நாள்பட்ட நோய்களை முன்கணிப்பு செய்யும் தொழில்நுட்ப தொடக்க நிறுவனம்!

0

மருத்துவர்கள் தேடல், மருத்துவ பரிசோதனை மையங்கள் கண்டுபிடித்தல், மருந்துகள் வாங்குதல் மற்றும் இதர சேவைகளை தனித் தனியே தேடுவதை விட அவற்றை ஒன்று சேர பெறுவது மிகவும் எளிதாகி விட்டது ஆனால் பெரும்பாலான சுகாதார நலனில் பணிபுரியும் தொழில் முனைவோர், அதில் இணைப்புநிலை உருவாக்குவதையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளனர். ஹெல்த்நெக்ஸ்ட்ஜென், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உதவியுடன் பொறி கற்றலில் (machine learning) உள்ள மேம்பட்ட புள்ளியியல் (advanced statistics) கொண்டு முன்கூட்டியே நோய்களை அறியச் செய்கிறது.

இந்நிறுவனம், மருத்துவ அளவுகோல்களுடன் வேறு சில மக்கள் தொகை சார் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முன் கூட்டியே நோய்கள் குறித்து அறியச்செய்கிறது. தற்போதைய மாதிரியானது நாள்பட்ட நோய்களான இருதய நோய்கள், நீரிழிவு நோய், விழித்திரை சார்ந்த கண் நோய்கள், சீழ்பிடிப்பு பிரச்சனைகள் மற்றும் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது போன்றவற்றிற்காக செயல்படுகிறது.

பல நோய்கள் குறித்து அறிந்துகொள்ள மக்கள் தொகை சுகாதார தீர்வுகளை ஹெல்த்நெக்ஸ்ட்ஜென் வழங்குவதுடன் குறிப்பிட்ட நோய்கள் பரவுவதற்கான புள்ளி விவர கணிப்பையும் வழங்குகிறது. இத்தளத்தில், இது போன்ற பகுப்பாய்வு கணிப்புகளை (Predictive Analytics) தவிர, நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவம், மருத்துவர்கள் தொடர்பு மற்றும் அவர்களின் முக்கியமான உறுப்புகளை கண்காணிப்பதுடன் அவர்களின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது.

தொடக்க நாட்கள்

கடந்த 15 ஆண்டுகளாக வெங்கடேஷ் ஹரிஹரன் மற்றும் சுரேஷ் மல்லன்திரா ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக திகழ்கின்றார்கள். இருவரும் சேர்ந்து, 2015 ஆம் ஆண்டு, இந்தியாவின் சுகாதார நலன் மற்றும் சிகிச்சை முறையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று விவாதிக்கத் தொடங்கினர். ஸ்டான்போர்ட் புர்ஹம் இல் சுகாதார நல ஆராய்ச்சியாளராகவும் மற்றும் டொரான்டோ பல்கலைகழகத்திலும் பணிபுரிந்த அனுபவங்களை ஹெல்த்நெக்ஸ்ட்ஜென் க்கு கொண்டு வர வெங்கடேஷின் சகோதரர், சந்தோஷ் ஹரிஹரன் முடிவு செய்தார்.

இது முதலில், பயிற்சி மேலாண்மை மற்றும் மின்னணு மருத்துவ பதிவேடுகள் எனும் இஎம்ஆர் (Electronic Medical Records - EMR) வழங்கும் தளமாக தொடங்கப்பட்டது. இந்தியாவில், நோயாளிகளின் மருத்துவ நலனை மேன்படுத்த மின்னணு மருத்துவ பதிவேடுகள் எனும் இஎம்ஆர் கிடைக்க வழிவகை செய்வதே மிகப் பெரிய சவாலாக மூவரும் கருதினார்கள்.

"இஎம்ஆர் கள் மூலமாக கிடைக்கக் கூடிய தகவல் குறிப்புகளை கொண்டு எங்கள் செய்முறைகள் வாயிலாக நோய் முன்கணிப்பு, தீவிர சிகிச்சைக்கான முன்னுரிமை தகவல் வழங்குதல் மற்றும் மூன்றாம் கட்ட சிகிச்சைக்கான ஆயத்த நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும். இந்தியாவில், கட்டாய மின்னணு மருத்துவ பதிவேடுகளை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மற்றும் குறைந்த விலையில் சுகாதார நலன் வழங்க முடியும்", என்கிறார் வெங்கடேஷ். 
தொடக்க குழு@ஹெல்த்நெக்ஸ்ட்ஜென்
தொடக்க குழு@ஹெல்த்நெக்ஸ்ட்ஜென்

சுழற்சி மையம் மற்றும் சேர்த்தல்

மூவரும் நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவிகரமாக இருக்கும் வகையில் 'ஹெல்த்நெக்ஸ்ட்ஜென்'னை நுண்ணறிவுத் தளமாக உருவாக்க முடிவு செய்தனர். மருத்துவ நுண்ணுயிர்கள் சார்ந்த தளம் என்பதால், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கொண்ட வல்லுனர்கள் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தார்கள். அவர்களின் தளத்தில், நோயாளிகளின் சிகிச்சையை முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் தனிப்பட்ட நோயாளி மையப்படுத்திய கவனிப்பை வழங்க முடியும்.

