29 ஆண்டுகளில்; 17 ஆண்டுகள் கர்ப்பம்... 21 குழந்தைகள்... இங்கிலாந்தின் ’பிக் பேமிலி’

0

சில ஆண்டுகள் முன் ‘நாம் இருவர் நமக்கு மூவர்’ என்றிருந்தது. அதுவே காலத்துக்கு ஏற்றவாறு அப்டேஷன் பெற்று ‘நாம் இருவர் நமக்கு இருவராகி, ஒருவராகிவிட்டது’. இப்படியே போனா நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை? என்ற நிலையாகிவிடும். 

ஜனதொகை அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக பல நாடுகளிலும் படு ஸ்ட்ரிக்ட்டாக இந்த ரூல்சுகள் பாலோ பண்ணிக் கொண்டிருக்க, இங்கிலாந்தைச் சேர்ந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் ராட்ஃபோர்ட் தம்பதி நேரெதிராய் மழலைச் செல்வங்களை பெற்றெடுப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஆல்ரெடி, 20 குழந்தைகள், குழந்தைகளுடைய குழந்தைகள் என வாழ்ந்து வரும் தம்பதியினர், மற்றொரு குழந்தையை இந்தாண்டு பெற்றெடுத்துள்ளனர்.

ஆம், அவர்களது 21வது பெண் குழந்தையை பெற்றெடுத்து ‘போனி ராய்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். இதில் ஆஹா விஷயம் என்னவெனில் பிறந்து 4 நாளான போனிராய், ராட்ஃபோர்ட்டின் ஃபர்ஸ்டு பையனின் 14 மாத பெண்குழந்தைக்கு அத்தை. போனி ராயுக்கு இன்னும் 2 அக்கா மகன்கள், அண்ணன் மகள்கள் வேறு உள்ளனர். ஏனெனில், தம்பதியினரின் முதல் மகன் கிறிஸ்டோபருக்கு வயது 30. பக்சே, சூ ராட்ஃபோர்ட்க்கு வயது 43 தான். 

பட உதவி: dailymail.co.uk
பட உதவி: dailymail.co.uk
14 வயதிலே சூ முதல் குழந்தையை பெற்றெடுத்துவிட்டார். ஆனால் அப்போது, தம்பதியினருக்கு திருமணமாகவில்லை. அதனால், குழந்தையை தத்துக்கு கொடுத்துவிடலாம் என்று எண்ணியுள்ளனர். ஆனால், இன்றோ 21 குழந்தைகளுக்கு பெற்றோர்களாக வீட்டை மினி பேபி கேர் சென்டராகவே மாற்றியுள்ளனர். 

நிசாங்காட்டியுமே, வீடு கொள்ளவில்லை என்ற காரணத்தினால் சில ஆண்டுகளுக்கு முன் 10 பெட்ரூம்கள் கொண்ட குழந்தைகள் காப்பகத்தை விலைக்கு வாங்கி பட்டி, டிங்கரிங் பார்த்து வசித்து வருகின்றனர்.

“போனி எப்போ வருவா, எப்போ வருவா? என காத்திருந்த மற்ற குழந்தைகள், போனி வீட்டுக்கு வந்ததும் அவளை தூக்குவதற்கு க்யூ கட்டி நின்றனர். அது ஒரு லவ்லி மொமண்ட்...”

எனும் சூ, ஸ்ட்ரிக்டாக போனி தான் எங்கள் வீட்டு கடைக்குட்டி சிங்கம் என்றுள்ளார். பக்சே, இதையே தான் கடந்தாண்டு செப்டம்பரில் 20வது குழந்ததை பெற்றெடுத்த போதும் கூறினாராம். 

’தி ராட்ஃபோர்ட் பேமிலி’ எனும் யூ டியுப் சேனலும் கொண்டுள்ளவர்கள் வீட்டு சுபகாரியங்கள், ஸ்பெஷல் நிகழ்வுகளை ரகளையாக உடனுக்கு உடன் பதிவு செய்து வருகின்றனர். அப்படி கடந்த மே மாத அப்லோடிய வீடியோவில்,

“கடந்தாண்டு எங்களுக்கு 20வதாக ஆண் குழந்தை பிறந்தது. இனி குழந்தை வேண்டாம் என்று தான் முடிவெடுத்தோம். ஆனால், மீண்டும் கருவுற்றுருக்கிறேன். இதுவரை பிளான் செய்தே குழந்தைகளை பெற்றுக் கொண்டோம். இம்முறை திட்டமிடாமலே நடந்துவிட்டது,” என்றனர். 

அவர்கள், இம்புட்டு குழந்தைகளை பேணி பராமரிப்பதில் எவ்வித அயர்வும் கொள்ளவில்லை. இத்தனை குழந்தைகளையும் எப்படி வளர்க்கிறார்கள்? எப்படிச் சமாளிக்கிறார்கள்? அவர்களுடைய சாப்பாடு, உடை, பள்ளிக் கட்டணம், போக்குவரத்து, மருத்துவம் எல்லாவற்றுக்கும் எவ்வளவு செலவாகும்? தவிர அவர்களது ஒரு நாள் வேலைகள் அனைத்தையும் கேட்டால், தலை சும்மா கொய்ங்... கொய்ங் என்று சுத்துகிறது.

ராட்ஃபோர்ட் வீட்டின் அருகிலேயே பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். பேக்கரிக்கு சென்று வேலைகளை துவக்கி வைத்தபின், காலையில் 7 மணிக்கு வீட்டுக்கு வரும் அவர், பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகளை ரெடி செய்து விட்டு, பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மார்னிங் பிரேக்பாஸ்ட்டை முடிக்க, சூவுக்கு உதவி செய்கிறார். பின்னே, அவர்களது சொந்த மினி வேனில் ஒரே ஆரம்பப் பள்ளியில் படிக்கும் 6 பிள்ளைகளை கூட்டிச் சென்றுவிட்டு விட்டு, அங்கிருந்து 10 நிமிட டிராவல் டைம் கொண்ட நர்சரி பள்ளியில் படிக்கும் அவரது 5 குழந்தைகளை அழைத்து செல்ல யூ டர்ன் அடித்து வீட்டுக்கு வருகிறார். 

மறுக்கா, வீட்டில் உள்ள 3 குழந்தைகளை மதிய வேளையில் நர்சரி பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். பகல் நேரங்களில் மனைவிக்கு உதவியாக இருந்து குழந்தைகளை கவனித்து கொண்டபின், மீண்டும் பேக்கரி சென்றுவிடுகிறார் (இதுக்கு அப்புறமும் நேரம் இருக்குமா என்ன?!)

பட உதவி: Thesun.co.uk
பட உதவி: Thesun.co.uk

ஒரு நாளைக்கு ஒன்பது முறை துணி துவைத்தல், ஒரு வேளைக்கே இருவிதமான உணவு தயாரித்தல், அதை எப்பாடுபட்டாவது குழந்தைகளுக்கு ஊட்டி விடுதல் என அவர்களது ஒரு நாள் வேலை என்ட் கார்ட் இல்லாமல் போயினேன இருக்கு. 

தவிர, வரவு செலவு பட்ஜெட் ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்துள்ளனர். இருக்கும் 12 மாதங்களிலும், குழந்தைகள் பிறந்துள்ளதால் மாதத்துக்கு இரு பிள்ளைகளின் பர்த்டேவாவது வந்துவிடுகிறதாம். அதுக்கு ஒரு பத்தாயிரம். கிறிஸ்துமஸ் செலிபிரேஷனுக்கு ஒரு 20,000. தவிர, வீக்எண்டுகளில் ஒரு வாரத்துக்கு தேவையான உணவுப் பொருள்களை ஷாப்பிங் செய்ய ரூ28,000 வரை செலவழிக்கின்றனர். ஒரு நாளைக்கு 18 பாட்டில் பால், 3 லிட்டர் ஜூஸ், 3 பாக்கெட் சீரியல் தேவைப்படுகிறதாம். இது வெறும் குட்டி சுட்டீஸ்களுக்கான உணவு. வளர்ந்தவர்களுக்கு தனி மெனு கார்டு வைத்துள்ளனர்.

மாதத்துக்கு 30 பாட்டில் வாஷிங் லிக்யூட், நாளொன்று 4 ரோல் டாய்லெட் பேப்பர், வருடத்துக்கு ஒரு பாரீன் டிரிப் என அவர்களது மாதந்திர அத்தியாவசிய தேவைகளின் செலவே லட்சத்தை தாண்டுகிறதாம்.

பட உதவி: The Sun
பட உதவி: The Sun
“குழந்தைகளின் பராமரிப்புக்கு இங்கிலாந்து அரசு பணம் தருகிறது. எங்கள் இரண்டாவது மகள் சோபிக்கு 3 குழந்தைகள். சோபியின் தங்கை, தம்பிகள் எங்கள் பேரன் பேத்திகளைவிட இளையவர்கள்,” என்கிறார் ராட்ஃபோர்ட்.

பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ்க ன்பதை தப்பா புரிஞ்சுகிட்டாய்ங்களோ!

தகவல் மற்றும் பட உதவி : டெய்லி மெயில்

Related Stories

Stories by jaishree