தொடக்கநிலை நிறுவனங்களின் வருவாயை மேலாண்மை செய்ய உதவும் 'ப்ளுசினர்ஜி'

0

கட்டணம், பணம் எல்லாம் கேஷ் ரிஜிஸ்டருக்கு முக்கியம். பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எதுவும் தொழில்முனைவோர் காதுகளுக்கு இனிமையாக இருக்காது. எப்படி இருந்தாலும், தொடக்கநிலை நிறுவனங்களின் இன்றைய சூழல் என்பது, வருமானத்தைப் பெருக்குதல் மற்றும் பணமாக்குதல். அதேநேரத்தில் பல தொழில்முனைவோரும் பல சிறந்த எண்ணங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வருமானத்திற்கான முன்மாதிரிகளும், பணமாக்குதலும் தேவைப்படுகின்றன. இங்குதான் "ப்ளுசினர்ஜி" (BluSynergy) உதவிக்கு வருகிறது.

பில்லிங், அறிவிப்பு மற்றும் கட்டணத்தை சேகரித்தல் ஆகியவற்றை மேகக்கணி சார்ந்து செயல்படும் முறைதான் ப்ளுசினர்ஜி. இந்தத் தளம் அமைப்புகள், குறிப்பாக தொடக்கநிலை நிறுவனங்கள், பில்லிங்கில் பல்வேறு வகையான வரிசைமாற்றங்கள் மற்றும் சேர்க்கைகளை வைத்து வருமான மேலாண்மையை மேம்படுத்த உதவுகிறது. நேரடியாக பணத்தைச் செலுத்தி ஆர்டரைப் பெறும் வசதியை குறைத்து, வசதியான ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் கட்டணங்களைப் பெறும் முறையை அறிமுகப்படுத்துகிறது.

அடிப்படைகளை கண்டறிதல்

ப்ளுசினர்ஜியை தொடங்கும் எண்ணம் சன்னி தண்டசரிக்கு, அவர் அமெரிக்காவில் வேலைபார்க்கும்போது உருவாகியது. நிதி மற்றும் பில்லிங் முறைகளுக்கான தொழில்நுட்ப நிறுவனங்களில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். பல்வேறு சேவைகளை அளிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களை அவர் பார்த்திருக்கிறார். முதலீட்டாளர்களின் ஆர்வத்தையும் அறிந்தார். ஆனால் பணத்தை உருவாக்குதலில் உள்ள போதாமையையும் சன்னி உணர்ந்துகொண்டார்.

அது மிகுவம் வெளிப்படையாக இருந்தது. பெரும்பாலான நிறுவனங்களுக்கு வருமானத்தைப் பெருக்குவதற்கான முன்மாதிரி தேவையாக இருந்தது. இந்த நிறுவனங்களுக்கு சந்தையின் தேவைகளைச் சார்ந்து மாற்றம் செய்ய வேகமும் நெகிழ்வும் தேவையாக இருந்தது. ஆசியா போன்ற வளரும் பொருளாதாரத்தில் இந்தியாவின் மீது சிறப்பு கவனம் கொண்டு, பில்லிங் மற்றும் கட்டணத்தை சேகரிக்கும் முறையை வலுப்படுத்தவேண்டும் என்று சன்னி நினைத்தார்.

இந்த எண்ணத்தை சன்னி, தன் நீண்டகால நண்பர் மிருதுள் பிரகாசுடன் பகிர்ந்துகொண்டார். அவர் இன்சூரன்ஸ் துறையில் வேலைபார்த்தவர். இன்சூரன்ஸ் துறை ஐஆர்டிஏவால் (இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) கண்டிப்பாக கண்காணிக்கப்பட்டது. இந்த பிஸினஸ் முன்மாதிரி நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை. குறைந்தபட்ச வருமானத்திற்கான சான்றளிப்பது தொடர்பாக ஐஆர்டிஏ விதிகளை அளித்தது. அதனால், அவரும் சன்னியுடன் சேர்ந்து 2014ஆம் ஆண்டு ப்ளுசினர்ஜியை தொடங்கினார்கள்.