இந்தத் தளத்தில் பல்வேறு விதமான நோய் மாதிரிகள் மற்றும் மக்கள் தொகை சுகாதாரத்தை, அமைப்பு அளவிலும் , வட்டார மற்றும் தேசிய அளவிலும் கண்காணிக்க முடியும் என்று மேலும் கூறுகிறார் வெங்கடேஷ்.

கூட்டக் குழுவை உருவாக்குதல்

குழுவில், தொழில்நுட்ப உருவாக்குனர்களுடன் டொராண்டோ நகரைச் சார்ந்த முதுகலை மரபியல் ஆய்வாளரும் (பி.எச்டி மரபியல் தரவு விஞ்ஞானி) இடம் பெற்றுள்ளார்.

"வெகுவிரைவில் சில மருத்துவர்கள் மற்றும் வர்த்தக ஆலோசகர்களை பணியமர்த்தவுள்ளோம். ஒட்டுமொத்தமாக நாங்கள் டலாஸ், டொராண்டோ மற்றும் பெங்களுருரை அடிப்படையாகக் கொண்ட சர்வதேசக்  குழுவாக செயல்பட்டு சுகாதார நலனில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த செயல்படுகிறோம்" என்கிறார் வெங்கடேஷ்.

பகுப்பாய்வு தளத்தில் சில சேவை சார்ந்த போட்டியாளர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள், ஆனால் இந்தியாவில் அப்படி எதுவும் இல்லை. என்கிறார் வெங்கடேஷ். அவர் மேலும் கூறுகையில், அவர்கள் சுகாதார நல கணிப்பு பகுப்பாய்வு மற்றும் மக்கள் தொகை சுகாதார பிரிவில் முதலிலேயே தளம் அமைத்ததால், தங்களுக்கு சாதகமான சூழல் இருப்பதாக கருதுகிறார்.

இந்தியாவில், நோயாளிகள் மேலாண்மை களத்தில் போட்டி இருந்தாலும், தனித் தன்மை வாய்ந்த கணிப்பு அணுகுமுறையில் நோயாளி-மருத்துவ தகவல்களை கொண்டு அடித்தளம் அமைத்ததன் மூலம் சந்தையில் வெகுவாக வேறுபட்டு காணப்படுகிறார்கள்.

வருவாய் மாதிரி 

ஹெல்த்நெக்ஸ்ட்ஜென், சாஸ் (SaaS ) சார்ந்த வருவாய் மாதிரி கொண்டதாகும். அதாவது, நோயாளிக்கு ஏற்ப கட்டணம் பெறுவது ( இஎம்ஆர், சார்பு செயல்பாடு மற்றும் வழங்குநர்களுக்கான அதன் கணிப்பு பகுப்பாய்வு).

அதிநவீன இஎம்ஆர் கொண்டுள்ள சில வழங்குனர்கள், நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவ விவரங்கள் மற்றும் தரவு அளவு அடிப்படையில் ஒவ்வொரு செயல்படுத்தலுக்கும் கணிப்பு பகுப்பை மேற்கொள்கிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களாக நடைமுறைபடுத்தப்பட்ட அவர்களின் புதிய செயற் திட்டத்தில், பிறகு தங்களின் பீட்டா தளத்தை (எச்என் ஜி @மேனேஜ்) (HNG@Manage) தற்போதுள்ள 15,000 நோயாளிகளின் எச்என் ஜி@கிளினிக் செயலிக்கு மாற்றினார்கள்.

இவை என்ன செய்யும் ?

"இந்தியாவில் (அமெரிக்காவிலும் கூட) நாங்கள் முக்கிய மருத்துவமனைகளுடன் அவர்களின் மக்கள் தொகை விவரங்கள் அடிப்படையில் கணிப்பு பகுப்பாய்வு பயன்பாட்டை செயல்படுத்த அவர்களுடன் கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம். வழங்குனர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க ஆர்வத்தினை காண்கிறோம். மேலும் அடுத்த சில மாதங்களில் எங்கள் தொழில்நுட்பத்தினை நடைமுறை படுத்தவுள்ளோம்", என்கிறார் வெங்கடேஷ். 

