சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல மாடல்கள் வைத்து வெளியிடப்பட்டுள்ள படத்தொகுப்பு! 

0

உலக சுற்றுச்சூழல் தினம்!

மனித இனம் வளர்ச்சி அடைந்த அதே சமயத்தில் உலகமெங்கும் இயற்கை வளங்களுக்கு ஆபாயம் ஏற்படத்தொடங்கியது. மனிதனின் புதிய கண்டுபிடிப்புகளாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், இயற்கை அழகு சீரழிந்து இப்போது அதுவே நமக்கு ஆபத்தாக உறுமாறி நிற்கிறது. இதில் குறிப்பாக கழிவுப்பொருட்களின் பங்கு அதிகமானதே காரணமாகும்.

நாம் பயன்படுத்திய பொருட்களின் வாழ்நாள் முடிந்த பின்னர் அல்லது ஒரு பொருளின் பயன்பாடு நிறைவடைந்ததும் அதை நாம் தூக்கி எரிந்து விடுகிறோம். அவ்வாறு எரியப்படும் பல பொருட்கள் சுற்றுப்புறச்சூழலை எந்த அளவு பாதித்துள்ளது என்று நினைத்துப் பார்க்கக் கூட பலருக்கும் நேரமில்லை. இயற்கையில் நஞ்சை கலக்கிறோம் என்றும் தெரியாமல் இதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மக்கள் செய்துவருகின்றனர். 

மனிதன் பல துறைகளில் வளர்ச்சி கொண்டிருந்தாலும், இயற்கைக்கு எதிராக செய்துள்ள தவறுகளை சரிசெய்ய தவறிவிட்டார்கள். ஆனால் இந்த பெரு நாசம் மனிதர்களை மீண்டும் எப்படி திருப்பி அடித்து வருகிறது என்பதைத்தான் தற்போது நாம் அனுபவித்து வருகிறோம். 

பலரும் தங்களின் பங்குகளுக்கு சுற்றுச்சூழலை இனியாவது பாதுகாக்க, அவரவர்களின் வழிகளில் செயல்பட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். குறிப்பாக பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் இயற்கை பாதுகாப்பிற்காகவும், சுற்றுச்சூழல் மாசாகாமல் இருப்பதற்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

அந்த வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த ’ஷட்டர்ஸ்பார்க்ஸ்’ ஸ்டுடியோஸ் ‘சம்ஹாரா’ என்ற தலைப்பில் படத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் எவ்வாறு சுற்றுப்புறச்சூழலை அழித்துவருகின்றது என்பதை பிரபலிக்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 

காவ்யா ரெட்டி என்பவரின் ‘தமாரா’ என்ற அமைப்புடன் இணைந்து ஷட்டர்ஸ்பார்க்ஸ் ஸ்டூடியோஸ் இந்த போட்டோ சீரிசை தயாரித்துள்ளது. ‘சம்ஹாரா’-வில் பிரபல மாடல்கள் பவித்ரா லஷ்மி, அபினயா நாராயணசாமி, பாவனா கத்ரி, ஷாலி நிவேகாஸ் மற்றும் ஷரோன் போன்றோர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் ஒவ்வொருவரின் உடைகளும் மனிதன் இயற்கைக்கு எதிராக செய்துள்ள அழிவுகளை குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர், கணினி வல்லுனர், மார்க்கெட்டிங் துறை அனுபவசாலி, டேட்டா அனாலிஸ்ட் மற்றும் வங்கி ஊழியர் ஆகியோர்களை கொண்ட கூட்டணியாக ஷட்டர்ஸ்பார்க்ஸ் ஸ்டூடியோஸ் செயல்படுகிறது. ஒரே மாதிரியான பணியில் போரடித்துப் போன நண்பர்கள் புதிதாக, சமூகத்துக்கு பயனுள்ளதாக ஏதேனும் செய்ய முடிவெடுத்து இந்த ஸ்டூடியோவை தொடங்கினார்கள். வாரம் முழுதும் தங்களின் துறைகளில் பணி செய்தும், வார இறுதி நாட்களில் ஸ்டூடியோ வேலைகளை கவனிக்கின்றனர். 

ஷட்டர்ஸ்பார்க்ஸ் குழுவினர்
ஷட்டர்ஸ்பார்க்ஸ் குழுவினர்

‘உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இவர்கள் வெளியிட்டுள்ள ‘சம்ஹாரா’ படத்தொகுப்பு: