குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான டயாப்பர்கள் - இந்தியாவில் முதல் முறையாக சொந்தமான டயாப்பர் ப்ராண்டை உருவாக்கியவர்கள்  

மும்பையைச் சேர்ந்த நோபெல் ஹைஜீன் நிறுவனம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான டயாப்பர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது

0

குஜராத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி. ஒரு மழை நாளில் அந்தப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார் கார்த்திக் ஜோஹாரி. அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார் கார்த்திக். அங்கேயே ஒரு ஸ்டார்ட் அப் நடத்தி வந்தார். அவரது பகுதிக்கு திரும்பியதும் குடும்பம் ஈடுபட்டிருந்த டயாப்பர் விற்பனையில் அவரும் இணைந்துகொண்டார். கார்த்திக்கின் அப்பா கமல் குமார் ஜோஹாரி ‘நோபெல் ஹைஜீன்’ நிறுவனத்தை 2000-ம் ஆண்டில் துவங்கினார்.

முன்பெல்லாம் பெரியவர்களுக்கான டயாப்பர்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை மருந்துக் கடை உரிமையாளர்கள் ஏளனம் செய்வார்கள். ஆனால் இந்த அணுகுமுறை மாறி வருவதை கார்த்திக் கவனித்தார். இன்று பலரும் இவர்களது ப்ராண்டை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நோபல் ஹைஜீன் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை உணர்ந்தார் கார்த்திக்.


சில நூறு ரூபாய்கள் மற்றும் திருமண மோதிரம்

கார்த்திக்கின் அப்பா கமல் 90-களின் துவக்கத்தில் முதன் முதலில் மும்பை சென்றார். அப்போது அவரிடம் இருந்த பெட்டியில் அவரது துணிகளும், சில நூறு ரூபாய்களும் ஒரு திருமண மோதிரமும் மட்டுமே இருந்தது. அவரது குடும்பத்தினர் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவர் ஏதேனும் வித்தியாசமான முயற்சியில் ஈடுபடவே விரும்பினார். மும்பையில் சார்டட் அக்கவுண்டண்டாக பணியாற்றினார். தொழில் புரிவதற்கான வாய்ப்பு குறித்து ஆராய்ந்தவாறே இருந்தார்.

90-களின் இறுதியில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். சாம்சோனைட் கிடங்கை பராமரித்து ப்ராடக்ட் விநியோகஸ்தராக பணியாற்றினார். அதன் பிறகு பெப்ஸி, நிவியா போன்ற பல்வேறு ப்ராண்டுகளின் விநியோகஸ்தராக மாறினார்.

அப்புறப்படுத்தக்கூடிய டயாப்பர்களை ஒரு நிறுவனம் தயாரித்து வந்தது. அங்கு பணிபுரியும் ஊழியர்களை கண்ட பிறகே கமலுக்கு ’நோபெல் ஹைjiiன்’ உருவாக்கும் திட்டம் உருவானது. தனிப்பட்ட சேமிப்பைக் கொண்டு ’நோபெல் ஹைஜீன்’ நிறுவனத்தை இரண்டு ப்ராண்டுகளுடன் துவங்கினார். ஒன்று ‘டெட்டி’ (Teddy) குழந்தைகள் டயாப்பர். இரண்டாவது ஃப்ரெண்ட்ஸ் (Friends) பெரியவர்கள் டயாப்பர்.

சந்தையில் ஊடுருவுதல்

அடுத்த ஏழு எட்டு ஆண்டுகள் விநியோகப்படுத்துதற்காக மக்களை ஒருங்கிணைத்தல், தயாரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தேவையை உருவாக்குதல் ஆகியவற்றில் கமல் கவனம் செலுத்தினார். அப்போது வரை உற்பத்திக்கான ஒரு பிரத்யேக யூனிட்டை அமைக்கவில்லை. சீனா, தாய்வான், இஸ்ரேல் மற்றும் தாய்லாந்திலிருந்து டயாப்பர்களை இறக்குமதி செய்தார். கோவாவில் அவற்றை மறுபேக்கிங் செய்து ஒரு பேக்கை 500 ரூபாய்க்கு விற்பனை செய்தார். இது ஹக்கீஸ் விலையைவிட ஐந்து சதவீதம் குறைவான விலையாகும்.

கார்த்திக் தனது பயணம் குறித்து நினைவுகூறுகையில்,

”2009-ம் ஆண்டு சந்தையில் எங்களுக்கு வாய்ப்பு இருந்ததை உணர்ந்தோம். நாசிக்கில் உற்பத்தி யூனிட்டை அமைத்தோம். எட்டு முதல் ஒன்பது ஆண்டுகள் தேவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டோம். எங்களது முதல் விளம்பரத்தை 2000-ம் ஆண்டில் வெளியிட்டபோது பெரியவர்களுக்கான டயாப்பர்களுக்காக கிட்டத்தட்ட 150 தொலைபேசி அழைப்புகள் வந்தன. சந்தையில் தேவை இருப்பதை புரிந்துகொண்ட என்னுடைய அப்பா அவரது இலக்கை நோக்கி பயணிக்கத் துவங்கினார்.”

