மெய்நிகர் உலகில் டேட்டிங் அனுபவம் அளிக்கும் 'ஃபிலெர்ச்சுவல் ரியாலிட்டி' கேம்

0

மெய்நிகர் தன்மை எனப்படும் வர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் விளையாட்டு(கேமிங்), இரண்டுமே பிடித்திருக்கிறதா? எனில், டேட்டிங்கில் இதை முயன்று பார்த்திருக்கிறீர்களா? இதன் மூலம் நிஜவாழ்க்கையில் காதல் கைகூடுவது சாத்தியமா?உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தாலும் ட்ருலி சோஷியல்(TrulySocial) உருவாக்கியுள்ள விளையாட்டு சார்ந்த செயலியான "பிலெர்ச்சுவல் ரியாலிட்டி" (Flirtual Reality)இந்த எண்ணத்தை தான் அடிப்படையாக கொண்டுள்ளது. பிலெர்ச்சுவல் ரியாலிட்டி யோசனை செபஸ்டீன் கோமனுக்கு (Sebastian Coman) ஐந்து ஆண்டுகளுக்கு முன் உதயமானது. அப்போது சமூக விளையாட்டுகள் பிரபலமாக இருந்தன. இத்தகைய விளையாட்டுகள் அதிகம் அறிமுகமானாலும் எல்லாமே ஒரே மாதிரியாக, அலூப்பூட்டும் வகையில் இருப்பதை அவர் கவனித்தார்.

மிக விரைவிலேயே இந்த விளையாட்டுகளை ஆடி மகிழ்பவர்கள் அவற்றின் இயந்திரத்தன்மையில் அலுத்து போய், புதிய விளையாட்டுகளை எதிர்பார்ப்பார்கள் என்றும், இந்த விளையாட்டு பிரியர்கள் அனுபவசாலியாக மாறி விடுவார்கள் என்றும் அவருக்கு புரிந்தது. மற்றொரு முக்கிய போக்கையும் அப்போது செப்ஸ்டீன் கவனித்தார்: பலர், முதல் முறையாக இந்த வகை விளையாட்டின் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்தனர். நிறைய பெண்கள் உட்பட, விளையாட்டுக்கு பழக்கமில்லாத பலர் ஆர்வம் காட்டத்துவங்கியிருந்தனர். ஆனால் அவர்களை யாரும் கவனிக்கவில்லை.

பிர்ச்சுவல் ரியாலிட்டியில் பர்ஸ்ட் பிலானட்
பிர்ச்சுவல் ரியாலிட்டியில் பர்ஸ்ட் பிலானட்

டேட்டிங் சார்ந்த சிமுலேஷன் என்று எதுவும் இல்லாமல் இருந்ததும் எல்லாமே வரி வடிவம் சார்ந்ததாக, அதிகம் நம்ப முடியாததாக இருந்தது. மேலும், சமூக உரையாடலை விளையாட்டு சார்ந்ததாகவும் யாருமே முயற்சிக்கவில்லை என செபஸ்டீன் உணர்ந்திருந்தார். இதன் விளைவாக தான், வர்ச்சுவல் ஜோடியை மையாக கொண்ட காதல் அனுபவ விளையாட்டை உருவாக்கும் எண்ணம் உண்டானது. இந்த விளையாட்டில் எல்லா தீர்வுகளுமே முப்பரிமான உலகிற்குள் அமைந்திருக்கும்.

சலோனே சேகல்,சி.இ.ஓ
சலோனே சேகல்,சி.இ.ஓ

இணைந்த கைகள்

தன்னுடன் எம்பிஏ பயின்ற சலோனே சேகலிடம்(Salone Seghal) இந்த எண்ணத்தை செபஸ்டீன் கொண்டு சென்றார். அப்போது சலோனே, பார்க்லேஸ் வங்கியில் துணைத்தலைவராக இருந்தார். "தொழில்முனைவு பக்கம் வருவது குறித்தும், ட்ருலி சோஷியலை உருவாக்குவதில் தனக்கு உதவுவதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறதா என அறிந்து கொள்ளும் நோகத்துடன் செபஸ்டீன் என்னை சந்தித்தார். இதில் உள்ள புதுமை மற்றும் வாய்ப்புகளை உணர்ந்து உடனே சம்மதித்தேன்” என்கிறார் சலோனே.

அடுத்ததாக செபஸ்டீன், அடிப்படை எம்விபியை அமெரிக்க டெவலப்பர்கள் உதவியுடன் உருவாக்கினார். சலோனே தனது இந்திய தொடர்புகள் மூலம் இந்திய டெவலப்பர்களுடன் பணியாற்றி செலவை குறைக்க முடியும் என நம்பினார்.

“இந்தியாவில் அவுட்சோர்ஸ் செய்யக்கூடிய குழுவை தேடினோம். அதிரஷ்டவசமாக சரியான நபர்கள் கிடைத்தனர். அவுட்சோர்ஸ் செய்வதில் ரிஸ்க் இருந்தாலும் இந்த அனுபவம் சிறந்ததாக இருந்தது. இந்தியாவில் உள்ள குழு, கேமிங் துறையில் அனுபவம் மிக்க இருவரின் கீழ் இயங்குகிறது. ஊக்கமும், திறமையும் உள்ள கலைஞர்கள் மற்றும் டெவலப்பர்கள் இவர்கள் கீழ் இயங்குகின்றனர்” என்கிறார் அவர். ட்ருலி சோஷியல் யு.கேவை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் லண்டன் மற்றும் இந்தியாவில் அதன் செயல்பாடு பரவியிருக்கிறது.

கேமிங் துறையில் நுழைந்துள்ள புதியவர்களாக இந்த குழு கருதப்பட்டாலும், கேமிங் ஜாம்பவான்களோடு போட்டியிடும் நிலை இருந்தாலும் மெல்ல காலூன்றி வருவதாக இந்த குழு நம்புகிறது. இரண்டு பேராக இருந்த நிலையில் இருந்து 9 பேர் கொண்ட குழுவாக விரிவடைந்துள்ளது. மேலும் பலர் இணைந்து வருகின்றனர்.

சிக்கல்கள், தீர்வுகள்

ஆனால் புதிய உலகில் நுழைவது அதற்கே உரிய சவால்களை கொண்டது. கேம் உருவாக்கத்துறை போட்டி மிக்கதாக, அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் கொண்டதாக இருக்கிறது என்கிறார் சலோனே. எனினும் தனது குழு எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் அலுப்பாக தான் இருந்தது என்கிறார் அவர்.

"விளையாடுபவர்கள் மாறுவதற்கான செலவு மிகவும் குறைவு. எனவே தான், ஈடுபாடும் லயிப்பும் தரக்கூடிய பயனர் அனுபவத்தை அளிப்பது மிகவும் முக்கியமாகிறது. ஒரு புதிய வகை கேமை உருவாக்க பணம், துணிவு மற்றும் முக்கியமாக நேரம் தேவை” என்கிறார் அவர்.

இந்த துறையை சரியாக புரிந்து கொள்ளாத முதலீட்டாளர்கள் இவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். இவர்கள் பயன்படுத்தும் மெட்ரிக் வலுவாக இல்லை என்றும் (முதலீட்டாளர்கள் நிறுவனத்தை இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டிருந்தனர்) மூன்று நாட்களில் கேம்களை உருவாக்குபவர்களை தங்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்தனர்.

"நாம் அறிந்த வகையில் எலக்ட்ரானிஸ் ஆர்ட்ஸ் -ன் தி சிம்ஸ் விளையாட்டை உருவாக்க வில் ரைட்டிற்கு ஆறு ஆண்டுகள் ஆனது என்றோ, ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டை உருவாக்கியவர் அதற்கு முன்னர் 51 தோல்வி விளையாட்டுகளை உருவாக்கினார் என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. தொழில்நுட்ப உலகில் கேமிங் தயாரிப்பு தான் மிகவும் சவலானது, ஏனெனில் அவை பொழுதுபோக்கு சார்ந்தது என்கிறார் சலோனே.

