80 மொழிகளில் பாடிக் கலக்கும் 12 வயது சுச்சேதா சதிஷ்!

2

ஒருவர் இரண்டு அல்லது மூன்று மொழிகளில் பேசுவது, பாடுவது பற்றி கேட்டுள்ளோம். ஆனால் ஒருவர் அதுவும் 12 வயது சிறுமி 80 மொழிகளில் பாடுகிறார் என்றால் பாராட்டாமல் இருக்கமுடியுமா. துபாயில் வசிக்கும் இந்தியரான சுச்சேதா சதிஷ் இந்த திறமையைப் பெற்றுள்ளார்.

சுச்சேதா ஏழாம் வகுப்பு படிக்கிறார். அவரால் 80 மொழிகளில் பாட முடியும். சமூக ஊடகத்தில் வைரலான அவரின் பாட்டு வீடியோவில் பல மொழிகளில் அவர் பாடுகிறார். அவர் கூடிய விரைவில் 85 மொழிகளில் பாடி கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார். இதை வரும் டிசம்பர் 29-ம் தேதி நடைப்பெற இருக்கும் கச்சேரியில் நிகழ்த்த உள்ளார்.

சுச்சேதா ஒரே ஆண்டில் 80 மொழிகளில் பாடக் கற்றுக்கொண்டார். இன்னும் 5 மொழிகளில் பாட மட்டும் கற்றுக்கொண்டு சாதனை படைக்கவுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், ஹிந்தி, மலையாளம் மற்றும் தமிழில் பாடுவதை விருப்பமாக கொண்டுள்ளார். 

பள்ளி நாட்களில் ஆங்கில மொழிப் பாடல்களை பாடி வந்த சுச்சேதா, மேலும் பல அயல்நாட்டு மொழி பாடல்களை பாடத்துவங்கினார். முதலில் ஜப்பானிய மொழியில் பாடக் கற்றுக்கொண்டு, பின்னர் ப்ரென்ச், ஹங்கேரியன், ஜெர்மன் என்று பல கடின மொழிகளிலும் பாடினார்.

ஏற்கனவே கேசிராஜு ஸ்ரீனிவாஸ் என்றவர் 75 மொழிகளில் பாடி படைத்துள்ள கின்னஸ் சாதனையை முறியடிக்க வரும் டிசம்பர் 29-ம் தேதி கச்சேரியில் 85 மொழிகளில் பாடவுள்ளார்.

சுச்சேதா பாடிய பல வீடியோக்கள் யூட்யூபில் வைரலாகி உள்ளது. ஒருமுறை இவர் ரேடியோ சேனல் பேட்டி ஒன்றில் 5 நிமிடங்களில் 25 மொழிகளில் பாடல்கள் பாடுவது வெளியாகி பலரது பாராட்டை பெற்றது.  

Related Stories

Stories by YS TEAM TAMIL