சோகத்தை வென்று தாய் - மகள் இணைந்து தொடங்கிய ஃபேஷன் தளம்

0

மற்ற தொழில்முனைவர் போல ஸ்வேதா சிவ்குமார் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று விரும்பவில்லை. 2012ல் அவருடைய தந்தை மறைவுக்குப் பின், தன் தாயாரை இணை நிறுவனராக இணைத்துக் கொண்டு சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. அதுவே தாய்-மகள் இணையை பின்னிப்பிணைத்துள்ளது.

ஸ்வேதா மற்றும் ஜெயா சிவ்குமார், வொய் சோ ப்ளூவின் (WhySoBlue) இணை – நிறுவனர்கள்
ஸ்வேதா மற்றும் ஜெயா சிவ்குமார், வொய் சோ ப்ளூவின் (WhySoBlue) இணை – நிறுவனர்கள்

“இது பாலிவுட் ஸ்டைலில் இருந்தது, அதற்கு அர்த்தம் இல்லை. நான் என்னுடைய மேற்படிப்பை படித்துக் கொண்டிருந்த சமயம் அது. என் தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த என் தாயின் தூரத்து உறவினர், அவருக்கு தெரிந்த ஒருவர் அவுட்லுக்கின் வர்த்தக இதழின் விளம்பர விற்பனைப் பிரிவை பார்த்துக் கொள்ள ஆள் தேவை என்று கூறியதாக" சொல்கிறார் 24 வயது ஸ்வேதா. இவர் இணையவழி ஃபேஷன் தளமான "வொய் சோ ப்ளூ"வின் (WhySoblue) இணை நிறுவனர்.

தன்னுடைய முதல் வேலையான அவுட்லுக்கில் 13 மாதங்கள் பணியாற்றினார் ஸ்வேதா, அதனைத் தொடர்ந்து மற்றொரு நிறுவனத்துக்கும் 6-7 மாதங்கள் மீடியா திட்ட வடிவமைப்பும் செய்து வந்தார். ஸ்வேதாவுக்கு அது போதுமானதாக இருந்தது. பணிக்கு நடுவே, ஸ்வேதா ஃபேஷன் இதழ்கள் மற்றும் ப்ளாகுகளை பார்ப்பதிலேயே தன்னுடைய பெரும்பாலான ஓய்வு நேரத்தை செலவிட்டார். அவருக்கு சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத போதும், என்றாவது ஒரு நாள் ஃபேஷன் பற்றிய தெளிவு தனக்கு ஏற்படும் என்று ஸ்வேதா கருதினார்.

ஸ்வேதா சிவ்குமார்
ஸ்வேதா சிவ்குமார்

ஸ்வேதா பார்க்கும் வேலை திருப்தியளிக்கவில்லை என்றால் வேலையை விட்டுவிடுமாறு ஸ்வேதாவின் தாயார் ஜெயா தெரிவித்திருக்கிறார். ஆனால் ஸ்வேதா தன்னுடைய வேலைக்கு பிரியாவிடை கொடுக்க சிறிது காலம் எடுத்துக்கொண்டார். பின்னர் தொழில்முன்முயற்சியை நோக்கி தன் வாழ்க்கை கியரை மாற்றினார்.

“என் தந்தையின் எதிர்பாராத மரணத்தால் எனக்கு புதிதாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை. அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது, அப்போது தான் எல்லாம் சரியாகி அவர் உடல்நலம் தேறி வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்துவிட்டார். அவர் நினைவுகள் என்னை சுற்றியே இருந்தன, நான் என்னுடைய தொழிலை தொடங்க சில காலம் தாமதப்படுத்தினேன். உண்மையில் எனக்கு புதிய நிறுவனம் தொடங்கும் தைரியம் இல்லை” என்று கூறுகிறார் ஸ்வேதா. அவரும், அவரின் தாயாரும் பலரை சந்தித்து, பல வழிகளில் தங்களுடைய நிறுவனத்தை தொடக்க முதலீட்டை ஏற்பாடு செய்தனர் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நினைவுகூறுகிறார் ஸ்வேதா.

இந்த தாய்-மகள் இணை – இதை விட மோசமான நிலை ஒன்றும் வந்துவிடப்போவதில்லை என்று உறுதியாக இருந்தனர்.

'வொய் சோ ப்ளூ' பிறந்த கதை

ஸ்வேதாவும் அவருடைய இளைய தங்கையும் ஒரு நாள் இரவு முழுவதும் மூளையை கசக்கி பிழிந்து இந்த பெயரை தேர்ந்தெடுத்தனர். ஃபேஷன் என்ற வார்த்தையை வொய் சோ ப்ளூவின் மூலம் நினைவு படுத்தும் ஒரு முயற்சியை செய்தார்கள். “எங்களுடைய பிராண்டுகள் அனைத்தும் உயிரோட்டமாகவும், மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருக்கும். அதே போன்று எந்த ஒரு நபரும் எங்களுடைய ஆடைகளைப் பார்த்தவுடன் அவர்களின் மனநிலையை உடனடியாக மாற்றக்கூடியதாகவும் அவை இருக்கும்” என்று சொல்கிறார் ஸ்வேதா.

