மின்னாற்றல் சேமிப்பு நிறுவனம் தொடங்கிய 5 ஆண்டுகளில் கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய பானிஃபஸ் 

1

இன்றைய காலக்கட்டத்தில் மின் சேமிப்பும், தண்ணீர் சேமிப்பும் கட்டாயமாகிவிட்டது. தண்ணீர் சேமிப்பை விட மின்சாரத்தை சேமிக்க இயற்கை நமக்கு அதிக வழிகளை கொடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி மின் சேமிப்பை அதிகப்படுத்த 2013ல் சுய தொழில் தொடங்கியுள்ளார் போனிஃபேஸ் பாஸ்கல்ராஜ்.

’உலகினொளி’ (Ulaginoli Energy Solutions) நிறுவனத்தின் நிறுவனர் போனிஃபேஸ், 2008ல் பொறியியல் படிப்பை முடித்தபின் தொழில்முனைப்பு மேல் ஆர்வம் ஏற்பட்டு நிர்வாக மேலாண்மை பற்றி தெரிந்துக்கொள்ள எம்பிஏ படிப்பை தொடர்ந்தார். படிக்கும் பொழுதே தன் தொழிலுக்கான அடித்தளத்தை போட்டுவிட்டார் இவர்.

“எம்பிஏ படிக்கும்பொழுதே கிடைத்த வேலை வாய்ப்புகளை அகற்றி சூரிய சக்தியை பயன்படுத்தி மின் சேமிப்பை குறைக்கும் ஆலோசனையை துவங்கிவிட்டேன்,” என்கிறார் பானிஃபஸ்.

அன்றய சூழலில், 2013ல் மின்சக்தியை சேகரிப்பது முக்கிய ஒன்றாக இருந்தது ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற ஆலோசனை வழங்கவும், மின் சேமிப்பை உறுதிப்படுத்தும் பொருட்களை வழங்கவும் ஓர் கட்டமைப்போ வணிகர்களோ இல்லை. மிகக்குறைவான விழிப்புணர்வு இருந்ததாக தெரிவிக்கிறார் இவர். அதனால் அதை தன் தொழிலுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு தன் படிப்பு முடிந்ததும் ஆற்றல் சேமிப்பு பொருட்களை விற்பனை செய்யத் துவங்கிவிட்டார்.

“தொழில் தொடங்க முடிவு செய்ததும் என் பெற்றோர்களிடம் இருந்து முதலீட்டை பெற்று நிறுவனத்தை அமைத்தேன். கிடைத்த சிறிய லாபத்தைக்கூட சொந்த செலவுக்கு பயன்படுத்தாமல் மீண்டும் மீண்டும் நிறுவனத்திலே முதலீடு செய்தேன்.”

படிப்படியாக தனது நிறுவனத்தை உயர்த்தி இந்த ஆண்டு ஒரு கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளது இந்நிறுவனம். 5 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு முதலே நல்ல வணிகம் செய்ததாக தெரிவிக்கிறார் பானிஃபஸ். இடையில் சில நஷ்டங்கள் ஏற்பட்டாலும் தொழிலில் இது இயல்பு என்று விடாமல் முயற்சித்து முன்னேறியதாக தெரிவிக்கிறார் இவர்.

துவக்கத்தில் வீடுகளுக்கு மட்டுமே விற்பனை செய்து வந்தவர் இன்று தன் தொழிலில் முன்னேறி, நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்கு மட்டும் விநியோகம் செய்து வருகிறார். மின் ஆற்றலை சேமிக்கும் பல பொருட்களை விற்பனை செய்யும் இவர்கள் உடனடியாக வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெறாமல் ஆற்றல் சேமிப்பை பொருட்டு மாதத் தவணையில் பெற்றுகொள்கின்றனர்.

“எங்களது மேலாளர்கள் இந்தியாவில் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ள சிறிய புதிய மின் சேமிப்பு தயாரிப்புகளை அராய்ச்சி செய்து தேர்ந்தெடுகின்றனர்,” என உறுதியளிக்கிறார்

மேலும் ஆன்லைனில் பொருட்களை தேர்ந்தெடுத்து ஆப்லைனில் வாங்கும் வசதியையும் இந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களால் ஆற்றல் சேமிப்பு பொருட்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது என குறிப்பிடுகிறார்.

எங்களது உழைப்பால் ராம்கோ சிமெண்ட்ஸ், லூகாஸ் டி.வி.எஸ், ஜான்சன் லிஃப்ட்ஸ், லயோலா கல்லூரி போல பெரும் நிறுவனங்களை எங்களது வாடிக்கையாளர்களாக சம்பாதித்துள்ளோம் என தெரிவிக்கிறார். கூடிய விரைவில் சொந்த தயாரிப்பை துவங்கும் முயற்சி செய்து வருவதாக தெரிவித்து முடிக்கிறார் பானிஃபஸ்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin