இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் பிடித்ததை படிக்க, ரசிக்க பிரத்யேக ஆப்!

0

நம் நாட்டில் 90 சதவீத மக்களுக்கு மேல் தங்கள் தாய் மொழியில் தான் பேசவும் படிக்கவும் விரும்புகிறார்கள். தங்கள் மொழியிலே நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள பிரத்யேகமாய் உருவாக்கப்பட்ட மொபைல் செயலி ’Clorik’. இந்த ஆப் மூலம் நமக்கு பிடித்த செய்தியை நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம். இந்த ஆப் இதுவரை 2000 முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது, இது இன்னும் அதிகரிக்கும் என்ன நம்புகிறார்கள் நிறுவனர்கள்.

அமரா பரணி, கார் ஓட்டுனர், அவர் தனுக்கு தேவையானவற்றை தெரிந்து கொள்ள ஹிந்தி மொழியில் ஏதேனும் ஆப் உள்ளதா என்று பல முறை தேடி வந்துள்ளார். அப்போழுதே ’clorik’ ஆப்-ஐ டவுன்லோட் செய்து தன் விருப்பதிற்கு ஏற்றவாறு இருக்கு என்பதை உணர்ந்தார். அவரது தற்போதய விருப்பம் உடல் பயிற்சி மற்றும் அரிசியல் பற்றி தெரிந்து கொள்வது. 

“இந்த ஆப் எனக்கு என்ன பிடிக்கும் என்ன வேண்டும் என தெரிந்து இருக்கிறது,”

என்கிறார் பெங்களுருவை சேர்ந்த அமரா. இந்த ஆப் ஐ.ஐ.டி அலஹாபாதை சேர்ந்த இரு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. 

ஷிவானி மகேஸ்வரி மற்றும் சுனில் குமார்
ஷிவானி மகேஸ்வரி மற்றும் சுனில் குமார்

ஷிவானி மகேஸ்வரி மற்றும் சுனில் குமார்; யாஹூ, ஃப்ளிப்கார்ட் போன்ற பெரு நிறுவனங்களுடன் பணிபுரிந்துள்ளனர். 2015-ல் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை உள் அடக்கிய ஒரு ஊடக ஆப் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது. மேலே கூறியது போல 90% மக்கள் தங்கள் தாய் மொழிக்கே அதிகம் பரிட்சியமானவர்கள். clorik தற்பொழுது மற்ற மொழிகளுக்கு போவதற்கு முன்பு ஹிந்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

மற்ற ஆப்-ல் இருந்து வேறுபடும் Clorik

clorik-ஐ பயன்படுத்துவோர் தங்களுக்கு தெரிந்த மொழியை தேர்ந்தெடுத்து அந்த மொழியிலே செய்தி, வீடியோ, தற்போது வைரலாக இருக்கும் எந்த ஒரு நிகழ்வையும் காணலாம். இதன் அளவும் உங்கள் மொபைலில் அதிகம் இடம் பிடிக்காதவாறு வெறும் 2.5mb மட்டுமே. மேலும் off-line-ல் வீடியோக்கள் பார்க்கும் வசதி உள்ளது மற்றும் குறைந்த டேட்டாவே பயன்படுத்துகிறது.

இந்த ஆப் மூலம் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்திகள், உண்மைகள், கதைகள், ஆரோக்கிய குறிப்புகள், மீம்ஸ், நகைச்சுவை, வீடியோக்கள் என பலவற்றை காணலாம். அது மட்டுமின்றி செய்திகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, சுவாரஸ்யமான தகவல், பிடித்தது, வேலைகள், புதிர்கள், கவிதைகள், புகைப்படம் எடுத்தல், காதல், சமையல், கதை, நடனம், பக்தி, கைவினை, கலை, கேமிங், வர்த்தகம், உடற்பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் நகைச்சுவை என்று பல பிரிவுகள் உள்ளது.

clorik ஆப் 
clorik ஆப் 

Clorik-ன் தோற்றம்

ஷிவானி மகேஸ்வரி மற்றும் சுனில் குமார் பெங்களூரில் சந்திக்கும்போதெல்லாம் Artficial Intelligence பற்றியே அதிகம் பேசி வந்தனர். மெய்நிகர் அறிவாற்றலை உபயோகப்படுத்தி ஏதேனும் பயன்படும் வகையில் உருவாக்க விரும்பினர். அப்பொழுது அவர்களுக்கு தோன்றியதே ஆங்கிலம் அல்லா மற்ற மொழிகளை தானியங்குவகையாக்கும் முயற்சி.

