மக்கள் பணி முதல் படைப்புலகம் வரை: மகளிர் மகத்துவம் போற்றும் தமிழ் யுவர்ஸ்டோரி!

0

வணக்கம்

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்….

பெண்களைப் போற்றும் ஒரு தினமாக இன்றைய தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டாலும், நம் யுவர்ஸ்டோரி தினம் தினம் பல பெண்களின் வெற்றிக்கதைகளை உலகிற்கு சொல்லி, பெண்களை தினமுமே போற்றிவருகிறது என்பதை இன்று நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களையும், கொடுமைகளையும் ஊடகங்களில் படித்து மனம் நொந்து போகும் நாம், அதற்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட அதேப் பெண்கள் எவ்வாறு அந்த நிலையைக் கடந்து ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப்போல மீண்டெழுந்து சாதனைகள் புரிகிறாள் என்பதை பதிவு செய்வதே நம் தளத்தின் சிறப்பு.

இந்த பெண்களின் வெற்றிக்கதைகளுக்கு பின்னுள்ள சவால்கள், அழுத்தங்கள், சமுதாய இடர்பாடுகளை சொல்லும் அதே நேரத்தில் இவர்கள் மனம் தளராமல் வெற்றிப் பாதையை அமைத்துக்கொண்ட கதைகளை வெளியிடுகிறோம். இதன் மூலம் பிரச்சனைகளால் விரக்தியில் வாடும் பல பெண்களுக்கு உந்துதலாய், ஊக்கமாய், உற்சாகத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை ஒரு குறிக்கோளுடன் தொடர, நாம் வெளியிட்டுள்ள கதைகள் அமைந்துள்ளது என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

இந்த முயற்சியில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவப்பெண்ணின் உலகளவு சாதனை முதல் தொழிலில் வெற்றிவாகைச் சூடும் பெண்கள் வரை அடங்குவர். எனினும் இன்றைய மகளிர் தினத்தை மேலும் சிறப்புறச்செய்ய எங்களுடைய தமிழ் யுவர்ஸ்டோரி தளத்தின் முதல் பக்கத்தை பெண்களின் கதைக்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கி எங்கள் மகளிருக்கு மரியாதையை செலுத்த நினைக்கிறோம்…. 

உங்கள் அன்புள்ள,

இந்துஜா ரகுநாதன், இணை ஆசிரியர், தமிழ் யுவர்ஸ்டோரி


மகளிர் தினச் சிறப்பு கட்டுரைகள் படித்து மகிழுங்கள் !

'சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்' - அமுதா ஐ.ஏ.எஸ்.

'பெண்களை மதிக்கும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும்'- எழுத்தாளர் அனு சுப்ரமணியன்

'எளியவர்களின் வளர்ச்சியே எனக்குப் பெரு மகிழ்ச்சி'- வெற்றி மங்கை லதா ராஜன்

'படைப்புத்திறன் மூளை சார்ந்தது, ஹார்மோன்களோடு தொடர்பு உடையது அல்ல'- கலை இயக்குனர் ஜெயஸ்ரீ!

'ஃபேஸ்புக்கில் ஆண்களைப் போல் பெண்களும் சுதந்திரமாக புகைப்படத்தோடு பதிவிடும் நாள் வர வேண்டும்'- கிர்த்திகா தரண்

'ஓவியமே சமூகப் பிரச்னைகளை எடுத்துச்சொல்லும் எனது ஆயுதம்'- ஸ்வர்ணலதா நடேசன்