வயநாட்டில் பிறந்த கேள்விக்கு பார்சிலோனாவில் பதில்- 'காக்னிகார்' உருவான கதை!

1

தினமும் காலை உற்சாகத்தோடு எழுந்து வேலை செய்ய எது உத்வேகம் தருகின்றதோ, அதைத்தான் ஒருவர் செய்யவேண்டும் என்பது சிந்து ஜோசப்பின் அசைக்கமுடியா நம்பிக்கை. அந்த நம்பிக்கை தான் 39 வயதான சிந்துவின் பார்வையை புதியவற்றின் மீதும் புதிய அனுபவங்கள் மீதும் பதியவைத்தது. தற்போது சிந்து, காக்னிகார் டெக்னாலஜீஸ்யின், இணை நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.

தற்போது காக்னிகார் டெக்னாலஜீஸ், நிறுவனங்களுக்கு அவர்களின் பொருட்கள் சார்ந்த சந்தேங்களுக்கு, பரிந்துரைகளுக்கு, மற்றும் செய்முறை விளக்கங்களுக்கு, டிஜிட்டல் உதவிகள் செய்து வருகின்றது. இந்த நிறுவனதிற்கான யோசனை தனது முதுநிலை பட்டப்படிபிற்கான ஆய்வறிக்கை ஆராய்ச்சியின் போது தோன்றியதாக சிந்து கூறுகிறார். தற்போது இவர்கள் அலுவலகங்கள் இந்தியா, ஸ்பெயின், மற்றும் அமெரிக்காவில் உள்ளன. மேலும் அவர் முதுகலை பட்டபடிப்பில் தேர்வு செய்த தலைப்பு : செயற்கை அறிவாற்றல் கொண்ட அமைப்புகள் எவ்வாறு தங்களுக்குள் எழும் சிக்கல்களை சரிசெய்கின்றன என்பதே.

காக்னிகாரின் துவக்கம் :

வங்கியில் கடன் பெறுவது, வாகனத்தின் காப்பிட்டை புதுபிப்பது, அல்லது பயணம் செய்ய பயணச்சீட்டு பெறுவது இதில் எதுவாக இருப்பினும், வல்லுநர் ஒருவரின் அறிவுரை பெறுவது என்பது நன்மையே. இதைத்தான் காக்னிகார் நடைமுறைப் படுத்துகின்றது. வாடிக்கையாளர் கேள்விகளுக்கு நிறுவனங்கள் உடனடியாக பதிலளிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இதற்கென பயிற்சியளிக்கப்பட்ட நபர், வாடிக்கையாளரின் தேவை உணர்ந்து, அவர்களுக்குத் தேவைப்படும் தகவலை அளிக்கின்றனர். இதன் மூலம் செலவுகள் குறைக்கப்பட்டு, செயல்திறன் அதிகரிக்கின்றது.

ஒரு வருடத்திற்கு 270 பில்லியன் வாடிக்கையாளர்கள் தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், அதில் 60 சதவிதம் பதில் அளிக்கப்படாமல் இருப்பதாகவும் சிந்து கூறுகிறார்.

தற்போது ஒவ்வொரு தொழிலும், வாடிக்கையாளர் தேவை மீதே கவனம் செலுத்துகின்றது. மேலும் பதிலளிக்கப்படாமல் இருக்கும் 160 (60%) பில்லியன் அழைப்புகளை எவ்வாறு குறைப்பது என்ற கேள்விக்கு பதில் தேடியும் செல்கின்றது.

தற்போதையத் தேவை என்பது தீர்மானமே தவிர சூழ்நிலைக்கான பதில் அல்ல என்கிறார் சிந்து. மேலும் வெகு வேகமாக வளர்ந்து வரும் வணிகஉலகில், மற்ற நிறுவனங்களில் இருந்து நாம் தனித்து நிற்க, வாடிக்கையாளரை நாம் எப்படி அணுகுகின்றோம் என்பது உதவும். மேலும் மிகமோசமான வாடிக்கையாளர் சேவைகளை நான் அனுபவித்துள்ளேன். எனவே அந்த சூழ்நிலையை அலசி பார்த்தபோது, அதற்கான காரணம் சரியான தொழில்நுட்பம் அமையாததே என்பது தெரிந்தது. அதை உணர்ந்த வினாடியில் இருந்து எனது பயணம் துவங்கியது.

