உங்களுக்காக நீங்களே போராடத் தயாராக வேண்டும்: சன்னி லியோன்' நமக்கு கற்று தந்த வாழ்க்கை தத்துவம்

2

கரென்ஜித் கெளர் என்கிற 'சன்னி லியோன்'. இவரை நோக்கி புன்னகையுடன் அவமதிப்பான கேள்விகளைத் தொடுத்தபோது, இந்தியாவோ அல்லது உலகமோ, உடனடியாக உதவிக்கரம் நீட்ட இயலாது போனது. ஆயினும், தனது தன்னம்பிக்கையான பதில்களால் அவர் தன்னைத் தானே பாதுகாத்துக்கொண்டார். இச்சம்பவம், சன்னி லியோனை இன்னும் அதிகமாக நாம் விரும்பக் காரணமானதுடன், இகழ்வான ‘இந்திய மனப்பாங்கு’ மாறிவரும் போக்கையும் பளிச்சென்று எடுத்துக்காட்டியுள்ளது.

பெண்களின் உலகமானது தமது நடவடிக்கைகள் தொடர்பான கேள்விகளால் சூழ்ந்துள்ளது. நாளடைவில் கேள்விகளைச் சார்ந்து வாழவும் பழகிக்கொள்கின்றனர் பெண்கள். எனினும், சன்னி லியோனின் சமீபத்திய நேர்காணல், இந்தக் கேள்விகளை கையாள வேண்டிய விதம் பற்றிய பாடமாக அமைந்துள்ளது.

சன்னி நமக்கு கற்பித்த பத்து பாடங்கள்:

1. பொறுமையை இழக்காதே

விஷம் போன்ற கேள்விகளை விதைத்து, நேர்காணலை தான் விரும்பிய விதமாக நிருபர் திருப்பியபோதும், கொஞ்சமும் கண்ணியம் தவறாது சன்னி லியோன் பதிலளித்தார். “என்னைக் கவலைப் படவைக்க முயற்சிக்கும் நபருக்கு ஒருநாளும் மனநிறைவை நான் தர மாட்டேன்,” என இந்த நேர்காணலில் கூறினார் சன்னி லியோன். இது பத்திரிக்கையாளர் பூபேந்திர சாவ்பேக்கும் பதிலாக அமைந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

2. உங்களையும், உங்களது கடந்த காலத்தையும் போற்றுங்கள்!

நீங்கள் என்ன செய்தீர்கள்? தற்போது என்ன செய்கின்றீர்கள்? என்பதைப் பற்றிய தெளிவுடன் இருங்கள். பிற்காலத்தில், தலைகுனிவாய் இருக்கும் என எண்ணும் எதையும் இப்போது செய்யாதீர்கள். உங்களது கடந்த காலத்தை மாற்றும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, சன்னி நூறு சதவிகித நம்பிக்கையுடன் தெளிவாக தனது கடந்த காலத்தை மாற்றிக்கொள்ளும் விருப்பம் இல்லை என்றார்.

3. உங்களது போராட்டத்துக்கு மதிப்பளியுங்கள்

வாழ்வில் எதுவுமே எளிதாக கிடைத்துவிடுவதில்லை. ஆகவே, உங்களது கடந்த கால போராட்டம்தான் தற்போதைய நிலைக்குக் காரணம் என்பதை சொல்லத் தயங்காதீர். “என் வாழ்வில் இதற்கு முன்பு நான் செய்த அனைத்துமே, இந்த இருக்கைக்கு நான் முன்னேறக் காரணமானது” என பெருமிதமாக பகிர்ந்துகொண்டார் சன்னி.

4. தீமையிலும் உள்ள நன்மையை அடையாளம் காணுங்கள்

எத்தனையோ கடினமான நொடிகளைக் கடந்து வந்திருந்தாலும், அதிலும் நிகழ்ந்த சிறப்பான விஷயங்களை மறக்க எண்ணாதீர்கள். “எனக்கு எவ்வித கொடுமையும் நிகழவில்லை. என்னிடம் சோகக் கதை எதுவும் இல்லை” என்றார்.

5. தோல்விகளை ஒப்புகொண்டு அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

தவறு செய்வது மனித இயல்புதான், ஆகவே தவறு செய்ததற்காக அஞ்சி நடுங்கவோ, வெட்கப்படவோ தேவையில்லை. தவறுகளை நம்மை மேன்மைப்படுத்த உதவும். “நானும் மற்றவர்களைப் போல தவறுகள் செய்துள்ளேன். அவற்றிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆகவே, தவறை எண்ணி வருந்துவதில்லை.”

நன்றி: சி.என்.என் -ஐ.பி.என்
நன்றி: சி.என்.என் -ஐ.பி.என்

6. நேர்மறையான சிந்தனையுடன் இரு

நம்மைப் பற்றிய அடுத்தவர்களின் எண்ணத்தையோ அல்லது அவர்களது செயல்பாடுகளையோ பொருட்படுத்த வேண்டியதில்லை. “மற்றவர்களது எதிர்மறைச் சிந்தனைகள் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனக்கு உங்களை வெறுக்க ஒரு காரணமும் இல்லை. ஒருவேளை நீங்கள் என்னை வெறுக்கின்றீர்கள் என்றால் அது உங்கள் உரிமை”என்றார்.

7. உங்கள் சாதனைகளை எண்ணி பெறுமைகொள்ளுங்கள்

சிறியதோ, பெரியதோ உங்களது சாதனைகள் ஒவ்வொன்றையும் கொண்டாடுங்கள். “நான் முன்னர் செய்தவை எல்லாம், என்னை தற்போதைய நிலைக்கு உயர்த்தியுள்ளன.”

8. ஆசைப்படு

எத்தகைய உயரத்தை எட்டியிருந்தாலும், இன்னும் பெரிய கனவுகானவோ அதை நோக்கி உழைக்கவோ தயங்க வேண்டாம். “எனக்கும் பல கனவுகள் உள்ளன” என்றார் சன்னி லியோன்.

9. செய்வதை விரும்பிச் செய்

நாம் செய்யும் வேலையில் வெற்றியடைய அதை விரும்பிச் செய்வது அவசியம். சிறப்பான உழைப்பை செய்யும் பணியில் கொடுத்தாலே வெற்றிதான்.

10. புன்னகையை இழக்காதே

எவ்வித கடினமான நேரத்திலும், முகத்தில் புன்னகை மறையாது பார்த்துக்கொள்!

ஆக்கம்: ப்ரதீக்‌ஷா நாயக் | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்!