எதார்த்தமான முன்மாதிரிக்கான பணி

“பில் அறிவிப்புகள்( இமெயில், எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்ஸ்) தொடக்க நிலை நிறுவனங்களுக்கு பெரிய கம்பெனிகள் போல நடந்துகொள்வதற்கான அம்சமாக இருந்தது. எங்களுடைய வாடிக்கையாளர்கள், தங்கள் கட்டணத்திற்கான பட்டியலை குரல் அறிவிப்பு மூலம் பெற்றார்கள். எங்களுடைய தரமான அறிவிப்பு என்பது இமெயில் வழியாகத்தான். எஸ்எம்எஸ் மற்றும் குரல் அறிவிப்புகள் பிரிமியம் தயாரிப்புகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது” என்கிறார் 43 வயதான மிருதுள்.

ப்ளுசினர்ஜி என்பது கட்டணம் செலுத்துவதற்கான எதார்த்தம். கடைக்கோடியில் இருக்கும் நுகர்வோரும் நாடு முழுவதும் வங்கிக்கிளைகளில் கிரெடிட், டெபிட் மற்றும் இணைய வங்கிச் சேவை ஆனால் வரைவோலை, பணம் மற்றும் காசோலை மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்தமுடியும். அதற்கான ரசீதையும் உடனே பெற்றுக்கொள்ளலாம்.

இது வங்கிகளின் மைய வங்கிச் சேவை மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. “நுகர்வோர்களின் பயன்பாட்டுக்கு வசதியாக 60 வங்கிகளில் கட்டணம் செலுத்தவதற்கான வசதிகள் உள்ளன. கடைக்கோடி பயனாளிகளுக்கு மட்டுமல்ல தொழில்களுக்கும் பயன்படும்” என்கிறார் மிருதுள்.

அமேசான் மேகக்கணினியுடன் இணைந்து தொழில்நுட்பச் சேவையை அளிக்கிறார்கள். அவர்களிடம் மிகவும் வசதியான தயாரிப்பு இருப்பதாகவும், இது மேலும் சேல்ஸ்ஃபோர்ஸ் ஆப் மற்றும் குயிக்புக்ஸ்ஆப்ஸ்.காம் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் மிருதுள் கூறுகிறார். “குயிக்புக்ஸில் நாங்கள் மட்டுமே பில்லிங் ஆப்ஸாக இருக்கிறோம். இந்தியாவின் கட்டணங்களுக்கான வாசலாக கட்டணங்களை ஏற்றுக்கொள்கிறோம்” என்கிறார் மிருதுள்.

முக்கியமான பிரச்சினைகள்

எப்படி இருந்தாலும், எந்த தொழில்நுட்பத்தின் சுற்றுச்சூழலும், நுகர்வோர்களுக்கு முழுமையான சேவையை அளிக்கக்கூடிய சரியான பங்குதாரர்களைத் தேடுகின்றன. அது விரிவான நடைமுறைக்கான சாத்தியங்களை உள்ளடக்கி இருக்கவேண்டும். இந்த வகையில், ப்ளுசினர்ஜிக்கு சரியான பங்குதாரரை தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேநேரத்தில் நுகர்வோர்களுக்கு தேர்வுகளில் கட்டுப்பாடு இல்லை.

ஆரம்பத்தில் ப்ளுசினர்ஜி சந்தையில் முன்னணயில் இருக்கும் கட்டணச்சேவை வெளியை பகிர்ந்துகொண்டது. பின்னர் இந்தியாவின் அனைத்து முக்கியமான கட்டணச் சேவை நிறுவனங்ளுடன் கைகோர்த்தது.

கடந்த அக்டோபர் 2015 நிலவரப்படி ப்ளுசினர்ஜி, 10 கோடி ரூபாய் மதிப்பிலான பில்லிங் சேவையை அளித்துள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான இன்வாய்ஸ்களை உருவாக்கியுள்ளது. 2014ம் ஆண்டின் இறுதியில் ப்ளுசினர்ஜி மொத்த நிகர விற்பனையில் 20 கோடி ரூபாயை அடைந்தது. டிசம்பர் 2015ல் அவர்கள் 60 கோடி ரூபாய் மதிப்பிலான சேவையை அளித்துள்ளார்கள்.