இரண்டு முக்கிய செயற் பொருட்கள் :

1. எச் என் ஜி @எக்ஸ்ப்ளோர் (HNG@Explore) என்பது அவர்களின் பொறி கற்றல் எனும் மெஷின் லேர்னிங் பகுப்பாய்வு பயன்பாடு ஆகும். தற்போது அல்காரிதம் கொண்டு இடர் அடுக்கமைவை செயல்படுத்தி வருகிறது. இதனைக் கொண்டு மக்கள் தொகை அளவிலும், நோயாளி அளவிலும் கிராஃபிகல் விஷுவலைசேஷன்னுக்காக பிஐ( BI ) உபயோகிக்கப் படுகிறது. "எங்கள் நீண்ட கால இலக்கானது,நோயாளியின் மருந்தளித்தல் விவரங்களை மேலும் பயன்படுத்தி, எந்த ஒரு நோயாளிக்கும் அங்கீகாரம் பெற்ற சிறந்த கூட்டு மருந்துகளை (நியாயமான விலையில்) கணிக்க முடியும்" என்கிறார் வெங்கடேஷ்.

2. எச்என் ஜி @மேனேஜ் (HNG@Manage)- என்பது நோயாளி அளவிலான மின்னணு சுகாதார பதிவு ஆகும். இது நோயாளியின் மருந்து உபயோகிப்புகளை கண்காணிப்பதுடன் நினைவூட்டலும் அளிக்கும். இரு செயல்பாடுகளுமே மைக்ரோ சாப்ட் ஆசூர் தளத்தில் இயங்குகிறது.

எதிர்கால திட்டங்கள்

இந்த ஆண்டு, இந்தியாவில் உள்ள முன்னணி சுகாதார நலன் வழங்குவோர்களுடன் தங்கள் ஆக்கத்தினை ஒன்றிணைக்க எண்ணியுள்ளது. மேலும் இந்த குழுவானது, ஐ ஓ டி எனும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் டிவைஸ் ஒருங்கிணைப்பு உட்பட பல மூல இடங்களிலிருந்து வரும் மருத்துவ மற்றும் முக்கிய தகவல் சேகரிப்புகளை விரிவாக்கவும் தானியக்கவும் குறிப்பிடத்தக்க திட்டங்கள் வைத்திருக்கிறது.

கூடுதல் நோய் மாதிரிகள் மற்றும் தானியங்கி உருவ பிம்பம் சார்ந்த (எக்ஸ்-ரே , சிடி, எம்ஆர் ஐ, உயிரணு சார்ந்த உருவ பிம்பங்கள்) நோய் கண்டறிதல் மற்றும் கணித்தல் போன்றவற்றில் ஆராய்ச்சிகளை விரிவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

"தகவல் சேகரிப்பிற்கு ஏதுவாக நாங்கள், இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள முக்கிய வழங்குனர்களுடன் பணியாற்ற உள்ளோம். எங்கள் கணிப்பு கற்றல் முறைகள் கொண்டு சுகாதார நலனை மேம்படுத்தவும், குறுகிய மருத்துவ சிகிச்சை முறைகளினை கையாளுவதன் மூலம் சுகாதார நல செலவுகளை கட்டுப்படுத்துவோம்", என்கிறார் வெங்கடேஷ்.

யுவர் ஸ்டோரி பார்வை 

தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் 2000-2015 ஆண்டுகளுக்கான தகவல்களின் படி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களுக்கான இந்தியாவிற்கான நேரடி அந்நிய முதலீடுகள் மொத்தம் 3.21 பில்லியன் டாலர்கள் ஆகும். ஐபிஇஎஃப் (IBEF) கணிப்பின் படி, 2015 ஆம் ஆண்டில், இந்திய சுகாதார நலச் சந்தையின் மதிப்பு கிட்டத் தட்ட 100 பில்லியன் டாலர்கள் எனவும் 2020 ஆம் ஆண்டு 280 பில்லியன் டாலர்கள் அடையும் எனவும், 22.9 சதவீதம் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிகம் (CAGR) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த சந்தையில், சுகாதார நலன் வழங்குதல் உட்பிரிவானது 65 சதவீதம் கொண்டுள்ளதாக திகழ்கிறது.

ஹெல்த்நெக்ஸ்ட்ஜென் வெகுவாக வளர்ந்து வந்தாலும், பல அதிக நிதி முதலீடு செய்யப்பட்ட தொழில் முனைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முன்பாக, ஆன்லைன் ஆர்டர்கள் மற்றும் இ-காமர்ஸ் பிரிவிகளில் தடம் பதித்த பிராக்டோ; கடந்த ஆண்டு இன்ஸ்ட ஹெல்த் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. தங்களின் தளத்தினை விரிவாக்கம் செய்ய தகவல் விவரங்களை நாடுவதாக, யுவர் ஸ்டோரி யிடம் கூறினார், சஷான்க் என்டி, இணை நிறுவனர், பிரக்டோ.

இணையதள முகவரி