அவருடைய தாயார், ஸ்வேதாவை இந்த நிறுவனத்தை தொடங்க கட்டாயப்படுத்தியதோடு, அதைத் தொடங்குவதற்கான தனது அளவு கடந்த ஆதரவையும் அளித்தார். “நான் அவளிடம் எப்போதுமே சொல்வேன், நீ ஒருத்தி மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்க வேண்டிய சூழல் இருக்கும் கட்டாயத்திற்காக நீ பணியாற்ற வேண்டாம் என்று. அவளுக்கு எப்போதுமே ஃபேஷன் தொடர்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு கனவு இருந்ததாக” சொல்கிறார் ஜெயா.

ஸ்வேதாவின் தந்தை நோய்வாய்பட்டது முதல் அந்த குடும்பத்தை கட்டி காக்கும் தூணாக யாராவது இருக்க வேண்டிய நிலையில், ஜெயா எப்போதுமே தன்னுடைய குழந்தைகளுக்கு முன்மாதிரிக்கான ஆதாரமாகவே திகழ்ந்தார்.

“ஒரு கட்டத்தில் எங்கள் முயற்சி பற்றி இறுதி முடிவு எடுத்து விட்டோம், யாரிடமும் கடன் பெறாமல் எங்களிடம் இருந்த பணத்தை திரட்டினோம். மிதமான வளர்ச்சியே போதும் என்பதோடு தேவைப்படும் பட்சத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவுசெய்ததாக” கூறுகிறார் ஜெயா. அந்த இரண்டு பெண்களின் தெள்ளத்தெளிவான முடிவுகளே அவர்களின் உறுதித்தன்மை பற்றி வெளிப்படையாக உணர்த்துகின்றன. ஜெயா தான் இந்த நிறுவனத்தை இனியும் தாமதப்படுத்தாமல் தொடங்க இதுவே சரியான தருணம் என்றும் திட்டமிட்டிருக்கிறார்.

கைகொடுத்த ஜெயாவின் தையல் கலை

கடந்த 25 ஆண்டுகளாக ஜெயா தையல்கலையில் கைதேர்ந்தவர். அவர் தன்னுடைய குழந்தைகளின் ஆடைகளை பிறர் பார்த்து பொறாமைப்படும் வகையில் வெஸ்ட்டர்ன் ஆடைகளை தயாரித்துள்ளார். வொய் சோ ப்ளூ திட்டத்தை வடிவமைத்த போதே, அதில் யார் யார் என்னென்ன பங்கு வகிக்க வேண்டும் என்பதையும் முதலிலேயே முடிவு செய்தவிட்டனர். ஸ்வேதா ஆடைகளை வாங்குவது, அவற்றின் இறுதி வடிவத்தை முடிவு செய்வது மற்றும் மார்க்கெட்டிங் செய்வதை பார்த்துக் கொண்டார். ஜெயா, செயல்படுத்தும் முறை மற்றும் தையல் பிரிவை கவனித்துக் கொண்டார். அவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தன, அவற்றை தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் மெருகேற்றினர். தேவைக்கேற்ப மாற்று வடிவம் தந்து, வொய் சோ ப்ளூவின் கீழ் முற்றிலும் புதிய ஆடைகளை வடிவமைத்தனர். அவர்கள் அனைத்தையும் ஆடம்பரமானதாக மாற்றினர். இந்த பிராண்ட் மிக அண்மையில் செயல்படத் தொடங்கியது, தற்போது அதை விரிவாக்கம் செய்யும் நிலைக்கு வளர்ந்துள்ளனர்.

ஜெயா சிவ்குமார்
ஜெயா சிவ்குமார்

மகளுக்கு உறுதுணையாக நிற்கும் தாய்

என்னுடைய கணவர் இறந்த பின்னர் பொருளாதார ரீதியில் நாங்கள் நிலையாக இல்லை. “நான் அவளை வேலையை விட்டு நிற்குமாறு வலியுறுத்திய போது வாழ்வில் நாம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறோம் என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால் அவள் அந்தப் பணியில் மகிழ்ச்சியாக இல்லை, அதனால் அதைத் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் இதை ஒன்றாக சேர்ந்து மாற்ற நினைத்தோம்” என்று கூறுகிறார் இந்த துணிவு மிக்க தாய். ஜெயா நீண்ட காலமாக தன்னுடைய மகள் மற்றும் நண்பர்களுக்காக ஆடைகளைத் தைத்துத் தருகிறார், இருந்த போதும் அதை ஒரு பொறுப்பாக செய்யும் போது ஏராளமான நம்பிக்கை கிடைப்பதாகக் கூறுகிறார் ஜெயா. மேலும் தன்னுடைய படைப்பை பற்றி யாரேனும் பாராட்டினால் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் கூறுகிறார் அவர்.

அவருக்குத் தொடக்கம் முதலே தொழில்முனைவராவதற்கான உள்ளுணர்வு இருந்திருக்கிறது. அதுவே அவருடைய மகளை ஒரு நிறுவனம் தொடங்கச் செய்யத் தூண்டியுள்ளது. “என் மகள்களின் வளர் பருவத்தில் கூட அவர்களுக்கான வெஸ்டர்ன் ஆடைகளை ஒத்திகை பார்த்து பின் தவறை திருத்திக்கொள்ளும் முறையிலேயே தைத்து வெற்றி கண்டதாக” சொல்கிறார் ஜெயா.

Stories by Gajalakshmi Mahalingam