ஜி.எஸ்.டி. வரிக்கு மாறுவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் சென்னையில் ஏற்பாடு!  

0

சென்னை சேவை வரி ஆணையரகம் III தற்போது உள்ள சேவை வரி செலுத்துவோரை சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது.

2017 ஜூலை முதல் தேதி சரக்கு சேவைகள் வரியை அமல்படுத்துவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகச் சென்னை சேவைகள் வரி ஆணையரகம் III சரக்கு சேவைகள் வரி முறைக்கு மாறும் விழிப்புணர்வு முகாமை இந்த முகாம் செவ்வாய்க் கிழமை (மார்ச் 21) காலை மணி 10.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தற்போதைய சேவை வரி செலுத்துவோர் சரக்கு சேவைகள் வரி வலையத்துக்குள் வருவதை 31.03.2017 – க்குள் நிறைவு செய்ய இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் சேவைகள் சரக்கு வரி முறையில் சேருவதற்கு இந்த முகாமிற்கு வந்து அதில் வழங்கப்படும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விழிப்புணர்வு முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:-

1. எல் அமிக்கேல் கிளப், ராமாபுரம் சென்னை.

2. கஜலட்சுமி திருமண மண்டபம், திருவேற்காடு

3. சிட்கோ வளாகம், திரு.வி.க தொழிற்ப் பூங்கா, கிண்டி

4. அருணா ஹால், ராஜா அண்ணாமலைபுரம்

5. ஹோட்டல் ஹென்கலா, தாம்பரம்

மேலும் வரி செலுத்துவோர் கீழ்க்கண்ட வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரக்கு சேவைகள் வரிமுறைக்கு மாறுவதற்கான வசதிகளை வழங்க சென்னை சேவை வரி ஆணையகம் III தனது தலைமை இடமான நியூரி டவர்ஸ், எண் 2054 – 1, II அவன்யூ, அண்ணாநகர், சென்னை – 40 என்ற முகவரியில் சரக்கு சேவை வரி சேவை மையத்தை அமைத்துள்ளது. (தொ.பெ. 044-26142852/56)

24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் சேவை வரி செலுத்துவோருக்க உதவுவோருக்கென அமைக்கப்பட்டுள்ளது. (இலவச தொலை பேசி எண். 1800 – 1200 – 232, மின்னஞ்சல் : cbecmitra.helpdesk@icegate.gov.in)

சரக்கு சேவைகள் வரி வளையத்திறகென உதவி மையம் உள்ளது. தொலைபேசி எண் – 0124 – 4688999. இந்த வளையத்துக்கான மின்னஞ்சல் முகவரி : help@gst.gov.in

புதிய வரிமுறைக்கு நாடுவதற்கான படிப்படியான விளக்கங்கள் கொண்ட வரி செலுத்துவோர் வழிகாட்டி விவரம் கீழ்க்கண்ட வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. www.aces.gov.in மற்றும் www.cbec.gov.in