இணையத்தில் விண்டோ ஷாப்பிங் அனுபவம்: 'ரெட் போல்கா'

0

இனி வழக்கமான இ.காமர்ஸ் தளங்களை மறந்துவிடலாம். ஃபேஷன் கண்டறிதல் தளங்கள் தான் இப்போது கவனத்தை ஈர்க்கின்றன. பல்வேறு இ-காமர்ஸ் இணையதளங்கள் மற்றும் செயலிகள் இருக்கும் போது பல பிராண்ட்களில் இருந்து சிறந்தவற்றை தேர்வு செய்வது சிக்கலாகிறது. அதனால் தான் ரெட் போல்காவின் நிறுவனரான விகாஷா சிங் (Vishakha Singh) 'ஜோ திக்தாஹாய், வோ பிக்தா ஹாய்’’ "என்ன பார்க்கிறோமோ அதுவே விற்கப்படுகிறது" எனும் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளார்.

"ரெட் போல்கா" (Red Polka), விற்பனையாளர்கள், தயாரிப்புகளை தங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் முன் காட்சிப்படுத்த வழி செய்யும் ஃபேஷன் மற்றும் வாழ்வியல் தேர்வுக்கான இணையதளமாக இருக்கிறது. ரெட் போல்கா இப்போதைக்கு பெண் வாடிக்கையாளர்கள் மற்றும் ஷாப்பிங் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்துகிறது.

விகாஷாவின் தொழில்முனைவு பயணம்

15 ஆண்டுகளாக மார்கெட்டிங் துறையில் இருந்த விகாஷா, தி டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம், சிஎன்பிசி டிவி 18 ஆகிய குழுமங்களில் பணியாற்றியதுடன் டைம்ஸ் நவ் அறிமுகம் மற்றும் பிராண்டிங்கில் உதவியிருக்கிறார். செய்தி சேனலில் பணியாற்றிய காலத்தில் தான் அவர் வாடிக்கையாளர் பழக்க வழக்கங்கள் குறித்து நன்கு அறிந்து கொண்டார். "பிராண்ட்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கங்கள் தொடர்பாக நிறைய ஆய்வு செய்து புரிந்து கொண்டிருக்கிறேன்” என்கிறார் விகாஷா.

இந்த அனுபவமே உங்கள் பிராண்ட் செய்தியை வாடிக்கையாளர் வாங்கும் பழக்கத்துடன் இணைக்க முடிந்தால் அற்புதங்களை நிகழ்த்தலாம் என அவருக்கு புரிய வைத்தது. இதற்கு உதாரணமக டைம்ஸ் நவ் அறிமுகத்தின் போது, வாடிக்கையாளர் பழக்கத்திற்கு ஏற்ப தங்கள் உத்தியை மாற்றிய போது சந்தையின் பங்கு 5 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்ததாக அவர் கூறுகிறார்.

விகாஷா சிங்
விகாஷா சிங்

வாடிக்கையாளர்களின் வாங்கும் மற்றும் நுகர்வு பழக்கங்களை மேலும் சிறப்பாக புரிந்து கொள்ள அவர் பியூச்சர் குழுமத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பிறகு அவர் தனது முதல் நிறுவனமான அரோரா காம்சை துவக்கினார். இந்த காலத்தில் அவர் பல பிராண்ட்களுடன் பணியாற்றி வாங்குபவர்களின் ஈடுபாடு மற்றும் வாங்கும் பழக்கம் எப்படி பிராண்ட் விற்பனையை அதிகமாக்குகிறது என புரிந்து கொண்டார்.

விண்டோ ஷாப்பிங் அனுபவம்

வாங்கும் பழக்கத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதையும், ஆன்லைன் மற்றும் சமூக ஊடக தளங்கள் ஒவ்வொருவரையும் மார்கெட்டிங்கில் ஈடுபடுவராக மாற்றி இருப்பதாக அவர் உண்ர்ந்தார். "பெண்களின் வாங்கும் அனுபவத்தில் நான் அதிக கவனம் செலுத்தினேன். எனது ஆய்வுகள் மூலம் பெண்களுக்கு தேர்வுகளும் வாய்ப்புகளும் தேவை என தெரிந்து கொண்டேன்” என்கிறார் விகாஷா. இதனால் தான் விண்டோ ஷாப்பிங் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

பெண்கள் விண்டோ ஷாப்பிங் அனுபவத்தை பூர்த்தி செய்து கொள்ள உதவும் வகையில் அவர் மனதில் ரெட் போல்கா எண்ணம் உதயமானது. "பெண்களின் வாங்கும் பழக்கத்தில் அவர்களை அறியாமல் விண்டோ ஷாப்பிங் முக்கிய பங்கு வகிக்கிறது. டின்னருக்கு வெளியே செல்லும் போது கூட வழியில் ஒரு கடை கண்ணில் பட்டால், அவர்கள் அங்கு தெரியும் பொருட்களை ஆர்வத்துடன் பார்ப்பார்கள்” என்கிறார் அவர்.

புதிய பொருட்களையும், மாறுபட்ட பொருட்களையும் பார்த்து தெரிந்து கொள்ளும் பெண்களின் தேவையை ரெட் போல்கா பூர்த்தி செய்கிறது என்கிறார் அவர்.

விற்பனையாளர்களின் நோக்கில் பேசும்போது, இன்றைய விற்பனையாளர்கள் பொருட்களை விற்பனை செய்ய மாறுபட்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிகளை கொண்டுள்ளனர். ஆனால் இந்த வழிகள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு பெரிதாகாவும், பலவகைப்பட்டதாகவும் ஆகிவிட்டன என்கிறார்.