உலகை சுற்றி :

தன் நிறுவனத்தை, தனது கணவரோடு சேர்ந்து நிறுவியுள்ளார் சிந்து. பெங்களுருவில் ஹனிவெல் நிறுவனத்தில் வேலைபார்த்த போது இருவரும் சந்தித்துள்ளனர். மேலும் அங்கிருந்து அவர் கணவர் பார்சிலோனா செல்ல, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, “யுனிவெர்ஸ்ட்டாட் ஆடோனோமா டீ பார்சிலோனா” என்ற பல்கலைகழகத்தில் தனது மேல்படிப்பைத் தொடர அவர் முடிவுசெய்தார்.

சிந்துவின் பூர்விகம் வயநாடு ஆகும். பத்தாம் வகுப்பு வரை மலையாள மொழி வழிக் கல்வியில் அவர் பயின்றுள்ளார். அவர் பெற்றோர் பற்றிக் கூறுகையில், “அதிர்ஷடவசமாக, என் பெற்றோர் என்னை பரந்த மனது படைத்தவளாக வளர்த்தனர். புதியவற்றுகான தேடலை என்னுள் விதைத்தவர்களும் அவர்களே” என்கிறார் அவர்.

வயநாட்டில் மேல்படிப்பு கற்க போதுமான வசதி இல்லாததால், அங்கிருந்து ஆந்திரா அனுப்பட்டார் சிந்து. அப்படி படிப்பிற்காக சென்ற இடங்களில் ஆங்கிலம் கற்றுள்ளார் சிந்து. சென்னையில் 1996 ஆம் ஆண்டு கணிதத்தில் பட்டம் பெற்று பின்பு கொச்சின் பல்கலைகழகத்தில் சேர்ந்துள்ளார். 2000 ஆவது ஆண்டில் இருந்து, பெங்களுரு ஹனிவெல் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.

புதியவற்றுக்கான தேடல் :

கணிதம் என்பது எப்போதும் சிந்துவிற்கு பிடித்த ஒன்றாக இருந்துள்ளது. சிருவயதில், அவர் படித்த பள்ளியில் கணித ஆசிரியராக இருந்த அவர் தந்தை, கணக்குகளை கொடுத்துவிட்டு அவற்றுக்கான பதிலைக் கண்டுபிடிக்க மாணவர்களை தூண்டியதே கணக்கின் மீது தனக்கு காதல் உண்டாகக் காரணம் என்கிறார் அவர்.

ஆராய்ச்சியின் பக்கம் முக்கியமாக செயற்கை அறிவாற்றல் பக்கம் சிந்துவின் கவனம் செல்லக் காரணம், “நாம் யார் ? எங்கிருந்து இங்கு வந்துள்ளோம் ? மற்றும் நமது இருப்பும் வானியல் சாஸ்தாரமும்” போன்ற சித்தாந்தங்களே.

உங்களால் செயற்கை அறிவாற்றலை உருவாக்க முடிந்தால்அதன் உதவியோடு இயற்கையான படைப்பாற்றலையும் அதன் செயல்பாட்டையும் நாம் கணிக்க இயலும் "என்கிறார் சிந்து.

தனது முதுநிலை படிப்பில் தான் கற்ற அனைத்து விஷயங்களையும், தனது தொழில் முனைவில் உபயோகிக்க முடிவுசெய்தார். தொழில் முனைவதை காட்டிலும் சவாலான விஷயம் என்னவாக இருக்கும் என்பதே அவர் கேள்வி.

பார்சிலோன – கேரளா – யூஎஸ்ஏ :

சிந்து மற்றும் அவரது கணவர் இணைந்து காக்னிகார் நிறுவனத்தை பார்சிலோனாவில் துவக்கினர். முதலில் ஒரு மில்லியன் டாலர் முதலீடாக, கிடைத்தது. அதற்கும் முன்பாக வென்ச்சுரா நிறுவனம் அவர்களுக்கு 75000 யுரோ வழங்கியது.

இந்த முதலீட்டை வைத்து ஐரோப்பாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களை வாடிக்கையாளராக இவர்கள் பெற்றனர். அடுத்தகட்டமாக கேரளாவில் அலுவலகம் துவங்கி, இங்குள்ள நிறுவனங்களுக்கும் சேவையளித்தனர்.

இந்நிறுவனத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. அதில் “ஐரோப்பாவில் மிகவும் புதுமையான இணையம் சார்ந்த ஒரு தொழில்முனைவு” என்ற விருதும் அடக்கம். தற்போது சிந்து அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அடுத்தகட்டமாக முதலீடு பெற்று, நிறுவனத்தின் கிளைகளை அங்கும் நிறுவும் நோக்கில் அங்கு சென்றுள்ளார்.

சந்தை தாக்கம் :

அறிவாற்றல் சார்ந்த மெய்நிகர் முகவர்கான சந்தை மதிப்பு 2022 டில் ஐந்து பில்லியன் டாலர்களை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎம் போன்ற பெரியநிறுவனங்கள் இத்துறை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உண்டாகிவரும் வேளையில் அந்த அலையில் பயணித்து கரை சேர்வதற்கான அத்துணை அம்சங்களும் எங்கள் நிறுவனத்தில் உள்ளது என்கிறார் சிந்து.

செயற்கை அறிவாற்றலின் எதிர்காலம்:

செயற்கை அறிவாற்றல் நமது மனித இனத்தை அழித்துவிடும் என்ற கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மனித வாழ்வில், அது கொணரும் மாற்றங்களை காணவேண்டும் என்கிறார் சிந்து.

“செயற்கை அறிவாற்றல் பலஆயிரகணக்கான மனிதர்களின் தங்கள் வேலைகளை, வேகமாகவும் எளிதாகவும் செய்வதற்கு துணைநிற்கின்றது. மேலும் அதன் வெற்றி என்பது, இயந்திரங்களோடு மனிதர்களின் தொடர்பை மிக இயற்கையாகவும், எளிதாகவும் மாற்றியதே” என்கிறார் அவர்.

பெண்கள் மற்றும் தொழில்நுட்பம் :

தொழில்நுட்பம் என்பதை சிக்கல்களை சமாளிக்கும் ஒரு கருவியாக அவர் பார்க்கின்றார். “ஒரு சவாலை சமாளிக்கும் முறையை நான் அறிந்துவிட்டால் அதன் மீது எனக்கான ஆர்வம் குறைந்துவிடுகின்றது. எனவே நிறுவனத்தில் செயற்கை அறிவாற்றலோடு நான் போராடிக்கொண்டிருக்க அதில் இருந்து சந்தை படுத்தக்கூடிய ஒரு பொருளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றார் என் கணவர்” என்கிறார் அவர்.

தற்போது அவரது விருப்பமான கணினி மொழியாக “பைத்தான்” உள்ளது.

பெண்களை தொழில்நுட்பம் பக்கம் இழுக்கவேண்டும் என்று கூறவில்லை ஆனால், விருப்பம் இருக்கும் பட்சத்தில், அது ஆணாக இருப்பினும், அவர்களுக்கு ஒருவர் தடை போடக்கூடாது” என்கிறார் சிந்து.

செல்லும் இடங்கள் பலவற்றில் பெண் என்று பாராபட்சம் பார்கப்படுவதை பற்றிக் கூறுகையில், நான் போராடும் குணம் படைத்தவள். சில நேரங்களில் அதிக சலுகைகள் அனைத்து நேரங்களிலும் வழங்கப்படுவதால் ஆண்கள் இதில் உள்ள சுவாரஸ்யத்தை இழக்கிறார்கள் என்றே நான் கருதுகின்றேன் என புன்னகையோடு அவர் முடித்துக்கொண்டார்.

காக்னிகார் வலைத்தளம்.

ஆக்கம் : தன்வி துபே | தமிழில் : கெளதம் s/o தவமணி.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்று தம்பதிகள் இணைந்து தொழிலில் கலக்கும் கட்டுரைகள்:

குழந்தை கற்றல் மற்றும் வளர்ப்பில் பெற்றோர்களுக்கு உதவும் தம்பதிகள்!

வேலையை விடுத்து உலகை வலம் வரும் ஜோடி பயணத்தின் போதே தொடங்கிய தொழில்!