இந்திய விற்பனையாளர்கள் சர்வதேச சந்தையை அடைய உதவும் ’Gxpress’

ஜெய்பூரைச் சேர்ந்த 'ஜிஎக்ஸ்பிரஸ்', சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய விரும்பும் சிறிய விற்பனையாளர்கள் மீது கவனம் செலுத்தியதன் மூலம் லாபம் ஈட்டத்துவங்கியுள்ளது. 

0

இந்த காட்சியை நினைத்துப்பாருங்கள். வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர், லக்னோவில் உள்ள சிறிய விற்பனையாளரிடம் அழகிய சிகன்காரி குர்தா இருப்பதை பார்க்கிறார். ஆனால், அந்த விற்பனையாளரின் லாஜிஸ்டிக்ஸ் பங்குதாரர், வர்த்தக ரீதியாக பலன் அளிக்காது என்பதால் ஒரு ஆடையை மட்டும் அனுப்பி வைக்க விரும்பவில்லை. சர்வதேச லாஜிஸ்டிக்ஸ் பங்குதாரர்கள் சிறிய பார்சலை அனுப்பி வைக்க விரும்பாததால், இது போன்ற பல இந்திய சிறு விற்பனையாளர்களின் பொருட்கள் இலக்கு வாடிக்கையாளர்களை அடைவதில்லை.

இந்த வர்த்தக காரணத்தினால் தான் பிரவீன் வசிஷ்தா, ஜெய்பூரில் இருந்து சொந்த நிதியில் லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட் அப்பான ஜிஎக்ஸ்பிரஸ் (Gxpress) நிறுவனத்தை துவக்கினார். சிறியதே அழகானது எனும் கொள்கையுடன், இரண்டு ஆண்டுகளாக வர்த்தகத்தில் இருக்கும் ஜிஎக்ஸ்பிரஸ், உலகளவில் செயல்பட விரும்பும் சிறிய விற்பனையாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் லாபகரமான வர்த்தகமாக மாறியிருக்கிறது.

பிரவீனுக்கு வர்த்தகத் துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது. அவர் ஃபெட் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய போது, கைவினை கலைஞர்கள் அல்லது காதி பொருள் தயாரிப்பாளர் போன்ற சிறிய விற்பனையாளர்களை கவர்வதில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது புரிந்து கொண்டனர். அதிக வருவாய் மற்றும் தொடர் வர்த்தகம் அளிக்கும் பெரிய நிறுவனங்களிலேயே இவை கவனம் செலுத்துகின்றன.

“இந்த பிரிவு ஈர்ப்புடையாக உணர்ந்தேன் மற்றும் இந்த பிரிவுடனான உறவில் கவனம் செலுத்தி, அவர்களுக்கான தீர்வுகளை உருவாக்க முடிந்தால் வெற்றிகரமான வர்த்தகத்தை உருவாக்க முடியும் என உணர்ந்தேன்,” என்கிறார் அவர்.

பிரகாசமான ஆரம்பம்

பிரவீன் தனது துணை நிறுவனர் குல்திப் சிங்குடன் இணைந்து, 2016 ல் ரூ.25 லட்சம் முதலீட்டில் ஜிஎக்ஸ்பிரசை துவக்கினார். அமேசான் அல்லது இ-பே மூலம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மீது பிரதானமாக கவனம் செலுத்தியது.

“ஃபெடெக்ஸ் அல்லது டிஎச்.எல் நிறுவனம் ஒரு பொருள் 50 கிராம் மட்டுமே இருந்தாலும் குறைந்தபட்ச அளவாக 500 கிராமுக்கு கட்டணம் வசூலிக்கின்றன,” என்கிறார் பிரவீன்.

இன்று விற்பனையாளர்களின் பொருட்களை சர்வதேச அளவில் அனுப்பி வைக்க, அமேசான் நிறுவனத்துடன் ஜிஎக்ஸ்பிரஸ் பிரத்யேக கூட்டு வைத்துள்ளது. இதே போல, ஷாப்பிபை மற்றும் ஃபிண்டெக் நிறுவனமான பயோனீருடன் கூட்டு வைத்துள்ளது.

இருப்பினும் ஆரம்பம் மெதுவாக இருந்தது. காரணம் ஏற்கனவே இருந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் கூரியர் பணியாளர்களை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அனால், விரைவிலேயே அவர்கள் சொந்த வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டனர். அதே நேரத்தில், ஜிஎக்ஸ்பிரஸ், அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கிலும் வலைப்பின்னலை உருவாக்கியது.

“சர்வதேச சேவை அளிக்கும் இந்திய வர்த்தக உணர்வின் மீது செயல்பட்டதால் எங்களுக்கு மெல்ல வரவேற்பு கிடைக்கத்துவங்கியது” என்கிறார் பிரவீன். 

நிறுவனம் இப்போது தினமும் 2,000 பாக்கெட்களை வழங்குகிறது. 2016 ன் முதல் காலாண்டிலேயே மாத விற்பனை மூலம் ரூ.30 லட்சம் வர்த்தகம் பெற்றது. தற்போது தில்லி விமான நிலையம் மூலம் மட்டும், மாந்தாந்திர அடிப்படையில் 90 டன் சரக்குகளை கையாள்கிறது. மும்பை மற்றொரு சர்வதேச வழித்தடமாக இருக்கிறது.

