2017: பெண்களை மையமாகக் கொண்டு ஹிட் ஆன 6 திரைப்படங்கள்!

வருடம் முடிவடைய இருக்கும் தருணத்தில், திரைப்படங்களில் ஏன் பெண்கள் அதிகம் போற்றப்படுவதில்லை என்ற வழக்கத்தை தகர்த்தெறிந்து எடுத்துக்காட்டாக விளங்கிய சில படங்கள் குறித்த ஒரு அலசல்…

1

ஒவ்வொரு வருடமும் இந்திய திரைப்படத்துறையில் கிட்டத்தட்ட 2,000 திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. உலகிலேயே மிகவும் அதிகமான எண்ணிக்கையாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தியாவில் திரைப்படங்களைப் பார்க்கின்றனர். இந்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்காக மட்டுமல்லாமல் பொதுவாகவே திரைப்படங்கள் இரண்டு விஷயங்களை உறுதிப்படுத்திக்கொள்வது சிறந்தது. ஒன்று ஆண் மற்றும் பெண் சமமாக திரையில் தோன்றவேண்டும். இரண்டாவது இரு பாலினரும் திரையில் தோன்றுவது என்பது வெறுமனே காட்சிப்படுத்துவதாக மட்டும் இருக்கக்கூடாது.

கீனா டேவிஸ் இன்ஸ்டிட்யூட் ’ஊடகங்களில் பெண்கள்’ என்கிற தலைப்பில் நடத்திய ஆய்வின்படி துரதிர்ஷ்டவசமாக இந்திய சினிமா இந்த விஷயத்தில் தோல்வியுற்றுள்ளது என்றே குறிப்பிடுகிறது. 2013-ம் ஆண்டு 10 நாடுகளைச் சேர்ந்த பிரபல திரைப்படங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்திய திரைப்படங்களில் 24 சதவீதம் மட்டுமே பெண் கதாப்பாத்திரங்கள் இடம்பெறுகிறது. எனினும் கவர்ச்சியான ஆடைகளில் இருக்கும் பெண் கதாப்பாத்திரங்கள் (34.1 சதவீதம்), நிர்வாணமாக காணப்படும் பெண் கதாப்பாத்திரங்கள் (35 சதவீதம்) மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில் அமைக்கும் பெண் கதாப்பாத்திரங்கள் (25.2 சதவீதம்) போன்ற வகைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

பெண்கள் திரையில் தோன்றினாலும் இணை கதாப்பாத்திரங்களோ அல்லது வெறும் காட்சிப்பொருளாக இருக்கும் கதாப்பாத்திரங்களோ மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்பதையே இது உணர்த்துகிறது. எனினும் சமீபத்தில் இயக்குனர்கள் இந்த போக்கில் நேர்மறை மாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. 2017-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலில் இந்த வகையைச் சேர்ந்த சில திரைப்படங்கள் இதோ:

பாகுபலி 2 – இரண்டாம் பகுதி

தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்தத் திரைப்பட்டம் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்கிற கேள்விக்கு பதிலளிப்பதுடன் அதன் முதல் பாகத்தில் அவந்திகா என்கிற கதாப்பாத்திரத்தை சித்தரித்த விதத்தை மாற்றும் விதத்திலும் அமைந்தது. முதல் பகுதியில் மஹேந்திர பாகுபலி தன் வயப்படுத்தியதால் காதல் வசப்படுகிறார் போராளியான அவந்திகா.

தொடர்ச்சிப் பகுதியானது பெண் கதாப்பாத்திரத்தை காட்சிப்படுத்தும் விதத்தை சீரமைக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. சிவகாமி மற்றும் தேவசேனா என்கிற இரு சக்திவாய்ந்த, அதிகாரமளிக்கப்பட்ட பெண் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் அதன் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது.

சிவகாமி – மகிழ்மதியின் ராணி

மகிழ்மதி அரசின் தலைவியாக அவருக்கு அடுத்து அரசவையின் பொறுப்புகளை ஏற்பவரை தேர்ந்தெடுக்கவேண்டியவர் சிவகாமிதான். அவர் தனது மகன் பல்லால்தேவனை தேர்ந்தெடுக்காமல் பாகுபலியை தேர்ந்தெடுத்து ஒரு நேர்மையான மகாராணி என்பதை நிரூபிக்கிறார். பல காலமாக இந்தியத் திரைப்படங்களில் மகன் தவறே செய்திருந்தாலும் தாய்பாசத்தைக் காரணம் காட்டி தவறான முடிவெடுப்பதாகவே தாய் சித்தரிக்கப்படுவார். அந்த வகையில் சிவகாமி கதாப்பாத்திரம் ஒரு முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்தது.

