75 ஆண்டுகளான மூவர்ணக் கொடியின் நினைவாக 75 ரூபாய் நாணயம் வெளியீடு!

0

75 ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முதல் முறையாக போர்ட் ப்ளேரில் மூவர்ணக்கொடியை ஏற்றினார். இதன் நினைவாக அரசாங்கம் 75 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

35 கிராம் எடை கொண்ட இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜிங்க் கொண்டு தயாரிக்கப்படும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் செல்லுலார் சிறையின் முன்பு மூவர்ணக்கொடியை ஏற்றி மரியாதை செய்வது போன்ற உருவப்படம் இந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.

நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் வெளியிடப்படவுள்ள இந்த 75 ரூபாய் நாணயம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போர்ட் ப்ளேயரில் முதல் முறையாக 75 ஆண்டுகளுக்கு முன்பு மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்ததன் நினைவாக வெளியிடப்பட உள்ளது.

இந்த 75 ரூபாய் நாணயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படத்தின்கீழ் 75 என்கிற எண்ணும் ’anniversary’ என்கிற வார்த்தையும் பொறிக்கப்பட்டிருக்கும். ‘First Flag Hoisting Day’ என்கிற வாக்கியமும் தேவநாகிரி மற்றும் ஆங்கில மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும் என பிடிஐ குறிப்பிடுகிறது.

1943-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி போர்ட் ப்ளேயரில் சுபாஷ் சந்திர போஸ் முதன் முதலில் செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக்கொடியை ஏற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் ’ஆசாத் ஹிந்த்’ அமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூறும் வகையில் செங்கோட்டையில் அக்டோபர் மாதம் 21-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி இந்த நாணயத்தை வெளியிட்டார் என ’யாஹூ நியூஸ்’ குறிப்பிடுகிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL