வெற்றி வேண்டுமா? இந்த 6 விஷயங்களை உடனடியாக நிறுத்துங்கள்...

1

ஒவ்வொருவருக்கும், வெற்றி என்பது ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒருவருக்கு வெற்றியாக தெரியும் ஒரு விஷயம் மற்றொருவருக்கு அவ்வாறு இருக்காது. அவர்களுக்கு பிடித்த துறையில், வெல்ல குட்டிக்கரணம் அடிப்பதும் நடக்கிறது.

எனவே வெற்றி வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என பல முறை பலபேர் பலவாறு உங்களிடம் கூறி இருப்பார்கள். 

ஆனா உடனடியாக நிறுத்த வேண்டிய ஆறு விஷயங்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன. வெற்றி வேண்டுமா? போட்டு பாருடா எதிர்நீச்சல் !

வேறு ஒருவர் வெற்றிக்கதையை பின்தொடருதல் :

எலன் மஸ்க், ஒப்ரா வின்ப்ரே, சானியா மிர்சா. இவர்களிடம் உள்ள ஒற்றுமை என்ன வென்று தெரியுமா? வெற்றியை துரத்தும் முன்னரே அதனை அறிந்திருந்தனர். எலன் மஸ்க் பாடுகிறேன் என இறங்கிருந்தால், இன்றைக்கு அவர் இருக்கும் நிலையில் அவர் இருக்க மாட்டார். எனவே முதல் உங்களுக்கு வெற்றி என்றால் என்ன என்பதை தீர்மானித்து விட்டு பின்னர் அதனை விரட்டுங்கள்.

சரியான நேரத்திற்காக காத்திருப்பது :

நாம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லாதிருப்பது, (வெல்லாதிருப்பது) நாம் இன்னமும் முதல் அடி எடுத்து வைக்கவில்லை என்பதனால் தான். சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம். ஒரு தொழில் துவங்க, புதிய மொழி கற்க, புத்தகம் எழுத, பயணிக்க, நமக்கு பிடித்தவாறு வாழ. எனவே சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம். காரணம் எப்போதும் 100% உங்களால் தயாராக இருக்க இயலாது. காத்திருக்க துவங்கினால், எப்போதும் காத்திருக்க வேண்டியது தான். உங்களுக்கு தெரிந்ததை வைத்து துவங்குங்கள். அனைத்தும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் உங்களை வந்து அடையும்.

அனைவருக்கும் நல்லவனாக இருப்பது

என்ன ஆனாலும், யாராக இருந்தாலும், அனைவருக்கும் நீங்கள் நல்லவனாக இருக்க முடியாது. நீங்கள் எவ்வளவு முயன்றாலும், உங்களிடம் குறைகாண்போர் இருப்பார்கள். எனவே அடுத்தவர் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நீங்கள் இயங்காமல், உங்கள் உள்ளம் கூறுவதை கேட்டு ஓடுங்கள். பில் காஸ்பி ஒரு முறை கூறியது.

”வெற்றியின் இரகசியம் என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால் தோல்விக்கு அடித்தளம் அனைவர்க்கும் நல்லவனாக இருப்பது.”

ஒரே நேரத்தில் 1000 வேலைகள்:

வெற்றி பெற்றவர்களிடம் என்ன செய்யக்கூடாது என்று கேட்டால் கண்டிப்பாக ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடாது என்ற பதில் கண்டிப்பாக இருக்கும். சிறு தொழில்முனைவோரில் இருந்து, மாபெரும் தொழிலதிபர்கள் வரை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை ஒப்புக்கொள்வதில்லை. அனைத்தையும் முயற்சித்து பார்க்கும் ஆவலை தடுப்பது சிரமம் தான். இருந்தாலும், ஆய்வுகள் கூறுவது ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதால் உங்கள் திறன் குறைவது மட்டுமன்றி பின்நாளில் உங்கள் வெற்றிக்கு தேவையான விஷயங்களை வைத்துள்ள மூளையின் ஒரு பகுதியையும் நீங்கள் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.

உதவி கேட்க தயங்குதல் :

வெற்றி பெற்றவர்களுக்கு இணைந்து பணியாற்றுதல் தான் வெற்றிக்கு வழி என்று தெரியும். அவர்களை பொருத்தவரை உதவி கேட்பது பலமின்மை அல்ல. மாறாக உதவி கோர மாபெரும் தைரியம் வேண்டும். மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என அவர்கள் யோசிப்பது இல்லை. ஆனால் அவர்கள் பயம் அனைத்தும், வாய்ப்புகளை இழந்தால் என்ன செய்வது என்பதுதான். அதிகம் கேள்வி கேட்டு தெளிவு பெறுபவர்கள் எப்போதும் வெற்றியாளர்களாக உள்ளனர்.

ஒரு சீன பழமொழி கூறுவது என்னவென்றால், கேள்வி கேட்பவன் 5 நிமிடத்திற்கு முட்டாளாக இருப்பான். கேட்காதவன் எப்போதும் முட்டாளாக இருப்பான்.

மகிழ்ச்சியை விடுத்து பணத்தை துரத்துவது:

பணம் மட்டுமே உங்கள் குறிக்கோள் என்றால், உங்களால் வெற்றி பெற இயலாது. காரணம் அதற்கு முடிவே கிடையாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் குறிக்கோள் என்றால், நீங்கள் வென்றுவிட்டீர்கள். தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், வெற்றியை தன்னிறைவோடு ஒப்பிடுகிறார். சென்ற வருடம் லிங்க்ட் இன் தளத்தில் அவர் எழுதியது, மக்கள் மகிழ்ச்சியை அவர்கள் சம்பாதியத்தோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் உங்கள் வெற்றி உங்களில் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தே இருக்கும்.

“வெற்றி என்ற வார்த்தை பலருக்கும் பல விஷயங்களை குறிக்கும். ஆனால் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என தெரிந்து சரியான எண்ண ஓட்டத்தோடு இருப்பதே வெற்றிக்கான வழியாகும்.”

கட்டுரையாளர் : வர்திக்கா காஷ்யப் | தமிழில் : கெளதம் தவமணி

Related Stories

Stories by YS TEAM TAMIL