Sarahah நிறுவனர் யார்? வைரலான இந்த ஆப் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்...

0

சாராஹா (Sarahah) இணையதளம் முழுவதும் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்படும் புதிய டிரென்ட். முகநூல், ட்விட்டர் போன்ற பிரபல வலைத்தளங்களைப் பயன்படுத்தும் எவரும் சாராஹாவை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். காரணம் சாராஹாவின் மூலம் பெயர் முகம் என எந்தவித அடையாளத்தையும் தெரிவிக்காமல் மற்றவருக்கு நம் கருத்தை தெரிவிக்கலாம். இந்த ஆப் ஒரே இரவில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து அது வைரலாக இணையம் முழவதும் பரவியது.

இது சரியோ தவறோ என ஏதும் தெரியாமல் அனவைரும் தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன கூறுவர் என்ற ஆர்வத்தில் இந்த சாராஹா ஆப்-ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த பரப்பரப்பான சாராஹா ஆப்-ஐ உருவாக்கியது யார் என தெரியுமா? சவுதி அரேபியாவை சேர்ந்த ஜெயின்அலாபிதின் டவ்ஃபிக் என்பவர் தான்.

ஜெயின்அலாபிதின் டவ்ஃபிக் - சராஹா நிறுவனர்
ஜெயின்அலாபிதின் டவ்ஃபிக் - சராஹா நிறுவனர்

நிறுவனரின் நோக்கம் இந்த ஆப் மூலம் ஊழியர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஒரு நேர்மையான கருத்துக்களை ஒருவர் பெறலாம். அதன் மூலம் முன்னேற்றத்திற்கான பலத்தையும் பகுதியையும் கண்டறியலாம் என்பதே ஆகும்.

முதலில் வலைதளமாக 6 மாதத்திற்கு முன்பு சாராஹா துவங்கப்பட்டது. அதில் அதிக வரவேற்பில்லாமல் பின் ஆப் ஆக அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வெளிச்சம் பெற்றது. சாராஹா என்றால் அரபியில் ’நேர்மை’ என்ற பொருள். இதை பற்றி இந்தியா டுடேவில் இவர் பேசியபொது,

“நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நம்மை பற்றி கருத்து பதிவிக்கவே இந்த ஆப்-ஐ உருவக்கினேன்,” என்கிறார்.

இந்த ஆப் மூலம் வெளிப்படுத்தப்படும் கருத்தை மற்ற வலைதளங்களில் பகிரும் வசதி உள்ளது. ஆனால் அனுப்பியோருக்கு பதில் அனுப்பும் வசதி இல்லை. விரைவில் பதில் அளிக்கும் வசதி கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர் சாராஹா குழுவினர்.

சாராஹா ஆப்
சாராஹா ஆப்

தற்பொழுது சாராஹா அதிகம் பகிரப்பட்டு வந்தாலும் அடுத்து என்ன என்ற கேள்வி உள்ளது. கருத்து பதிவிடுவதை தாண்டியும் பல யோசனைகளை செயல் படுத்த இருக்கிறார் ஜெயின்அலாபிதின் டவ்ஃபிக்.

“சாராஹா இந்தியாவில் பிரபலம் ஆனது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. பல்கலைகழகத்திலும், அலுவலகத்திலும் இந்தியர்கள் எனக்கு நிரலாக்கம் கற்று தந்துள்ளனர்,” என்றார்.

ஒரு பக்கம் மக்கள் இதை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக்கொண்டாலும் பலர் இதை எதிர்த்தும் வருகின்றனர். இதன் மூலம் இணைய குற்றங்கள் அதிகரிக்கப் படலாம் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

Play Store-ல் இதை பற்றி கருத்து தெரிவித்த பலர், தங்களுக்கு இதன் மூலம் மிரட்டல் வருவதாகவும், மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பல பதிவுகள் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதையும் தாண்டி தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு இது பாதிப்பானது எனவும் உடனே இது நீக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

review
review

ஆனால் மக்கள் விரும்பும் வகையில் வருங்காலத்தில் பல முன்னேற்றங்களை சாராஹா கொண்டு வரவுள்ளது. எந்த ஒரு புதிய முயற்சி வந்தாலும் அதில் நிறை, குறைகள் இருக்கத் தான் செய்யும். சமூக ஊடகத்தில் உள்ள அனைத்து ஆப்’களுமே இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் இத்தகைய புதிய வரவுகளை சரிவர கையாள மக்கள் புரிந்து கொண்டால், சவால்களை சுலபமாகக் கடந்து அதன் நன்மைகளை பெறமுடியும் என்று நம்புவோம்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin