சென்னையில் இன்று நடைபெறும் 'டெக்ஸ்பார்க்ஸ் முன்னோட்ட சந்திப்பு நிகழ்வு!

2

தொடங்குங்கள், வளருங்கள், லாபம் ஈட்டுங்கள்! ஒரு தொழிலில் முன்னேற்றம் இப்படித்தான் இருக்கவேண்டும். இந்திய ஸ்டார்ட் அப்' கள் பல புதிய சேவைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் வேகமாக வளர்ந்து வருவதை பார்க்கிறோம். ஆனால் அந்த நிறுவனங்கள் போதிய அளவு லாபம் ஈட்டுகின்றனவா? பல லட்சம் வாடிக்கையாளர்கள் மட்டும் கொண்டு தொழிலில் வெற்றி அடைய முடியுமா? 

ஒரு தொடக்க நிறுவனத்தின் உண்மையான வளர்ச்சி என்பது அதன் நிலையான வளர்ச்சி மற்றும் அதற்குத் தகுந்த வருமானம் ஆகும். நிறுவனத்தின் மதிப்பீடு மட்டும் வளர்ச்சி என்றாகி விடாது. இந்த முக்கிய பிரச்சனையை முன்னோக்கி, ஒரு நிலையான தொழிலை வளர்க்கவும், நம்பகமான வாடிக்கையாளர்களை பெறவும், உண்மையான லாபத்தை ஈட்டவும் வழிவகை செய்ய உதவிடும் நிகழ்வே யுவர்ஸ்டோரி வருடாவருடம் நடத்தும் 'டெக்ஸ்பார்க்ஸ் 2016' TechSparks 2016

இந்த ஆண்டு 'டெக்ஸ்பார்க்ஸ்' மூலம், சில முக்கிய தலைப்புகளில் எங்கள் கவனத்தை செலுத்த முடிவெடுத்துள்ளோம். 'ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் எதை நோக்கி இருக்க வேண்டும்- மதிப்பீடா? அல்லது வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதலா?" இந்த தலைப்பில் விவாதங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த உள்ளோம். 

யுவர்ஸ்டோரி இந்த வருடம் தனது ஏழாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் அதே வேளையில், டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வை செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி பெங்களுருவில் நடத்த உள்ளது. 2010இல் 'டெக்ஸ்பார்க்ஸ்' நிகழ்ச்சியை முதன்முதலில் தொடங்கி, இதுவரை 16 நகரங்களில், 540 சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் 15,000 பங்கேற்பாளர்களைக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 

யுவர்ஸ்டோரி'யின் ஸ்டார்ட் அப்கள் மீதான அக்கறையின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வை மேம்படுத்தி வருகிறது. இதில் 'டெக்30' என்று நாட்டின் சிறந்த 30 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்' களை அடையாளம் கண்டு தேர்வு செய்து அங்கீகரித்து, உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக 'டெக்30' இல் இடம்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், பெரும் வளர்ச்சியை கண்டு, அதிக லாபம் ஈட்டி, உலக அளவில் விரிவடைந்து உள்ளது. அதே நம்பிக்கையுடன் இந்த ஆண்டும் இந்தியாவின் சிறந்த, வருங்காலத்தில் வளர்ச்சி வாய்ப்புள்ள 30 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்' களை 'டெக்30' இல் அறிமுகப்படுத்த உள்ளோம்.  

'டெக்ஸ்பார்க்ஸ்' மாநாட்டின் முன்னோட்டமாக, இந்தியா முழுதுமுள்ள முக்கிய நகரங்களில், யுவர்ஸ்டோரி குழு அங்குள்ள ஸ்டார்ட் அப்' களை நேரடியாக சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த முன்னோட்ட சந்திப்புகள், ஹைதராபாத், இந்தூர், கொல்கத்தா, மும்பை, புனே, ஜெய்பூர், சண்டிகர், டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்'களுடன் நடந்தேறியது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் 'டெக்ஸ்பார்க்ஸ் 2016' முன்னோட்ட சந்திப்பு வரும் செப்டம்பர் 6ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். 

சென்னையில் நடைபெறும் டெக்ஸ்பார்க்ஸ் முன்னோட்ட நிகழ்வு, 'ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல்',  ஐஐடி-எம் ஆராய்ச்சி பூங்கா, தரமணி' இல் நடக்க உள்ளது. மதியம் 2.30 முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில், 'இண்டிக்ஸ்' இணை நிறுவனர் ஸ்ரீதர் வெங்கடேஷ் சிறப்புரை ஆற்ற உள்ளார். பின்னர், 'டிஜிட்டல் ஓஷன் '- மோஹன் ராம், 'கோபம்பர்'- கார்த்திக் வெங்கடேஷ்வரன், 'ஜென்டெஸ்க்'- வினித் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட பல நிறுவனர்கள் தங்கள் அனுபவங்கள் மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாட உள்ளனர். 

சென்னையை தொடர்ந்து டெக்ஸ்பார்க்ஸின் இறுதி முன்னோட்ட நிகழ்ச்சி செப்டம்பர் 8ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும். 

'டெக்ஸ்பார்க்ஸ் 2016' மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் ஆப்' கள் இங்கே பதிவு செய்யலாம்!