பேபால் 'ஸ்டார்ட் டான்க்' இன்கூபேடர் திட்டத்தில் நான்கு ஃபின்டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தேர்வு

0

சென்னையில் உள்ள தனது 'ஸ்டார்ட் டான்க்' இன்கூபேடர் திட்டத்தின் கீழ் நான்கு புதிய ஃபின்டெக் தொழில் முன்முனை நிறுவனங்களை தெரிவு செய்துள்ளதாக பேபால் நிறுவனம் அறிவித்துள்ளது. 125 விண்ணப்பங்களை வெவ்வேறு கட்டத்தில் பரிசீலித்த பின், காஷ்ஃப்ரீ (CashFree), டி-ரிவார்ட்ஸ் (D-Rewards), நோடிஃபை (Notifie), ஃஎப்டிகாஷ் (FtCash) ஆகிய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த இன்கூபேடர் மூலம், தொழில் முனை நிறுவனங்கள் எந்த விதமான நிபந்தனை அற்ற சூழலில் தங்களின் வளர்ச்சிக்கான பாதையை இங்கு வகுத்துக் கொள்ளலாம்.

தெரிவு செயப்பட்ட நான்கு நிறுவனங்கள் பற்றி இதோ :-

காஷ் ஃப்ரீ(CashFree): ஆகாஷ் சின்ஹா மற்றும் ரீஜு தத்தா தோற்றுவித்த இந்த நிறுவனம், ஆன்லைன் மற்றும் பண பரிமாற்றத்தை நுகர்வோர் மிகவும் எளிமையான முறையில் மேற்கொள்ள உதவுகிறது. "இது ஒரு அறிய வாய்ப்பு. பேபால் இன்கூபேடரில் இணைவதன் மூலம் இடர் மேலாண்மை பகுதியில் எங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும், இது எங்களின் தயாரிப்பின் முக்கிய அம்சமும் கூட" என்கிறார் ரீஜு தத்தா.

டி-ரிவார்ட்ஸ்(D-Rewards): விஜய் கிருஷ்ணா மற்றும் ஷொஹைப் முஹம்மது தோற்றுவித்த டி-ரிவார்ட்ஸ் நிறுவனம் ஆஃப்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களுக்கு க்லௌட் மூலமாக நுகர்வோர் சேவைக்கான கருவியை வழங்குகிறது. "தற்பொழுது சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் உள்ள விற்பனை நிலையங்கள் தங்களது இருபதாயிரம் வாடிக்கையாளர்களுக்கு எங்களின் தயாரிப்பின் மூலம் கிட்டதிட்ட 8.5 லட்ச லாயல்டி மற்றும் தனிப்பட்ட சலுகைகளை வழங்கியுள்ளது. எங்களுக்கு வழிகாட்ட நிபுணர்கள் என்று யாரும் இது வரை இல்லை, ஸ்டார்ட் டான்க் இன்கூபேடரின் மூலம் இந்த தேவை பூர்த்தியாகும்" என்கிறார் விஜய் கிருஷ்ணா.

ஃஎப்டிகாஷ் (ftcash): சஞ்சீவ் சந்தக், தீபக் கோத்தாரி, வைபவ் லோதா தோற்றுவிaத்த ஃஎப்டிகாஷ் என்ற நிறுவனம் மைக்ரோ வணிகர்களுக்கு மொபைல் மூலமாக பணத்தை பெற்றுக் கொள்ள வழி வகை செய்கிறது. "தோற்றுவித்த ஒரு வருடம் கூட பூர்த்தியடையாத நிலையில், இந்த சந்தர்பம் அமைந்தது மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் எங்களின் தயாரிப்பு மற்றும் சேவையை வெகுவாக உயர்த்திக் கொள்ள முடியும்" என்கிறார் தலைமை பொறுப்பு வகிக்கும் சஞ்சீவ் சந்தக்.

நோடிஃபை(Notifie): ஸ்மார்ட் கைபேசி மூலம் வர்த்தக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் தளம் நோடிஃபை. பாரம்பரிய குறுந்தகவலுக்கு மாற்றாக முன்னிலைப்படுத்த விரும்பும் இந்த தளத்தில் பல்வேறு ஊடக வடிவத்தையும் உபயோகிக்க முடியும். அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்த இன்கூபேடர் உதவும் என்று நம்புவதாக கூறுகிறார் அருண் நெடுஞ்செழியன்.

சென்னையில் உள்ள ஸ்டார்ட் டான்க் இன்கூபேடர் இது வரை ஆறு தொழில்முனை நிறுவனங்களுக்கு உதவி புரிந்துள்ளது. முதலீட்டாளர்களின் அணுகல் மட்டுமின்றி உலக அளவில் தலை சிறந்த தொழில் ஆலோசகர்களின் இணைப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இங்கு செயல்பட்ட கோப்ஸ்ட்டர் (Kobster), ஃபான்டைன் (Fantain) மற்றும் டூபார்ட்டைம் (DoPartTime) ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு மே மாதம் வெற்றிகரமாக வெளியேறியுள்ளது. தற்போது செயல்படும் PiQube என்ற நிறுவனம் ஐந்து லட்சம் ௮மெரிக்க டாலர்கள் நிதியாக HR Fund என்ற நிறுவனத்திடமிருந்து சமீபத்தில் பெற்றுள்ளது குறிபிடத்தக்கது.