Artficial Intelligence பயன்படுத்தி ஆங்கில உள்ளடக்கத்துடன் ஆப் உருவாக்குதல் என்பது சுலபமான ஒன்றானது. ஆனால் மற்ற மொழியை புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்குவதே சவாலான ஒன்று. துணை நிறுவனர் சுனில் குமார் நம்முடன் பேசுகையில்,

 “சுலபமாகச் சொன்னால், இங்கு நம் நாட்டில் பேசும் அனைத்து மொழியையும் புரிந்து கொள்ளும் அளவு இங்கு எந்த தொழில்நுட்பமும் இல்லை. இதை மாற்றவே நாங்கள் நினைத்தோம்,” என்கிறார்.

அதன் பின் இருவரும் 2015-ல் இந்த நிறுவனத்தை தொடங்கினர். தொடங்கி இரண்டு வருடத்துக்குள் ஆயிரத்துக்கும் மேலான மக்கள் இதை டவுன்லோட் செய்துள்ளனர். இது எப்படி இயங்குகிறது என்றால் இப்பொழுது எவரேனும் ஹிந்தியில் ஒரு வீடியோவை பதிவு செய்தால் அது அதே விருப்பம் உள்ள பலருக்கு பகிரப்படும்.

நிறுவனர்கள் இருவரும் தங்களின் மொத்த சேமிப்பையும் இந்த ஆப் உருவாக்கத்தில் செலவிட்டுள்ளனர். 50,000 டவுன்லோடுக்கு பிறகு லாபம் பாக்க உள்ளனர்.

நல்ல எதிர்காலம் உள்ளது

ஆராய்ச்சி நிறுவனமான மார்க்கெட்ஸ் அண்ட் மார்க்கெட்ஸ் படி, இயற்கை மொழி செயலாக்க (natural language processing) சந்தை அளவு தற்போது $ 7.5 பில்லியன் ஆகும். 2021ல் இதில் இரட்டிப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் உற்பத்தி, சுகாதாரம், ஊடகம் மற்றும் சில்லறை விற்பனை ஆகியவற்றில் இருக்கும்.

clorik இன்னும் நிறையே பிசினஸ் மாடல் முயற்சியை செய்ய உள்ளது. விடியோக்கள் மூலம் வாடிக்கியாளர்களை அணுகும் நிறுவனங்களுக்கு Clorik ஒரு நல்ல தளமாக அமையும். இதன் மூலம் உள்ளூர் மொழி பேசும் வாடிக்கையாளர்களை அணுக முடியும்.

முழு இணையமும் ஆங்கிலத்திலும், ஐரோப்பிய மொழிகளிலும், சீனிலும், ஜாப்பனீசிலும் இருப்பதால், இன்றைய இயந்திரங்கள் மொழி உரைகளை இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

இயந்திரம் நம் மொழியை புரிந்துகொள்ள clorik முற்படுகிறது ஏனென்றால் டிஜிட்டலில் செல்லக் காத்திருக்கும் ஒரு பெரிய வட்டார சந்தையாக இந்தியா இருப்பதை அவர்கள் அறிகிறார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 75 மில்லியன் மக்கள் தெலுங்கு பேசுகின்றனர், 75 மில்லியன் தமிழர்கள், 83 மில்லியன் பெங்காலி மற்றும் 400 மில்லியன் ஹிந்தி பேசுகின்றனர்.

இயந்திர கற்றல் மற்றும் AI எதிர்காலமாய் உள்ளது, மேலும் Clorik போன்ற ஸ்டார்ட் – அப் நிறுவனங்கள் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது 1 பில்லியன் இந்தியர்கள் மிக பயனுள்ளதாக அமையும். 

ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா