தரமான பட்டாசுகளை மலிவான விலையில் ஆன்லைனில் விற்பனை செய்யும் நண்பர்கள்! 

கடந்த ஆண்டு இரு பொறியாளர்களால் தொடங்கப்பட்ட crackwala.com சிறந்த ப்ராண்டுகளை மலிவான விலையில் ஆன்லைனில் விற்று வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது!

6

இந்த ஸ்மார்ட்போன் உலகில் விரல் நுனியில் நாம் விரும்பியதை நினைத்த நேரத்தில் வாங்கிக் கொள்கிறோம். துணிகள், எலக்ட்ரானிக் பொருள்கள் விற்பது போக இப்பொழுது பட்டாசும் ஆன்லைனில் விற்கத் தொடங்கி விட்டனர். தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பட்டாசு விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். அதோடு பட்டாசு விலையும் மீட்டரில் சூடு வைத்தது போல ஒவ்வொரு வருடமும் ஏறிக் கொண்டே போகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் நிறுவனமான “crackwala.com” குறைந்த விலையில் பட்டாசை விற்பனை செய்கின்றனர்.

“நீங்கள் எந்த ஆன்லைன் பட்டாசு விற்பனை நிறுவனத்துடன் எங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்; நிச்சயம் எங்களது விலை குறைவாகவே இருக்கும்,”

என மிகுந்த நம்பிக்கையுடன் பேசுகிறார், crackwala நிறுவனர் சதீஷ் குமார்.

சதீஷ், அமெரிக்காவில் இருக்கும் தனது நண்பர் வினோத் உடன் இணைந்து கடந்த வருடம் இந்த இ-காமர்ஸ் நிறுவனத்தை நிறுவினார். பொறியாளராய் பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் இருவருக்குமே தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமே இருந்தது. சிவகாசியை சொந்த ஊராய் கொண்ட சதீஷிற்கு பட்டாசு வியாபாரத்தை ஆன்லைனுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் ரொம்ப நாள் இருந்தது.

“சந்தையில் 900-க்கும் மேற்பட்ட பட்டாசு பிரண்டுகள் உள்ளது. ஆனால் பிரபலமாக வெளியில் தெரிவது இரண்டு அல்லது மூன்று மட்டுமே. மற்ற சிறந்த பிரண்டுகளை வெளி கொண்டுவரவே நாங்கள் யோசித்தோம். குறைந்த விலையில் தரமான பல விதமான பட்டாசுகள் இங்கு உள்ளது என்கிறார்,” சதீஷ்.
crack wala நிறுவுனர் - வினோத் மற்றும் சதீஷ்
crack wala நிறுவுனர் - வினோத் மற்றும் சதீஷ்

கடந்த வருடம் 15 லட்ச ரூபாய் முதலீட்டுடன் இந்த நிறுவனத்தை தொடங்கினார்கள். அதிகம் லாபம் ஈட்டும் நோக்கம் அல்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் பட்டாசை சேர்க்கவே விரும்பினர். நேரடியாக பாட்டாசு ஆலைகளில் இருந்து பட்டாசை பெறுவதாலும், இடைத்தரகர்கள் இல்லாததாலும் மிகக் குறைந்த விலையில் பட்டாசுகளை விற்கின்றனர். குறைந்த விலையில் பட்டாசு கிடைத்ததால் மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து முதல் வருடத்திலே அனைத்து பட்டாசுகளையும் விற்றுத் தீர்த்தனர்.

விளம்பரத்தில் பெரிதாய் எந்த வித செலவும் செய்யாமல் முகநூல் மற்றும் கூகுள் ஆட்ஸ் மூலமே விளம்பரமப்படுத்தினர். விளம்பரம் இல்லாமலே ஒரே ஆண்டில் ஓரளவு லாபம் பார்த்து அடுத்த ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளனர்.

வெளியில் 25 ரூபாய்க்கு விற்கும் பட்டாசு இவர்களிடம் 10 ரூபாய்க்கு கிடைப்பது குறிபிடத்தக்கது.

“இது ஆரம்பிக்கும் முன்பு என் நண்பர் 600 ரூபாய் மதிப்புள்ள பட்டாசை 1000 ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கினார். அப்பொழுதே மக்களுக்கு பாட்டாசு பற்றியும் விலை பற்றியும் விழிப்புணர்வு இல்லை என்று தெரிந்தது,” என்கிறார் சதீஷ்.

சதீஷ் உறவினர் பட்டாசு தொழிலில் ஈடுப்பட்டு இருந்ததால் பட்டாசின் விலை மற்றும் தன்மையை அறிந்திருந்தார். தன் நெருங்கிய வட்டாரங்களே அதிக விலை கொடுத்து வாங்குவது கண்டே crackwala.com-ஐ நிறுவினார். இந்த வலைதளத்தில் காஷ் ஆன் டெலிவரி, இலவச விநியோகம், விலை தள்ளுப்படி போன்ற சலுகைகள் உள்ளது. மேலும் திருப்தி இல்லை என்றால் பணம் திரும்ப பெரும் சலுகையும் உள்ளது.

காலை வெடிப்பது, இரவு வெடி, குழந்தைகள் வெடி, பரிசு வெடி என பல வகையாக பட்டாசுகளை பிரித்துள்ளனர். 10 ரூபாய் முதல் வெடிகள் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக 80 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

“பெரும் இ-காமர்ஸ் நிறுவனமான ’பிக் பாஸ்கெட்’ எங்கள் பட்டாசுகளை விற்று தர முன் வந்தனர். ஆனால் ஒரு நாள் குறைந்தது 500 விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். எங்கள் கிடங்கு சிவகாசியில் உள்ளது, ஆரம்ப நிலையில் எங்களால் ஒரே நாளில் அவ்வளவு செய்ய முடியாது என்பதால் மறுத்து விட்டோம்” என்கிறார் சதீஷ்.

தற்போது வேறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே தொலைவில் இருந்து crackwala நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். மென்பொருளில் ஆர்வம் கொண்ட இவர்கள் ஒரு சிறு முயற்சியாகவே இதைத் தொடங்கினர். விரைவில் முழுநேரமாக இதை கவனித்து விரிவுப்படுத்த உள்ளனர்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin