வடிவங்கள் முதல் வணிகம் வரை பயணிக்கும் பெண்மணி- ராதா கபூர்

0

ராதா கபூரின் தொழில் முறை பாதை, நீங்கள் இது வரை படித்திருக்கும் எந்த பெண் தலைவரின் பாதைக்கும் நேர் எதிரான பாதையாக இருக்கும். ராதா தனது கார்பரேட் வாழ்வை துவங்க இருந்த போது, அவரது பெற்றோர் அவரது வாழ்வில் குறுக்கிட்டனர். எஸ் வங்கியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்த அவரது தந்தை தனது மகள், அவளது வேலைக்காக மனதிற்கு பிடித்த விஷயத்தை விட்டுகொடுப்பதை அவர் விரும்பவில்லை. அதை மனதில் கொண்டு பழுத்த வயதில் தனது கார்பரேட் வேலையை துறந்து, வணிகத்தில் இறங்கினார். அதே போல் தனது மகளின் சந்தோஷமும் அவர் மனதுக்கு பிடித்ததை செய்வதில் தான் இருக்கும் என்பதை அவரது தந்தையும் உணர்ந்திருந்தார்.

அழகியல் பற்றிய ஆழமான புரிதலும், வடிவங்களை ரசிப்பதில் ஒரு தனி ஆர்வமும் இருந்ததால், அவரது பெற்றோர் வற்புறுத்தியபோது, நுண்கலையில் பட்டம் பெற, நியூயார்க்கில் உள்ள, பார்சன்ஸ் - நியூ ஸ்கூல் ஆப் டிசைனில் இணைந்தார். " மும்பைக்கு வெளியே தங்கிய அனுபவமில்லாதவளை, எனது ஆறுதல் மண்டலத்தை விட்டு வெளியே தள்ளி, முயற்சிக்க வைத்தவர்கள் எனது பெற்றோரே. என் வெற்றிக்கு வித்திட்டவர்கள் அவர்களே" என்கிறார் ராதா.

5 வருடம், விதவிதமான வடிவங்களும், வடிவமைப்பில் பல்வேறு கோணங்களும் நிறைந்திருந்த ஒரு இடத்தில் தங்கி, அவற்றை கற்றபின்பு, இந்தியா திரும்பும் போது ராதா மனதில் தான் கற்றதை வைத்து அர்தமுள்ளவற்றை செய்யவேண்டும் என்ற திட்டம் இருந்தது.

தனது பங்குதாரர் அலோக் நந்தாவோடு இணைந்து, மிக சிறுவயதிலேயே "பிராண்ட் கேன்வாஸ்" என்ற நிறுவனத்தை அவர் துவங்கினார். நான் பார்சனில் கற்ற அனைத்தையும் உபயோகித்தேன். என் முதல் நிறுவனம், கலை மற்றும் ஒரு பொருளின் அடையாளத்தை\இணைத்து, அழகூட்டுவதாகவும், அவற்றின் ஒப்பனை அவை பறைசாற்றும் கருத்தை ஒத்ததாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதை அர்த்தத்துடன் கூடிய ஒவியங்கள் மூலம் அடைய முடிவெடுத்து, சுவரோவியங்கள், அலங்கார ஓவியங்கள், உரை மேல் உள்ள வடிவங்கள், மற்றும் ஓவிய நிறுவல்கள், ஆகியவற்றில் கவனம் செலுத்தினேன் என்கிறார் ராதா.

ஆனால் விரைவிலேயே, தனது எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்ற உணர்வு மீண்டும் அவரிடம் தோன்றியது. " நான் வடிவங்களில் புதிதாக ஒன்றை முயற்சித்து பார்க்க விரும்பினேன். மேலும் தற்போது உள்ள காலங்களில், வேலை தொடர்பான முடிவுகளில் மிகவும் அரிதான முடிவுகளை மிக எளிதாக பலர் எடுப்பதை பார்க்க முடிந்தது. அவற்றுக்கு ஒத்துழைப்பு தர நாங்கள் முயன்றோம். தொழில் முனைவு மற்றும் புதுமைகளை ஊக்கபடுத்தும் அதே நேரத்தில், வடிவங்கள் பற்றிய சிந்தனையை இதயத்தில் வைத்திருந்தோம்.

இவ்வாறு செய்வதற்கு ஒரே வழியாக, நுண்கலையை அவருக்கு கற்பித்த பார்சன்ஸ் அவரது நினைவிற்கு வந்தது. அந்நேரத்தில் அவர்களும், யுஎஸ்ஏ விற்கு வெளியே தங்களது எல்லையை விரிவு படுத்த முயன்று கொண்டிருக்க, அவர்களது இந்திய நடவடிக்கைகளுக்கு ராதா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று நுண்கலைகள் பற்றி கனவு காண்போரை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ள "இந்தியன் ஸ்கூல் ஆப் டிசைன் அண்ட் இன்னொவேஷன் " இயங்கும் கட்டிடத்தை, ஆதியில் இருந்து வடிவமைத்தவர் ராதா ஆவார்.

படைப்பாற்றல், புதுமைகளை கண்டுபிடித்தல் மற்றும் தக்கவைக்கும் தன்மை ஆகியவற்றை தங்கள் கொள்கைகளாக கொண்ட ஐஎஸ்டிஐ, தற்போது வடிவமைப்பு துறை சார்ந்து பல வேலைகளை உருவாக்கி வருகின்றது . மேலும், இதன் மூலம், வடிவமைப்பை வணிகமாக்குவது எப்படி என்பதை, மாணவர்களுக்கு படைப்பாற்றலில் மற்றும் வணிகத்திட்டம் உருவாக்குவது எப்படி என கற்பிப்பதன் மூலம் இயலும் என ராதா உறுதியாக நம்பினார்.

எங்கள் படிப்பு, வடிவமைப்பு, வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையாகும். வடிவமைப்பு படித்து முடித்தபின்பு வேலைக்கு செல்வோர் 16.2% ஆக உள்ளது. எனவே அங்கே ஒரு இடைவெளி உள்ளதை உணர முடிந்தது. எனவே படித்து முடித்தவுடன் வேலைக்கு தேவையான திறன் உள்ளோரை உருவாக்க நாங்கள் முயலுகிறோம்.

2013றில், 40 மாணவர்களோடு துவங்கிய கல்வி நிறுவனம், தற்போது ஒரு வருடத்திற்கு 450 மாணவர்களுக்கு கற்பிக்கின்றது. மேலும் தன் வார்த்தைகளுக்கு உண்மையாக, வடிவமைப்பை, இந்திய சுற்றுச்சூழலை மாற்றியமைக்க பயன்படுத்தி வருகின்றார். முதலில் தனது சூழலை மாற்றிஅமைத்துள்ளார்.

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சூழலை உருவாக்க, "தி லோவர் பாரல் இன்னொவேஷன் டிஸ்டிரிக்ட்" சர்வதேச தரத்தில் இந்தியாவில் முதல் முறையாக அவர் நிறுவியுள்ளார். மேலும் ஐஎஸ்டிஐ மைக்ரோசாப்ட்டோடு இணைந்து " கிரியேட்டிவ் ஆக்சிலரேட்டர்" என்ற படிப்பையும் தொழில் முனைவதில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க உருவாக்கியுள்ளார்.

மேலும் சமுதாய முயற்சியாக, அனுகூலமற்ற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் செயலாற்றி வருகிறார். அவர்கள் நகைகள், மற்ற அணிகலன்கள் ஆகியவற்றை வடிவமைக்க, மேலும் அவற்றை சந்தையில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய ஐஎஸ்டிஐ பார்சனோடு இணைந்து உதவி வருகின்றது. மேலும் 1 கோடி ரூபாயை ஐஎஸ்டிஐ யில் படிக்க விரும்பும், சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி உதவித்தொகையாக ஒதுக்குகின்றது.

மேலும் "டூயிட் கிரியேஷன்ஸ்" என்ற பெயரில் 2009ல், படிப்பாற்றல் மிக்க புதுமையான யோசனைகளை உருவாக்கி அவற்றை ஊக்குவிக்கும் நிறுவனம் ஒன்றை துவக்கினார்.

தற்போது "ப்ரோ கபடி லீகில்", ஆர்வம் உண்டாக, அதில் டெல்லி அணியையும், "இந்தியா ஹாக்கி லீகில்" மும்பை அணியையும் வாங்கியுள்ளார்.

" கிரிக்கெட்டிற்கு அடுத்ததாக கபடிக்கு இங்கு டிஆர்பி உள்ளது. அதனை சரியான முறையில் தொகுத்தால் மக்களிடம் சென்று சேரும் என்பதில் எங்கள் நிறுவனத்திற்கு முழுநம்பிக்கை உள்ளது.

இத்தனை விஷயங்களை எப்படி ஒருவரால் செய்ய இயலும் என்பதை கேட்டபோது, கடவுள் ஒவ்வொரு வடிவங்களின் விவரத்திலும் அமைந்துள்ளார். உங்கள் மனதிற்கு பிடித்தமானவற்றை அணுஅணுவாக ஆராய்ந்து அதனை முயற்சித்தால் போதும் என பதில் அளிக்கின்றார்.

ஆக்கம் : பின்ஜால் ஷா | தமிழில் : கெளதம் தவமணி