முதலீடு மற்றும் சந்தை

உற்பத்தி ஆலை உருவாக கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்றாண்டுகள் வரை ஆனது. ஒரே ஒரு இயந்திரத்துடன் துவங்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு இயந்திரத்தை இந்நிறுவனம் இணைத்து வருகிறது. இன்று ஃப்ரெண்ட்ஸ் டயாப்பர்களின் விலை 500-550 ரூபாய் வரையாகும்.

நோபெல் ஹைஜீன் உற்பத்தி ஆலையை அமைத்த ஓராண்டிற்குப் பிறகு ஆக்ஸஸ் ஃபண்ட் (Access Fund) இதில் 11.5 மில்லியன் டாலர் முதலீடு செய்தது. CLSA கேப்பிடல் இதில் 10 மில்லியன் டாலர்களை 2015-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் முதலீடு செய்தது.

இந்திய டயாப்பர் சந்தை கடந்த ஐந்தாண்டுகளில் CAGR 22.23 சதவீத வளர்ச்சியடைந்தது என்று இந்திய டயாப்பர் மார்கெட் அவுட்லுக் அறிக்கை தெரிவிக்கிறது. ஹக்கீஸ் மற்றும் மேமி போக்கோ ப்ராண்டுகளை அடுத்து பேம்பர்ஸ் ஒட்டுமொத்த டயாப்பர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது பேம்பர்ஸ், மேமி போக்கோ மற்றும் ஹக்கீஸ் ஆகிய ப்ராண்டுகள் ஒட்டுமொத்த சந்தையில் கிட்டத்தட்ட 85 சதவீத சந்தையை ஆக்கிரமித்துள்ளது.

பெரியவர்களுக்கான டயாப்பர் பிரிவில் நோபல் ஹைஜீன் மற்றும் ஆக்டிஃபிட் ஆகியவை ஆதிக்கம் செலுத்துவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளச் செய்தல்

பெரியவர்களுக்கான டயாப்பர் பிரிவில் தற்போதைய சந்தை மதிப்பு 500 கோடி ரூபாய் என்கிரார் கார்த்திக். குடும்பத் தொழிலில் கார்த்திக் இணைந்தபோது, புதிதாக முளைத்திருக்கும் இந்தப் பிரிவில் மறுப்ராண்டிங் பணியில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது. இது குறித்து அவர் கூறுகையில்,

”அவ்வளவு எளிதாக அனைத்தும் அரங்கேறவில்லை. பயனர்கள் தயாரிப்பை ஏற்றுக்கொள்வதே மிகப்பெரிய தடங்கலாக இருப்பதை சந்தையை ஆராய்ந்தபோது உணர்ந்தோம். அவர்களுக்கு பிரச்சனை இருப்பதையும் அதன் காரணமாக பெரியவர்களுக்கான டயாப்பர் அவர்களுக்கு தேவைப்படுகிறது என்பதையும் ஒத்துக்கொள்ள மறுப்பார்கள்.”

வாடிக்கையாளார்களிடம் நேரடியாக பேசினால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை விரைவில் உணர்ந்தார்கள். ஆகவே குடும்பத்தில் அவர்களை பராமரிப்பவர்களிடம் உரையாடினார்கள். அவர்களை சம்மதிக்கவைத்து அவர்கள் மூலமாக தயாரிப்பு பயனாளியிடன் சென்றடைய திட்டமிட்டனர். “அவர்கள் வாங்கிய பிறகு பயனாளி அதைப் பயன்படுத்துவார்.” என்றார் கார்த்திக்.

மெட்ரோ மற்றும் நகர்புற பகுதிவாசிகளே தயாரிப்பை அதிகம் பயன்படுத்தினர். பெரியவர்களுக்கான டயாப்பர்களுக்காகவே ஒரு மாதத்திற்கு 3,000 முதல் 4,000 ரூபாய் வரை முதலீடு செய்யும் திறன் அந்தக் குடும்பத்திற்கு இருக்கவேண்டும். கடந்த ஐந்து மாதத்தில் நோபெல் ஹைஜீன் சில்லறை மற்றும் ஆன்லைன் சேனல் வாயிலாக மக்களை சென்றடைந்துள்ளது.

எதிர்காலம்

அமேசானுடன் இணைந்து ஐந்து மாதங்கள் செயல்பட்டபோது ஒவ்வொரு மாதமும் 40 சதவீத வளர்ச்சி இருந்ததாக தெரிவிக்கிறார் கார்த்திக். இந்திய மக்களின் உடல்வாகு மற்றும் சுற்றளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த டயாப்பர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது டேப் ஸ்டைல் மற்றும் பேண்ட் ஸ்டைல் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

இந்த வருடம் 210 ரூபாய் வருவாயை எட்ட திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். –”அடுத்த மூன்றாண்டுகளில் மொத்த வருவாயை ஐந்து மடங்காக பெருக்குவதே வருங்கால திட்டமாகும். மேலும் 2017-ம் ஆண்டு பெரியவர்களுக்கான டயார்பர்களின் தேவை மற்றும் பயன்பாடு குறித்த முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம்.” என்றார் கார்த்திக்.

ஃப்ரெண்ட்ஸ் டயாப்பர் மூலம் வயதானவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என்று நோபல் ஹைஜீன் நம்புகிறது. “பெரியவர்கள் யாருமே அவர்களது குழந்தைகளுக்கு ஒரு குழந்தையாக இருக்க விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது. அதைத்தான் நாங்கள் வழங்குகிறோம்.”

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்