வளர்ச்சிக்குத் தேவைப்படும் தொடர்புகள்

சில ஆரம்பக்கட்ட போராட்டம் இருந்தது. வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பல காரணங்கள் இருந்தன. அந்த தயாரிப்பைப் பற்றிய விழிப்புணர்வு அவசியமாக இருந்தது.

வளர்ச்சியை அதிகரிக்கத் தேவைப்படும் பலவகையான முயற்சிகளை மிருதுள் வரிசைப்படுத்துகிறார்.

அரசு முயற்சிகள்: இந்தியாவில் பரிமாற்றத்திற்கு பலவகையான சான்றுகள் தேவைப்படுவதால் பரிமாற்றம் என்பது மிகவும் இறுக்கமாக இருக்கிறது. இப்போதும் எல்லாமும் பணம் எலெக்ட்ரானிக்காக மாறிவருவதால் பணத்தின் தேவை குறைந்துவருவதாக மிருதுள் நினைக்கிறார். பல்வேறுவகையான கிரெடிட், டெபிட் கார்டு பணப்பரிமாற்றத்திற்கான டிடி ஆடரை (டிக்கெட் டெபாசிட் ரெசிப்ட்) அரசு குறைக்கவேண்டும்.

இ காமர்ஸ்: ஆன்லைன் வழியாக பரிமாற்றம் நடப்பது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. இ-வணிகத்தில் முன்னணியில் உள்ளவர்கள் சில மாதங்களாக அதனை உற்சாகப்படுத்துகிறார்கள். நாளிதழ்களின் முதல் பக்கங்களில் ஆன்லைன் விற்பனைகள் பற்றி வரும் விளம்பரங்கள் ஆன்லைன் வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

வசதி: சில மெளஸ் கிளிக்குகள் மூலமாக ஒட்டுமொத்த கட்டணத்தை செலுத்தும் சிறப்பு வசதியை ப்ளுசினர்ஜி ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ப்ளுசினர்ஜி, இரண்டாவது சுற்றில் முதலீட்டு நிறுவனங்களான பிரிவோ டெக்கார்ப் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏஞ்சல் மூலம் 2 லட்சம் டாலரை முதலீடாகப் பெற்றது. இந்த முதலீட்டைக் கொண்டு தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதோடு, சந்தையின் பல்வேறுபட்ட தொழில்துறைகளிலும் அதனை எடுத்துச்செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக மிருதுள் கூறுகிறார்.

ப்ளுசினர்ஜியை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த அந்தக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அவர்களுடைய தயாரிப்புத் தொகுப்பை மேம்படுத்தவும், நுகர்வோர்களிடம் அதற்கு முக்கியத்துவமிக்க மதிப்பை ஏற்படுத்தவும் உழைத்துவருகிறார்கள்.

கட்டண வெளி

பல்வேறு நாளிதழ் மற்றும் சந்தை ஆய்வு அறிக்கைகளின்படி பெரும்பாலான பணமற்ற கட்டண பரிமாற்றங்கள் மின்னணு சில்லறை விற்பனை மூலம் நடந்திருக்கிறது.

உண்மையில், 2015 ஆம் ஆண்டின் 71 சதவிகித பணமற்ற பரிமாற்றத்திற்கு அது பங்களிப்பு செய்திருக்கிறது. டேஸ்இன்போ அறிக்கையின்படி, ஒப்பீட்டு அளவில், ப்ரிபெய்ஸ்ட் கருவிகளின் பங்களிப்பு 21, 342 கோடி ரூபாய். இது பணமற்ற பரிவர்த்தனையில் ஒரு சதவிகிதம்கூட இல்லை.

ஒரு அறிக்கையின்படி, பணமற்ற பரிவர்த்தனை மொபைல் வங்கிச் சேவை வழியாக சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெறுகிறது. அதிக அளவில் இல்லாவிட்டாலும், மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் கட்டச்அ சேவையாக அது இருக்கும். தற்போது ஒரு மில்லியன் நுகர்வோர்கள் மட்டுமே மொபைல் வழியாக பரிவர்த்தனை செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 மில்லியனைத் தொடும் என்று நம்பப்படுகிறது.

ஆக்கம்: SINDHU KASHYAP தமிழில்: தருண் கார்த்தி