2 மில்லியன் டாலர் நிதி திரட்டியது சென்னை ஆஹா ஸ்டோர்ஸ்! 

’ஆஹா ஸ்டோர்ஸ்’ தான் திரட்டியுள்ள புதிய நிதியை தொழில்நுட்ப மேம்பாடு, புதிய பிரிவுகள், பகுதிகளில் வர்த்தக விரிவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சிறந்த திறமைகளை ஈர்க்க பயன்படுத்த உள்ளது. 

0

சென்னையைச் சேர்ந்த ஆஹா ஸ்டோர்ஸ், யு.ஏ.இ.யைச்சேர்ந்த சர்வதேச முதலீட்டு குழுமமான கலேகாவிடம் இருந்து 2 மில்லியன் டாலர் புதிய சமபங்கு மூலதனம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சுற்றுக்கு முன், யுவர் நெஸ்ட் தலைமையிலான முதலீட்டாளர்களிடம் இருந்து இரண்டு முறை தலா ஒரு மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளது. புதிய நிதியை தொழில்நுட்ப மேம்பாடு, புதிய பிரிவுகள், பகுதிகளில் வர்த்தக விரிவாக்கம், சுதந்திரமாக சேவை அளிப்பவர்களை கொண்டு வருவதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சிறந்த திறமைகளை ஈர்க்க பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

ஆஹா ஸ்டோர்ஸ் நிறுவனர்கள் 
ஆஹா ஸ்டோர்ஸ் நிறுவனர்கள் 

மறைமுக செலவுகள் என வகைப்படுத்தப்படும், அலுவலக நிர்வாகத்திற்கு தேவையான அனைத்து வர்த்தக தேவைகளுக்கான ஓரிட தீர்வாக ஆஹா ஸ்டோர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. சப்ளை செயின் நிர்வாகம், கூட்டு பேர ஆற்றல் மற்றும் வெண்டர் வலைப்பின்னல் சீராக்கம் ஆகியவை மூலம், நிறுவனங்கள் மறைமுக செலவை குறைக்க உதவுவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

துறை வல்லுனர் அசோகன் சட்டநாதன், நிர்வாக பள்ளி பட்டதாரிகளான ராஜாராம சுந்தரேசன், ஸ்ரீ ஹரிஷ் கண்ணன் ஆகியோரால் 2013 ல் நிறுவப்பட்ட ஆஹா ஸ்டோர்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, டாடா ஏ.ஐ.ஜி, டிசிஎஸ், விப்ரோ, ரிலையன்ஸ் நிப்பான், ஐடிசி ஓட்டல்ஸ், ஒயோ, உபெர், யெஸ் பாங்க், ஈக்விடாஸ், அசோக் லேலெண்ட், பாஷ், ஐஷர், ஆர்பிஎல், எடிச்பி பைனான்சியல், சிண்டெல், எச்ஜிஎஸ், கோனே, டாட்டா கேபிடெல் மற்றும் டபிள்யூபிபி குருப் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களை வாடிக்கையாளராக பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

“மொத்ததில் இந்த நடவடிக்கை மூலம், மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை அளித்து கூடுதல் நம்பிக்கையை பெறுவது, தரமான சப்ளையர்களின் முன்னுரிமை பெறுவது மற்றும் திறமைகளை ஈர்க்க உதவும். மாதம் ரூ.100 மில்லியன் விற்பனை எனும் மைல்கல்லை எட்ட இருக்கிறோம். இந்த நிதியை கொண்டு, எழுதுபொருள், ஹவுஸ்கிப்பீங், அச்சுப் பொருட்கள், மின்னணு பொருட்கள், ஐடி, உணவு, பேக்கேஜிங் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்,”

என்கிறார் அஹா ஸ்டோர்ஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவர் அசோகன் சட்டநாதன்.  ஆஹாவின் தனி உரிமை உள்ள, ஐபிஓஎஸ் மேடை, தேவை திரட்டல், இணைய ஒப்புதல், இ-கேட்டலாக், பரிந்துரை எந்திரம், தானியங்கி செயல் மூலம் மைக்ரோ அசைன்மெண்ட்ஸ், ரியல்டைம் ஆய்வு, செலவு கட்டுப்பாடுக் கருவி போன்ற சப்ளை செயினில் உள்ள அனைத்து படிநிலைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

“ஆஹாவுடன் இணைந்து செயல்படுவதில் உற்சாகம் கொள்கிறோம். இந்தியாவில் முதலீடு செய்ய வாய்ப்புகளை எதிர்நோக்கும் நேரத்தில், வர்த்தகம், தொழில்துறை மற்றும் அரசுக்கு பணிகளை எளிமையாக்கும் வகையில் தொழில்நுட்பத்தை புதுமையாக பயன்படுத்தும் ஸ்டார்ட் அப்களில் கவனம் செலுத்துகிறோம். புதுமையான வர்த்தக மாதிரி மற்றும் உள் நுகர்வுக்காகபொருட்களை வாங்குவதை சுலபமாக்க உதவும் நவீன தொழில்நுட்ப மேடை கொண்டுள்ள ஆஹா ஸ்டோர்ஸ் இந்த வரயறைக்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஆஹா, இந்திய எல்லைகளை கடந்து வளர்ச்சி பெற நாங்கள் ஆதரவு அளிப்போம்,” என்று கலேகா இயக்குனர் சஞ்சய் பவா கூறுகிறார்.

ஆஹா ஸ்டோர்ஸ் பற்றிய விரிவான கட்டுரை: அலுவலகப் பொருட்களை ஆன்லைன் மூலம் வழங்கும் சென்னை ’ஆஹா ஸ்டோர்ஸ்’

ஆங்கிலத்தில்: நேஹா ஜெயின் / தமிழில்; சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL