சர்வதேச மனித மூலதன குறியீட்டில் இந்தியா 103-வது இடம்; இலங்கை, நேபாள் நாடுகள் முன்னிலை...

0

உலக பொருளாதார அமைப்பின் சர்வதேச மனித மூலதன குறியீட்டில் இந்தியா 103-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தை நார்வே பிடிக்க, தெற்காசிய நாடுகளில் இந்தியா, இலங்கை (70) மற்றும் நேபாளை (98) விட பின் தங்கிய இடத்தில் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவை விட பின்னால் உள்ள நாடுகளில், பாங்களாதேஷ் (111) மற்றும் பாகிஸ்தான் (125) ரேன்கிலும் உள்ளது. BRICS நாடுகளில் இந்தியா மட்டுமே குறைந்த ரேன்கோடு உள்ளது. மற்ற நாடுகளான, ரஷ்யா- 16-வது இடம், சீனா- 34, ப்ரேசில்-77 மற்றும் தென்னாப்ரிக்கா-87-வது இடங்களை பிடித்துள்ளது. 

உலக பொருளாதார அமைப்பின் ‘சர்வதேச மனித மூலதன குறியீட்டில்’ 130 நாட்கள் அளவிடப்பட்டது. இது வளரும் மற்றும் திறமையை பயன்படுத்திய விதத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. வாழ்க்கை பயணத்தில், மனித மூலதனம், அதாவது கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையில் மக்களுக்கு 5 வயது பிரிவுகளில் எவ்வாறு கிடைத்துள்ளது என்று கணக்கிடப்படுகிறது. 15 வயது முதல் 65 வயது வரை உள்ள மக்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

G20 நாடுகளிலும் இந்தியா மட்டுமே பட்டியலில் கீழே உள்ளது. ஊழியர்கள் பங்களிப்பில் இந்தியா மோசமாக உள்ளது என்றும் உலக வேலைவாய்ப்பு தலைமுறை இடைவெளியில் முன்னிலையில் இருப்பதும் இதற்குக் காரணங்கள் ஆகும். ஆனால் கல்வி தரம், ஊழியர்கள் பயிற்சி மற்றும் பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றில் நன்மதிப்புகளை பெற்றுள்ளது. 

கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 105-வது இடத்தில் இருந்தது. முதல் இடத்தில் இருந்த பின்லாந்து இந்த ஆண்டு இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித மூலதன குறியீடு 2017, 130 நாடுகளை அவர்கள் தங்கள் குடிமக்களின் திறன்களை 0 (மோசமான) முதல் 100 (சிறந்த) என்ற அளவீட்டில் நான்கு முக்கியக் கோணங்களில்; திறன், பயன்படுத்தல், வளர்ச்சி, மற்றும் வழிவகை ஆகியவற்றை 5 வயது வரம்பில் அதாவது; 0–14 வயது; 15–24 வயது; 25–54 வயது; 55–64 வயது மற்றும் அதற்கு மேல் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் மனித திறன் மூலதனம் கணக்கிடப்பட்டது. 

அறிவு மற்றும் மக்களின் திறன் உலக பொருளாதார முறையில் மதிப்பை கூட்டி, ஒவ்வொரு நாட்டின் ‘மனித முதலீடு’ ரேன்க் தயாரிக்கப்படுகிறது. முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்; ஸ்விட்சர்லாந்து (3), அமெரிக்கா (4), டென்மார்க் (5), ஜெர்மனி (6), நியூசிலாந்து (7), ஸ்வீடன் (8), ஸ்லோவெனியா (9) மற்றும் ஆஸ்திரியா (10). 

கூடுதல் தகவல்: IANS