இனி மால்களில் கடைகளை தேடி அலைய வேண்டாம்: உங்கள் உதவிக்கு வரும் ரோபோ நண்பன்!

2

முன்பு போல இல்லாமல், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், தங்களுக்குத் தேவையான பொருட்களை எந்த கடைக்கு சென்று வாங்கவேண்டும்? அதற்கு எந்த ஃப்ளோர் செல்லவேண்டும் என்ற குழப்பத்துடன் யார் நின்றாலும், 

"hai I'm EA Bot, How can I help you ? ", என்றபடி உங்கள் உதவிக்கு வருகிறது இந்த ரோபோட்.

இ.ஏ. பாட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோட் , வாடிக்கையாளர் சேவைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

5.2 அடி உயரம் கொண்ட 85 கிலோ எடையுள்ள இந்த ரோபோ, மாலின் முழு அட்டவணையையும், வழிகளையும் கொண்டுள்ளது. இந்த இயந்திரத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. மக்களுக்கு புரியும் வகையில் மிகவும் தெளிவாக பேசும் வகையில் இந்த ரோபோ உருவாகப்பட்டுள்ளது. இதன் உடலில் 22 இன்ச் கொண்ட தொடுதிரை (Touch screen) வசதி கொண்டது என்பதால் , வாடிக்கையாளர் தனக்குத் தேவையான தகவலை இதில் இருந்து எடுத்துகொள்ளவும் முடியும். இந்தியாவிலேயே முதல்முறையாக வாடிக்கையாளர் சேவைக்கு பயன்படுத்தப்படும் முதல் ரோபோவாக இது அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.

ரோபோக்களை கொண்டு பொது இடங்களில் மக்களுக்கான உதவிகளை செய்யும் முயற்சியாகவும், தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட பயன்படுத்துதலாகவும் இ.ஏ பாட் உள்ளது. இந்த இ.ஏ பாட் ஆரம்ப கட்டத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசுகின்றது என்றாலும், இதற்கான ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் , அதில் தமிழ் போன்ற உள்ளூர் மொழிகளை இணைக்கும் முயற்சிகள் நடைப்பெற்று வருவதாகவும் இதன் வடிவமைப்புக் குழு தெரிவித்துள்ளது.

தினமும், எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சுற்றி திறியப்போகும் இந்த பாட்டுடன் படம் எடுத்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.