தேவசேனா

கதாநாயகனை காதலிப்பதற்காகவே உருவாக்கப்படும் அழகான பெண் கதாப்பாத்திரமாக தேவசேனா இடம்பெறவில்லை. அறிமுகக்காட்சியில் தனது எதிரிகளை வாள் ஏந்தி சண்டையிடுகிறார். அதன் பின்னர் ஒரு தேர்ந்த வில்வித்தை வீராங்கனையாக தோன்றுகிறார். பின்விளைவுகள் குறித்து அச்சப்படாமல் சரி என்று நம்பும் விஷயத்தில் தைரியமாக ஈடுபடுகிறார். 

ஒரு இராணுவ தளபதி பாலியல் ரீதியான தொந்தரவு அளிக்கும்போதும் ஒரு மாவீரன் தோன்றி அவரை காப்பாற்றவில்லை. அவர் நிறைமாத கர்ப்பிணியானபோதும் அவரே சூழலை எதிர்கொண்டு அந்த தளபதியின் விரல்களை துண்டிக்கிறார்.

மகளிர் மட்டும்

இந்தத் திரைப்படத்தில் நான்கு பெண்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் திரைத்துறையில் பல நிலைகளில் புதிய போக்கினை வகுத்துள்ளது இத்திரைப்படம். திருமணமான பெண்களுக்கு வழக்கமாக கதாநாயகனின் அம்மா அல்லது சகோதரி கதாப்பாத்திரமே வழங்கப்படும். இந்தப் போக்கினை மாற்றும் விதத்தில் 40 வயதான திருமணமாகிய பெண்ணான ஜோதிகாவை கதாநாயகியாக காட்டியுள்ளார் இயக்குனர்.

திரைப்படத்தில் கோமாதாவின் (ஊர்வசி) மகனுக்கு நிச்சயிக்கப்படுகிறார். இவருக்கும் இவரது வருங்கால மாமியாருக்கும் இடையே இருக்கும் உறவுதான் கதையின் முக்கிய கரு. இவ்விருவரும் பரஸ்பர மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பாகுபலி உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் பல ஆண்டுகளாக வெளிவந்த திரைப்படங்களில் வழக்கமாக மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவே சித்தரிக்கப்படும். இப்படிப்பட்ட கருத்துக்களை தகர்த்தெறிகிறது மகளிர் மட்டும்.

அது மட்டுமல்லாது கோமாதாவின் கல்லூரி தோழிகளான ராணி (பானுப்ரியா) மற்றும் சுப்புலஷ்மி (சரண்யா) இருவரையும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க ஏற்பாடு செய்கிறார் ஜோதிகா. இந்தப் பெண்களின் கதை வாயிலாக பாரம்பரியமாகவே ஆணாதிக்க முறையில் சிக்கியிருக்கும் சமூகத்தின் பார்வையையும் ஆராயப்படுகிறது.

தும்ஹாரி சுலு

பெண்களின் உரிமைக்காக போராட்டங்கள் தொடர்ந்தாலும் கல்வியில் சிறப்பிக்கும் பெண்களே கருத்தில் கொள்ளப்படுகிறார்கள். பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத பெண்களின் பகுதியை மீட்டெடுக்கிறது ஹிந்தி திரைப்படமான தும்ஹாரி சுலு. சுலோச்சனா (சுலு) தனது கணவர் அஷோக்குடனும் (மானவ் கௌல்) பதின்ம வயதுப் பையன் ப்ரனவ்வுடனும் (அபிஷேக் ஷர்மா) மும்பையின் புறநகர் பகுதியில் இல்லத்தரசியாக வாழ்ந்து வருகிறார்.

சுற்றியுள்ள மக்கள் வியக்கும் விதத்தில் ஒரு நாள் ஆர்ஜேவாக மாறுகிறார் சுலு. வீட்டில் தனது பொறுப்புகளையும் பணியையும் சமன்படுத்தப் போராடி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்பும் சுலுவின் பயணம்தான் ’தும்ஹாரி சுலு’ திரைப்படம்.

சீக்ரெட் சூப்பர்ஸ்டார்

பதின்ம வயதினரான இன்சியா (சாய்ரா வாசிம்) பாரம்பரிய முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா; மனைவி, மகன், மகள் என அனைவரையும் அடக்கி அதிகாரம் செலுத்துபவர்.

இன்சியாவிற்கு தனது அம்மாவின் போராட்டங்கள் புரிந்தது. அவரை மணவாழ்க்கையில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்துகிறார். ஆனால் அவரது அம்மா முடிவெடுக்கத் தெரியாமல் குழம்பித் தவிக்கிறார்.

இன்சியா பாடகி ஆகவேண்டும் என்கிற ஆசையில் யூட்யூப் பக்கம் ஒன்றை துவங்கி அதில் பாடல்களை பதிவிடுகிறார்.

அருவி

எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டு முப்பதாண்டுகள் ஆகியும் பெண்கள் முறைதவறி நடக்கவில்லை என்றாலும் எய்ட்ஸ் நோய் தாக்கக்கூடும் என்பதை இந்தியர்கள் நம்ப மறுக்கின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில் உள்ள கதாநாயகியை, அவரது பெற்றோர் வீட்டை விட்டு துரத்துகின்றனர். அவர் மற்றவர்களால் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதை அருவி திரைப்படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

அருவி என்கிற பெண் தனியாக வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவது குறித்த ஒரு தமிழ் திரைப்படம்தான் ’அருவி’. பாலியல் கொடுமை புரியும் காமுகர்கள் எவ்வாறு ஒவ்வொரு மூலையிலும் பதுங்கியுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது இந்தத் திரைப்படம். அத்துடன் காமுகர்கள் அனைவரையும் எப்போதும் அரக்கர்கள் என முத்திரை குத்தவேண்டுமா என்கிற கேள்வியையும் நம் மனதில் எழுப்புகிறது.

அருவி ரியாலிட்டி ஷோவிற்கு நியாயம் கேட்டு செல்கிறார். அங்கும் ஏமாற்றப்படுகிறார்.

டேக் ஆஃப்

சமீரா (பார்வதி) கேரளாவைச் சேர்ந்த ஒரு நர்ஸ். தனது குடும்பத்தின் கடனை அடைக்கப் போராடுகிறார். பழமைவாத முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த தீண்டத்தகாத பெண். விவாகரத்தான இவருக்கு ஒரு குழந்தை இருக்கும்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்திய நர்ஸ்களை ஈராக்கில் பிணையக்கைதியாக வைத்திருந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெண்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பல்வேறு கோணங்களில் அலசுகிறது.

அவர் விவாகரத்தானவர் என்பதால் இழிவுபடுத்தப்படுகிறார். ஆண் துணையின்றி வெளிநாடுகளுக்குப் பணிபரியச் செல்வதும் அவரது மத வழக்கப்படி தடைசெய்யப்பட்டிருந்தது. தனது குடும்பத்தின் கடனை அடைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர் ஷாஹீத் (குன்ஜாகோ போபன்) என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இது அனைத்து பிரச்சனையையும் தீர்த்துவைக்கும் என்று நம்புகிறார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

இருவரும் ஈராக்கை அடைந்ததும் அவரது ஏழு வயது மகன் அவர்களுடன் வந்து சேர்கிறார். சாய்ராவால் மகனிடம் திருமணமான விஷயத்தையோ அல்லது அவர் கருவுற்றிருப்பதையோ சொல்ல முடியவில்லை. ஷாஹீத்தின் மனைவியாக வாழ விரும்புகிறார். அதே சமயம் தனது மகன் தன்னை வெறுத்துவிடக்கூடாது என்கிற கவலையும் அவரிடம் காணப்படுகிறது.  கணவர் மற்றும் மகனுக்கிடையே தேர்ந்தெடுக்கமுடியாமல் தவிக்கிறார் சாய்ரா.

ஆங்கில கட்டுரையாளர் : கிருத்திஹா ராஜம் 

Related Stories

Stories by YS TEAM TAMIL