ரொட்டி தயாரிக்கும் ரோபோ வேண்டுமா ப்ரனதி நகர்கரிடம் கேளுங்கள்...

1
“நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது சட்டைகளுக்கான தானியங்கி அயர்ன் மெஷினை தயாரித்தேன். அப்போது தான் மக்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளை என்னால் உருவாக்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன்.”

ப்ரனதி நகர்கர், ‘எளிமையில்’ நம்பிக்கைக் கொண்டவர். எளிமையாக்குவது அவருடைய வாழ்வின் தத்துவம், அவருடைய குழுவிற்கும் அதுவே அடிப்படை கொள்கை, இதன் விளைவாக உருவானதே ரொட்டிமேடிக் (Rotimatic).

ரொட்டிமேடிக், ஜிம்ப்லிஸ்டிக்கின் ஒரு தயாரிப்பு. இந்த ரோபோ ஒரே தொடுதலில் ஆரோக்கியமான, வீட்டிலேயே தாயரிக்கக் கூடிய ரொட்டியை தயாரித்து, சுருட்டிவைத்துவிடும். புது மணப்பெண்ணான உடன் ப்ரனதி தன் குடும்பத்திற்காக ஆரோக்கியமான உணவை வீட்டிலேயே சமைக்க விரும்பினார். நெருக்கடியான திட்டமிடல்களில் அவர் சமைப்பதற்கு நேரத்தை ஒதுக்குவதில் சிரமப்பட்டார். அப்போது அவர் கண்டுபிடித்தது தான் ரொட்டிமேட்டிக். ஜிம்ப்ளிஸ்டிக் B பிரிவு முதலீடாக 11,5 மில்லியன் டாலரை 2015 ஜுலையில் பெற்றது.

கண்டுபிடிப்பு ஆண்டுகள்

நான்கு தலைமுறை பொறியாளர்களைக் கொண்ட குடும்பப் பின்னணியில் வளர்ந்த ப்ரனதிக்கு கண்டுபிடிப்பாளராக வேண்டும் என்பது எப்போதுமே அவரது கனவு. தன் பெற்றோர் பற்றி அவர் கூறுகையில், “என் பெற்றோர் அவரவர் வழியில் தொழில்முனைவர்களாக இருந்தனர். என்னுடைய தாயார் திறமையான, புத்திசாலியான பெண் மட்டுமல்ல அவர் ஒரு வரைகலைஞரும் கூட. அவர் சுயமாக ஒரு இன்டீரியர் வடிவமைப்பு ஆலோசனையகத்தை நடத்தி வந்தார். அவர் பன்முகம் கொண்டவர், தொழில்நுட்ப உலகின் அண்மை விஷயங்களோடு தொடர்பில் இருக்க அவர் ப்ரோகிராமிங்கை கற்றுக் கொண்டர், தற்போது தனக்கு விருப்பமான கணித ஆசிரியர் பணியை அவர் செய்து வருகிறார். என் அப்பா எதையும் ஏற்றுக் கொள்பவராகவும், நடைமுறைக்கு ஏற்ற மனிதனாக இருந்தார். அவர் தன்னுடைய பணியை மெஷின் வடிவமைப்பில் தொடங்கினார். தன்னுடைய 50வது வயதில் அவர் சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்தார், இதன் காரணமாக அவர் ஒரு விற்பனை மையமான டர்ன்கீ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

ப்ரனதி தன் பெற்றோரின் சரியான கலவை தான் என்று சொல்கிறார், ஏனெனில் அவர்களின் முயற்சிள் தனக்கு உள்ளதாகச் சொல்கிறார் அவர் : தன் தாயாரின் போராடும் குணம், கற்பனைத் திறன், இயற்கை மீதான எண்ணம் மற்றும் தந்தையின் நடைமுறைக்கு ஏற்ற செயல் மற்றும் உயரிய யோசனைகள். ப்ரனதி புனேவில் பிறந்து வளர்ந்தவர், சிங்கப்பூர் சென்று தேசிய ஜுனியர் கல்லூரியில் இளைஞர்களுக்கான ஸ்காலர்ஷிப்பில் தன்னுடைய A லெவல் படிப்பை பயின்றார். பொறியியல் மீது தீராத காதல் கொண்ட ப்ரனதி, மெக்கானிக்கல் என்ஜினியர் பட்டம் பெற்றார். பின்னர் சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழகத்தில் ப்ராடகட் வடிவமைப்பை பயின்றார். பல்கலைக்கழக இடமாறுதல் திட்டத்தின் ஒரு பிரிவாக அவர் பெர்க்லீயில் பயின்றார்.

ரொட்டிமேடிக்கை கண்டுபிடித்தல்

பொருட்கள் தயாரிப்புக்கான எண்ணத்திற்கு வடிவம் தந்து அவற்றுக்கு ஒரு புதிய நுகர்வோர் பிராண்டை உருவாக்குவதை தனது தொழிலாக தொடங்கினார் ப்ரனதி. தான் சந்தித்தப் பிரச்னைகளை வைத்தே அவற்றிற்கு தீர்வு காண நினைத்தார் : குடும்பத்திற்கு ஆரோக்கிய உணவு கிடைக்க உதவினார். 

“இதன் காரணமாகவே நான் 2008ல் ஜிம்ப்ளிஸ்டிக்கின் இணை நிறுவனராக இணைந்தேன், உலகின் முதல் ரொட்டி மெஷினான ரொட்டிமேட்டிகை செயல்பாட்டுக்கு கொண்டு வர நான் என்னுடைய மொத்த சேமிப்பு, நேரம் மற்றும் உறவுமுறைகளை முதலீடு செய்ய வேண்டி இருந்தது."

கடந்த 7 ஆண்டுகளாக, ப்ரனதியும் அவரது குழுவும் ஓய்வில்லாமல் உழைத்ததன் பலனாக அவர்கள் ஸ்டார்ட் அப் @சிங்கப்பூரில் நடந்த இன்ட்டெல் பெர்க்லீ டெக்னாலஜி தொழில்முனைவு சேலஞ்சில் மூன்றாம் இடத்தை வென்றனர்.

ப்ரனதி வளர்ச்சி முறைகளை கற்றுக் கொள்வதற்காக இரண்டு ஆண்டுகள் பொருட்கள் வடிவமைப்பு ஆலோசனையகத்தில் பணியாற்றினார். இதன் விளைவாகவே அவருக்கு எந்தப் பணியை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டும் செயல்படுத்தும் எண்ணம் உருவானது. அவர் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர், திருமணம் ஆன பின்னர், அனைவரும் சந்திக்கும் பிரச்னையான பரபரப்பான வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவை உண்பதற்கான தீர்வை அளிக்க முடிவு செய்தார்.

ரொட்டிமேடிக்கின் எதிர்காலம்

ரொட்டிமேட்டிக் நிமிடத்திற்கு ஒரு ரொட்டி வீதம் ஒரே நேரத்தில் 20 புத்துணர்வான ரொட்டிகளை, எண்ணெய் விட்டு, ரொட்டியின் தடிமன் மற்றும் ரொட்டி சுடும் அளவு போன்ற விருப்பத்தேர்வுகளையும் வழங்குகிறது.

“முன்-பதிவு பிரச்சாரத்தை 2014ல் நாங்கள் அறிமுகம் செய்த போது ஆயிரம் ஆர்டர்கள் குவிந்தது எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியதாக” நினைவுகூர்கிறார் ப்ரனதி. எங்கள் குழு வேகமாக விரிவடைந்து வருகிறது, தற்போது முப்பதைந்தாக உள்ளது மேலும் வளர்ந்து வருகிறது, முதல்கட்ட முன்-பதிவு நுகர்வோருக்கு மெஷின்களை கொடுக்கும் அடுத்த கட்ட பணிகளை முன்நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். “ஒரு நிறுவனராக எங்கள் குழுவில் தகுதியான மக்களை இணைப்பதே என்னுடைய மிகப்பெரிய குறிக்கோள். நிலையான கண்டுபடிப்பு கலாச்சாரத்தை கட்டமைப்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நல்ல வேலையை செய்யும் ஆர்வத்தோடு குடும்ப உறுப்பினர்களுக்கும் இடமளிப்பது முக்கியம்” என்று விவரிக்கிறார் ப்ரனதி.

முதல் கட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் NRIகள், அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் இநதியர்கள். ப்ரனதி “ரொட்டி அவர்களின் டயட்டில் முக்கியமானது, அதை தயாரிப்பது உண்மையிலேயே ஒரு கலை. அதற்கு நிறைய நேரம் செலவிட வேண்டும், அதனால் அவர்கள் தினமும் புதிதாக ரொட்டிகளை தயாரிக்க முடிவதில்லை” என்று விரிவாகப் பேசுகிறார் ப்ரனதி.

ரொட்டிமேடிக் மிகப்பெரிய புரட்சியை கண்டுள்ளது, ஏனெனில் உலகஅளவில் சமமான பிரெட்கள் டயட்டின் ஒரு பிரிவாக உள்ளது. தென் அமெரிக்காவின் டார்டில்லா முதல் எதியோப்பியாவின் இன்ஜெரியா மற்றும் இத்தாலியின் பியாடினா வரை, ரொட்டிமேடிக் கோடிக்கணக்கான மக்களுக்கு சர்வதேச உணவை அளிப்பதாக உள்ளது.

தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள்

ஒரு ஹார்ட்வேர் தயாரிப்பை கட்டமைப்பது பெண்களை பொறுத்த வரை அசாதாரணமானது என்பதை ஒப்புகொள்வதாகக் கூறுகிறார் ப்ரனதி. அவர் பழமையான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டார், ஏனெனில் ப்ரனதி தான் அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் ஆர்கிடெக்ட் என்பதை மக்கள் நம்பவில்லை. மக்கள் அவர் ஒரு விற்பனை பிரதிநிதி என்றே நினைத்தனர்.

“நான் என்னுடைய சந்திப்புகளுக்கு எல்லாம் மோட்டார் பைக்கிலேயே செல்வேன், ஏனெனில் நான் வித்தியாசமானவர் என்பதை மற்றவர்களுக்கு காட்ட நினைத்தேன்” என்று சொல்கிறார் அவர்.

ப்ரனதி எதிர்பார்த்தது போலவே அது ஒரு சவாலாக இருந்தது. “நான் என்னுடைய கர்ப காலத்தை என்னால் முடிந்த வரை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைத்தேன் ஏனெனில் கர்ப்பிணி என்பதால் கிடைக்கும் முக்கியத்துவத்தை நான் விரும்பவில்லை.” பெண்கள் தங்களின் சாப்பாட்டு மேஜைக்கு கொண்டு வரும் ஒவ்வொரு விஷயமும் தனித்துவமானது தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளார். “பெண்களின் குணத்தோடு செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. ஆண் பெண் குணங்கள் சம அளவில் இருப்பதை அடைய நிறைய பாடுபட வேண்டும்,” என்று ஆலோசனை கூறுகிறார் ப்ரனதி. அனைத்து விஷயங்களுக்கும் 100 சதவீதம் முக்கியத்துவம் அளிக்கும் குணம் உள்ள ப்ரனதி எதற்காகவும் எதையும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்.

ப்ரனதியின் கணவரும் இணை நிறுவனருமன ரிஷி இஸ்ரானி, தொடக்கம் முதலே அவருடைய பயணத்தில் பங்கு வகிக்கிறார். “தொடக்க அண்டுகளில் நான் தனி ஆளாக அனைத்தையும் பார்த்து வந்த சமயத்தில் அவர் தான் எனக்கு மூளையாக செயல்ட்டார், நான் முதலில் என் தயாரிப்புக்கான ப்ரோடோடைப்பை கட்டமைத்தேன். அதன் பின்னர், ஒரு மென்பொருள் வல்லுனரான அவர் எங்கள் தயாரிப்பின் மோசமான சூழ்நிலைகளை சமாளிப்பவராக மாறினார், இந்த நிறுவனத்தை உருவாக்க அவர் என்னோடு முழு நேர ஊழியராக இணைந்த கொண்டார்,” என்று நினைவு கூர்கிறார் ப்ரனதி. ரிஷிக்கு உணவகம் தொடங்க வேண்டும் என்ற நீண்ட கால குறிக்கோள் இருந்தது, அதே சமயம் தங்கள் குடும்பத்திற்கு ஆரோக்கிய உணவளிக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

சவால்களைப் பொறுத்தமட்டில் நீங்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டே, பணிபுரிந்தால் அவற்றிற்கு எல்லை இல்லை. எந்தத் துறையில் வலிமையாக இருக்கிறீர்களோ அதில் தொடர்ந்து பணியாற்றுவதுதான் பிரச்சனைகளுக்கு தீர்வு என்கிறார் ப்ரனதி. “சவால்களை எதிர்கொள்ளும் போது, இருவரும் ஒருங்கே அமர்ந்து விவாதிப்போம். அதுதான் கருத்து இடைவெளியை தவிர்க்க உதவும். அனைத்துதரப்பு தகவல்களையும் தொடர்புக்குள் கொண்டுவரும்போது கருத்து வேறுபாடுகள் குறைய வாய்ப்புள்ளது” என்கிறார் ப்ரனதி.

கண்டுபிடிப்பாளர் உங்களது கண்டுபிடிப்பை பயன்படுத்துகிறாரா? என்ற கேள்விக்கும் ப்ரனதி இப்படி பதில் அளிக்கிறார்: “ஆமாம், சமையலறையில் ரொட்டிமேட்டிக் இயந்திரத்தை வைத்துள்ளோம். நான் கண்டுபிடித்த அந்த இயந்திரம் சொந்த பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது, அதேப்போல் பரபரப்பான வாழ்க்கை சூழலிலும் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றவும் உதவுகிறது”. நவீன யுகத்தில் வாழ்க்கைக்கு இதுபோன்ற கண்டுபிடிப்புகள்தானே தேவையாக இருக்கிறது என்றால் மிகையல்ல.

கட்டுரை: ஸ்மிரிதி மோடி | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்