வாடிக்கையாளர்கள் தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு எல்லாம் சிக்கலாக இருக்கிறது என்கிறார் அவர். இதன் காரணமாகவே இ-காமர்ஸ் இணையதளங்களில் வருகை தருபவர்களில் வாங்கும் விகிதம் 2-3 சதவீதமாகவே இருக்கிறது என்கிறார் அவர்.

விற்பனையாளர், வாங்குபவர்களுக்கு உதவி

வாடிக்கையாளர்கள் கவனமாக தேர்வு செய்யப்பட்ட வாழ்வியல் மற்றும் வீட்டு உபயோக வாய்ப்புகளை தெரிந்து கொள்ளவும், விற்பனையாளர்கள் தேவையில்லாத சிக்கலை குறைத்துக்கொள்ளவும் ரெட் போல்கா உதவுகிறது. "விற்பனையாளர்களுக்கு வர்த்தகத்தை உறுதி செய்வது தான் நோக்கம். அது இ-காமர்சாக தான் இருக்க வேண்டும் என்றில்லை” என்கிறார் விகஷா.

நாங்கள் வடிவமைப்புகளை தேர்வு செய்து உங்கள் ரசனைக்கு ஏற்ப அளிக்கிறோம் என்று ரெட் போல்கா சொல்கிறது. நாங்கள் விருப்ப வரைபடம், ஆய்வு மற்றும் தேர்வு செய்த வடிவமைப்புகள் என எல்லாவற்றையும் கலந்து அளிக்கிறோம். ஒவ்வொரு வாரமும் ஒரு கருப்பொருளுக்கு ஏற்ப இந்த வடிவமைப்புகள் அளிக்கப்படுகின்றன.இவற்றுக்கு மத்தியில் ஆர்வத்தை உண்டாக்குகின்றனர்.

சிக்கலான தோற்றத்துக்கு நடுவே கவனம் தேவைப்படும் பல்வேறு பிராண்ட்களுக்கு ரெட் போல்கா வாடிக்கையாளர்களை அனுப்பி வைக்கிறது. "விருப்ப வரைபடம் மற்றும் வாங்குபவர்களின் பழகங்களில் கவனம் செலுத்துகிறோம். எனவே தனிப்பட்ட ரசனைக்கேற்ப கருப்பொருளை மாற்றுகிறோம்” என்கிறார் விகாஷா.

இதற்கு உதாரணமாக கோடைக்கான கருபொருளாக எளிதாக சுவாசியுங்கள் எனும் கருப்பொருளை சொல்கிறார். இவை எல்லாம் ஆடைகள் பற்றியது- இந்த ஆடைகளுடனான துணை பொருட்கள் பற்றி, இவற்றை எப்போது பயன்படுத்தலாம் என்பது பற்றி கட்டுரைகள் உள்ளன. வரைபடத்தை பார்த்த போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பதை தெரிந்து கொண்டு அலுவல் சூழலில் அணியக்கூடிய ஆடைகளில் கவனம் செலுத்தும் கட்டுரைகள் இடம்பெற்றன.

ரெட் போல்கா, விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்த குறைந்த கட்டணம் பெற்றுக்கொண்டு, விற்பனையில் கமிஷன் பெறுவதை வருவாய் மாதிரியாக கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். ஏற்கனவே 35 பிராண்ட்கள் ரெட் போல்காவில் பதிவு செய்து கொண்டுள்ளன.

இந்த தளத்தில் 30 சதவீத வாடிக்கையாளர்கள் மீண்டும் வருகை தருகின்றனர். இது நல்ல அறிகுறி என்கிறார் விகாஷா. தாங்கள் அளிக்கும் உள்ளடக்கம் ஈர்ப்புடையாதாக இருப்பதாக இதற்கு அர்த்தம் என்கிறார் அவர். இப்போதைக்கு ரெட் போல்கா நெட்வொர்கிங் மார்கெட்டிங் மாதிரியை பின்பற்றுகிறது.

நிதி உதவி

ரெட் போல்கா 2015 ஜனவரியில் துவங்கியது. ஏஞ்சல் முதலீட்டாளர்களீடம் இருந்து ரூ.16 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்த நிதி விகாஷா தேடிச்சென்றது அல்ல. இந்த பிராண்ட் பற்றி கேள்விபட்ட நண்பர் ஒருவர் நிதியை முதலீடு செய்துள்ளார். இந்த குழு மேலும் பலரை பணிக்கு அமர்த்திக்கொண்டு விரைவில் செயலி வடிவை அறிமுகம் செய்ய உள்ளது. ரெட் போல்கா செயற்கை அறிவில் (Artificial Intelligence ) அனுபவம் உள்ள ஒருவரை சிடிஓவாக நியமித்துள்ளது. இதன் மூலம் விருப்ப வரைபட ஆய்வை மேம்படுத்த உள்ளது. மார்கெட்டிங் முயற்சிகளையும் தீவிரப்படுத்தும் அதே நேரத்தில் வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஃபேஷன் கண்டறிதல்

கடந்த சில மாதங்களில் ஃபேஷன் கண்டறியும் இணையதள பிரிவில் வளர்ச்சி மற்றும் முதலீடுகள் அதிகரித்துள்ளன. வூல்பர் (Woolpr), ஹீலியான் வென்சர்சிடம் இருந்து நிதி பெற்றுள்ளது. ஸ்னேப்டீல் டூஸ்டானை (Doozton) வாங்கியுள்ளது. ரோபோசோ (Roposo a ) நிதி பெற்றுள்ளது. இவை எல்லாம் வாடிக்கையாளர்கள் தேர்வை நாடுவதை குறிக்கிறது. இ-காமர்ஸ் இணையதளங்கள் அதிகரிக்கும் நிலையில் அவற்றில் இருந்து தனித்து நிற்பதும் அவசியமாகிறது.

இணையதள முகவரி: RedPolka