இருந்தாலும் இலவசமாக ஆடக்கூடிய மொபைல் கேம்கள் மற்றும் எம்விபிக்கள் உருவாக்கம் காரணமாக நிலைமை கொஞ்சம் மேம்பட்டுள்ளது. இப்போது பயனாளிகள் கருத்துக்களை அறிந்து, நேரடி பீட்டா வடிவிலேயே மாற்றங்களை செய்து கொள்ளலாம். "பயனாளிகள் கருத்துக்களின் அடிப்படையில், ஆரம்ப பயனாளிகள் விரும்பிய, ஈர்ப்பு கொண்ட ஒரு விளையாட்டை உருவாக்கி இருந்ததை எங்களால் உணர முடிந்தது என்கிறார் சலோனே. இந்த குழு இப்போது அடுத்த கட்ட நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளது.

செபஸ்டின்ன் கோமன்
செபஸ்டின்ன் கோமன்

செயல்படும் விதம்

கேளிக்கை மிக்க, புதுமையான, மூழ்கி லயிக்க கூடிய கேமிங் அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அதிலும் குறிப்பாக காதல் சந்திப்புகளில் இத்தகைய அனுபவத்தை அளிக்க விரும்பினர். இது போன்ற கருத்துக்களில் கவனம் செலுத்தும் கேம் எதுவும் சந்தையில் இருக்கவில்லை. ராட்சதர்களை கொல்லும் கேம்கள், மாய வீடுகளை உருவாக்கும் கேம்கள், பல்வேறு அவதாரங்களை எடுக்க கூடிய கேம்கள் இருந்தாலும் யாருமே உறவுகளை இவ்வாறு அணுகவில்லை என்கிறார் சலோனே.

"மேலும் பல்வேறு டேட்டிங் செயலிகள் அறிமுகமாகியுள்ளதன் காரணமாக, பலரும் எதிர்பாலினத்திரிடம் சரியானவற்றை சொல்ல தடுமாறுகின்றனர். தொழில்நுட்பம் நம்மை இணைத்துள்ள அதே நேரத்தில் நம்மிடையேயான தொலைவையும் அதிகமாக்கியுள்ளது. எனவே தான் பிலெர்ச்சுவல் ரியாலிட்டி இப்போது மிகவும் பொருத்தமாக உள்ளது” என்கிறார் சலோனே.

இலவச விளையாட்டு நுட்பம் மற்றும் டேட்டிங் சம்பாஷானைகளை பிலெர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையாக கொண்டிருக்கிறது என்கிறார் அவர். சமூக உரையாடல்கள், பரஸ்பர ஈர்ப்பு, உளவியல் மற்றும் நியூரோ விஞ்ஞானம் ஆகியவற்றை வீடியோகேம் இயக்க அடிப்படையில் கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் சாதாரண கேமில் முப்பரிமான உலகில் நீங்கள் அவதார வடிவில் நுழைகிறீர்கள். அங்கு நீங்கள் பல்வேறு செயற்கை அறிவு பாத்திரங்களை பார்த்து ரசிக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் தேர்வுகளின் அடிப்படையில் விளையாட்டில் உங்களுக்கான ஆளுமை உருவாக்கப்படும். டேட்டிங், விஞ்ஞானம் அடிப்படையில் நியூரோ விஞ்ஞானிகள் மற்றும் டெவலப்பர்கள் உருவாக்கிய மெயர்ஸ் -பிரிக்ஸ் ஆளுமை காரணியை கொண்டு இது சாத்தியமாகிறது.

90,000 வரிகளை கொண்டு இதன் கதையாடல் அமைந்திருப்பதால் ஒவ்வொரு பாத்திரமும் தனக்கான சொந்த கதையை உருவாக்கி கொள்ள முடிகிறது. எந்த உரையாடலும் இரு முறை வருவதில்லை. இந்த உரையாடலில் சிறந்து விளங்கினால் அதற்கேற்ப தழுவல்கள் கிடைக்கும். காதல் செயலில் நன்றாக ஈடுபட்டால் கேமில் முன்னேறி உங்களுக்கான லிட்டில் பிளாக் புக்கில் புள்ளிகள் கூடுதலாக பெற்று பாரீஸ், ஆஸ்பென் உள்ளிட்ட இடங்களுக்கு மெய்நிகர் உலா ஜோடியாக செல்லலாம். "விரைவிலேயே உறுதியான உறவுகளையும் உருவாக்குவோம்” என்கிறார் சலோனே.

எதிர்கால திட்டம்

இதன் நேரடி பீட்டாவுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு இருப்பதாகவும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து ஆதரவு கிடைத்து வருவதாகவும் இந்த குழு தெரிவிக்கிறது. பெரும்பாலும், 18 முதல் 30 வயது வரை உள்ள பெண் பயனர்கள் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். உண்மையில் 70 சதவீத பயனாளிகள் பெண்கள். பயனர்கள் மத்தியில் மீண்டும் பயன்படுத்தும் தன்மை அதிகம் இருப்பதாகவும், தனது தயாரிப்பை பணமாக்குவதும் நிறுவனத்திற்கு சாத்தியமாவதாக சலோனே தெரிவிக்கிறார். பயனர்கள் சராசரியாக 25-20 நிமிடம் விளையாடுகின்றனர்.

”பிலெர்ச்சுவல் ரியாலிட்டி வகை கேம்கள் மூலம் வழக்கமான கேம் மற்றும் டிஜிட்டல் டேட்டிங் இரண்டின் கலைவையான விளையாட்டை உருவாக்கி வருகிறோம். இந்த இரண்டுமே லாபம் தருபவை" என்கிறார் சலோனே.

எதிர்கால வாய்ப்புகளை பொருத்தவரை மொபைல்களுக்கான குறைந்த செலவிலான வர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சாதனம் மொபைல் போனில் கூட மேம்பட்ட ஈடுபாட்டை அளிக்கும்.

முப்பரிமான தன்மை கொண்ட இந்த கேம் வர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களிலும் சிறப்பாக செயல்படும் தன்மை கொண்டிருப்பது உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் நம்பிக்கையை அளிக்கிறது. இந்தியாவிலும் நல்ல வாய்ப்பு உள்ளது.

“தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிப்பு, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களின் பயன்பாடு மற்றும் கேமிங், டேட்டிங் செயலிகளின் பெருக்கம் ஆகியவற்றால் அபிரிமிதமான வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாக சலோனே தெரிவிக்கிறார்.

பயனர்களை தக்க வைப்பது மற்றும் வருவாய் வாய்ப்புகளில் இந்த குழு கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே ஒரு மெய்நிகர் பொருளாதாரம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே செயலி மூலமான விற்பனை மூலம் வருவாய் கிடைக்கிறது. இதை மேலும் ஈர்ப்புடையதாக திட்டமிடப்பட்டுள்ளது. விளையாடுபவர்களில் 2-3 சதவீதம் பேரை வாங்குபவர்களாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

“பயனர்கள் சராசரியாக 8 முதல் 12 டாலர் வரை வாங்குவதில் செலவிடுகின்றனர். ஒரு சிலர் 100 டாலர் வரை கூட செலவிட்டுள்ளனர். இன்னும் முழுவதுமாக உருவாக்கப்பட்டாத மெய்நிகர் பொருளாதாரத்திற்கு இது மிக நல்ல எண்ணிக்கை என்பதால் மேலும் அளவில்லாத வாய்ப்புகள் இருப்பதாக சலோனே தெரிவிக்கிறார்.

இந்த குழு கடந்த ஆண்டு இரண்டாம் சுற்று நிதி பெற்றது. மேலும் தனது நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்தும் கூடுதல் மூலதனம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நிறுவனரீதியான நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது. "எங்களிடம் புதுமையான பொருள் இருப்பதாலும், சந்தைக்கு பொருத்தமான தன்மை கொண்டிருப்பதாலும், செலவுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருப்பதால் உள்ளூர் மற்றும் உலகலாவிய மூலத்தனத்தை திரட்டும் நம்பிக்கை உள்ளது. மூலதனம் திரட்டிய பின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம்” என்கிறார் சலோனே.

இணையதள முகவரி: Flirtual Reality