145 பட்டங்கள் பெற்ற சென்னை பேராசிரியரை தெரியுமா உங்களுக்கு?

0

முதுகலை பட்டம் பெற்றுவிட்டாலே பெருமை என நினைக்கும் நம்முள் சிலர் சென்னையைச் சேர்ந்த இந்த பேராசிரியரை பற்றி அறிந்தால் கண்டிப்பாக வாயை பிளப்போம். அப்படி பேராசிரியர் விஎன்.பார்த்திபன் என்ன சாதித்து விட்டார் என்கிறீர்களா? ஒரு பட்டத்தை வாங்கவே அரியர்ஸ் வைக்கும் இளைஞர்கள் மத்தியில், பேராசிரியர் பார்த்திபன் கையில் 145 கல்வி பட்டங்கள் வைத்திருக்கிறார் என்றால் சும்மாவா! பல துறைகளில் பட்டங்களை வைத்திருக்கும் இவர் வாழ்நாள் முழுதும் சேர்த்துள்ள அறிவு சொத்து இது என்றே சொல்லலாம்.

நன்றி: Huffington Post
நன்றி: Huffington Post
நன்றி: India Today
நன்றி: India Today

55 வயதாகும் சென்னைவாசியான பார்த்திபன், சுமார் 35 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, படித்து இந்த முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார். இவரிடம் 12 எம்.பில், 9 எம்பிஏ, 10 எம்ஏ, 8 எம்காம், 3 எம்எஸ்சி என்று வரிசையாக விதவிதமான பட்டங்கள் உள்ளது. தனது கல்வி பயணம் பற்றி ’சண்டே இந்தியன்’ இடம் பேசிய பேராசிரியர் பார்த்திபன்,

“நான் வடக்கு சென்னையில் சாதரண குடும்பத்தை சேர்ந்தவன். எனது முதல் கல்லூரி டிகிரியை நான் மிகவும் கஷ்டப்பட்டு முடித்தேன், நீதித்துறையில் பணிக்கு சேர்ந்தேன். அதன்பின் எங்கெல்லாம் டிசி தேவையில்லையோ அங்கெல்லம் ஒரே நேரத்தில் பட்டம் படிக்க பல கோர்சுகளுக்கு விண்ணப்பித்தேன். கடந்த 30 ஆண்டுகளாக பரிட்சைக்கு தயார் செய்தும், புது கோர்சுகளுக்கு விண்ணப்பித்தும் என் வாழ்க்கையை கழித்துள்ளேன். பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகளில் நான் தேர்வு எழுத அல்லது என் ஆராய்ச்சி பேப்பர்கள் எழுதவே செலவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார். 

பேராசிரியர் பார்த்திபன் 100க்கும் மேற்பட்ட பாடங்களை பல கல்லூரிகள்ளுக்குச் சென்று கற்பிக்கிறார். உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் அவர் படிக்கிறார். இத்த்னை பட்டங்கள் மற்றும் முதுகலை பட்டங்களை கொண்டுள்ள பார்த்திபனுக்கு கடினமாக இருக்கும் ஒன்றே ஒன்று கணக்கு பாடமாம். அதனால் அதில் அவர் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லையாம்.

மகிழ்ச்சியுடன் காணப்படும் பார்த்திபன், தன்னுடைய இத்தனை வெற்றிகளுக்கும் தன் மனைவியே காரணம் என்கிறார். ஏனெனில், இவர் படிப்பில் முழு கவனம் செலுத்துவதால் குடும்ப பொறுப்பு மற்றும் இரு குழந்தைகளை வளர்க்கும் முழு பொறுப்பையும் அவர் ஏற்று நடத்தியுள்ளார். பார்த்திபனின் மனைவி ஒரு வங்கியில் பணிபுரிகிறார், அவரிடமும் 9 டிகிரி இருக்கிறதாம். வருங்காலத்தை பற்றி பேசிய பார்த்திபன்,

“நான் இதோடு நிறுத்திக்கொள்ளமாட்டேன். மேலும் புதிய கோர்சுகளில் சேர திட்டமிட்டுள்ளேன்...” என்று ஹவ்விங்க்டன் போஸ்டுக்கு பேட்டி அளித்து, எல்லாரையும் மீண்டும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

கட்டுரை: Think Change India