வித்தியாசமாக செய்யலாம் என்று புட் ஆர்ட்டை கையில் எடுத்தேன். முதல் முறையாக சிங்கம் வடிவத்தில் சாப்பாடு செய்தேன். அக்சுவல்லா, அது பார்க்க கரடி மாறி இருந்துச்சு. பட், என் பையனுக்கு அது பிடித்திருந்தது. அத போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். ப்ரெண்ட்ஸ் எல்லாரும் பார்த்துட்டு இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் ஓபன் செய்து தினமும் பதிவிடுமாறு கூறினர். 

அன்று தொடங்கப் பட்டது தான் ‘ஜேக்கப் ஃபுட் டைரீஸ்’ இன்ஸ்டா பக்கம்’ எனும் லாலேவின் ரெசிபிக்களை பார்த்து நித்தம் நித்தம் சமைக்கும் பட்டாளமும் உண்டு. நீமோ, ஜுட்டோபியா தொடங்கி கடந்த வாரம் ரீலிசாகிய இன்கிரெடிபிள்ஸ் 2வில் இடம்பெற்றுள்ள ‘ஜாக்’ வரை சகல கார்டூன் பாத்திர வடிவத்திலும் உணவைசெய்து அசத்துகிறார். 

லாலே இன்ஸ்டாவில் அப்லோடும் போட்டோ ஒவ்வொன்றுக்கும் ஆர்டின்களை எக்குதப்பா குவிவத்ததுடன், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் டாப்கீயரில் எகிறிகிடக்கிறது. ஒவ்வொரு அம்மாக்களும் ஃபுட் ஆர்ட் செய்வது எப்படி? என்ற சமையல் குறிப்பை வெளியிடுமாறு முறையிட, அதற்கென பிரத்யேகமாக ‘ஜேக்கப் புட் டைரீஸ் என்ற வலைப் பூவைத் தொடங்கி சமையல் செயல்முறையினை ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார். 

“ஒவ்வொரு பண்டமும் ரெடி பண்ண 30 நிமிஷமாகும். மொத நாள் ராத்திரியே நாளைக்கு எந்த கார்டூன் வேணும்னு மகனிடம் கேட்டுவிடுவேன். அதற்கு ஏத்தமாதிரி தேவையானதை ரெடி பண்ணி வச்சுக்குவேன். 

வெறும் அலங்காரத்துக்காக உணவுப் பொருள்களை தேர்வு செய்யாமல், சத்தான ஆகாரங்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். குழந்தைகளுக்கு கீரை, பச்சைக்காய்கறிகள் என்றாலே அலறி அடித்து ஓடுவர். ஆனால், இப்படி ட்ரை பண்ணா கண்டிப்பா சமத்தா சாப்பிடுவாங்க. 

ஜேக்ப்பும் அப்படித்தான். அதுவே என்னை இன்னும் நிறைய உணவு வகைகள் செய்ய ஊக்குவிக்கின்றது. இப்போ ஜேக்கப்வோட தங்கச்சிக்கும் இந்த டெக்னீக் பயன்பட்டு வருகிறது” என்கிறார் லாலே. 

தகவல்  மற்றும் பட உதவி : டெய்லி மெயில்

Related Stories

Stories by jaishree