லாஜிஸ்டிக்சை கடந்து

டெலிவரி, வேர்ஹவுசிங், விநியோகம், லேபிளிங் மற்றும் சில்லரை நிர்வாகம் என நிறுவனம் பலவிதமான லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை வழங்குகிறது. நிறுவனம் வாடிக்கையாளருடன் வலுவான உறவு கொண்டிருப்பதை விரும்புவதால், ஆவணப்படுத்தல் செயல்முறை, ஐடி பதிவு, இன்வாய்ஸ் மற்றும் சுங்க இலாக்கா செயல்முறை ஆகியவற்றிலும் தகவல் அளிக்கிறது. 

“இன்று, எங்களுடைய சிறிய வாடிக்கையாளர்கள் வர்த்தக முறையில் செயல்படுகின்றனர் அதன் காரணமாக அரசிடம் இருந்து பல்வேறு ஏற்றுமதி சலுகைகளை பெற முடிகிறது,” என்கிறார் பிரவீன்.

ஜிஎக்ஸ்பிரஸ் முழுவதும் தானியங்கி நடைமுறையை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் தகவல்களை உள்ளீடு செய்வது மட்டும் தான், கையால் செய்யப்படுகிறது. ஒரு பார்சல் புக் செய்யப்படுவதில் துவங்கி, அட்டவணையிடுதல், ஒருங்கிணைப்பு, இடத்திற்கு அனுப்புதல் பார்கோடு என எல்லாமே தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளது. இந்த வலைப்பின்னலை பராமரிக்க, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற நுட்பங்களை ஜிஎக்ஸ்பிரஸ் பயன்படுத்துகிறது. வாடிக்கையாளரும் பார்சிலின் போக்கை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் சிறிய வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், சிறிய விற்பனையாளர் மற்றும் ஏற்றுமதி சந்தியிடையே நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

“இதற்கு முன்னர் இந்த உற்பத்தியாளர்கள் தில்லி அல்லது குர்காவ்னில் உள்ள ஏற்றுமதி மையங்களுக்கு விற்பனை செய்வார்கள், ஆனால் இப்போது நேரடியாக சந்தைக்கு செல்கின்றனர்,” என்கிறார் பிரவீன்.

அமேசான் போன்ற நிறுவனங்கள் மூலமாக ஜிஎக்ஸ்பிரசுக்கு வழக்கமான வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர். மேலும், விற்பனையாளர்களுக்கு ஆன்லைனில் விற்பது தொடர்பான பயிற்சியையும் அளிக்கிறது.

ஜிஎக்ஸ்பிரஸ், ஃபிண்டெக் நிறுவனமான பயோனியருடன் கூட்டு வைத்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் ஒரே மாதிரி வாடிக்கையாளர்களை வேறு சேவைகள் மூலம் இலக்காக கொண்டுள்ளன. “பயோனியர் ஜிஎக்ஸ்பிரஸ் சேவையை ஆதரிக்கிறது. இரண்டும் மூலமான விற்பனையும் அதிகமாக இருக்கிரது” என்கிறார் பிரவீன். அதே போல, அமேசான் குளோபல் சொல்யூஷனும் தனது வாடிக்கையாளர்களை பரிந்துரைக்கிறது.

“சிறிய ஊதுவத்தி தயாரிப்பாளர் அல்லது முல்டானி மிட்டி வர்த்தகரக்ள் எங்கள் உதவி மூலம் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதை பார்க்க முடிகிறது,” என்கிறார் பிரவீன்.

ஜிஎகஸ்பிரஸ் சீன சந்தையிலும் கவனம் செலுத்தி வருகிறது. அங்கிருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதியில் உதவுகிறது. தற்போது சீனாவில் இருந்து மாதந்தோறும் 10,000 பார்சல்கள் வருகின்றன.

சீனாவில் வலுவான இருப்பை பெற்றுள்ளது, இந்திய சந்தையில் விற்பனை செய்ய விரும்பும் சிறிய விற்பனையாளர்களுக்கு உதவ முடிகிறது என்கிறார் பிரவீன்.

ஜிஎக்ஸ்பிரஸின் கட்டணம், அனுப்பி வைக்கப்படும் பொருள்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கட்டணம் குறைவாக இருக்கும். ஆனால் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் கட்டணத்தைவிட குறைவானது என்கிறார் பிரவீன்.

விலையை பொருத்தவரை பலவகை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலைப்பிரிவு இருக்கிரது என்கிறார். உதாரணமாக, சரக்கு கட்டணத்தை குறைக்க விரும்பினால் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

“ஆன்லைன் இருப்பிற்கு ஆதரவு கோரும் சிறிய வர்த்தகர்களுக்கு உதவி அவர்கள் வர்த்தகம் வளர உதவுவதே எங்கள் யு.எஸ்.பியாக இருக்கிறது” என்கிறார் அவர்.

மேலும் வளர்ச்சிக்கு வாய்ப்பு

பிட்னே பவுஸ் ஆய்வு அறிக்கயின்படி, 2017 ல் உலகலாவிய பார்சல் ஷிப்பிங் 279 பில்லியன் டாலராக இருந்தது. 2016 ஆண்டில் இருந்து இது 11 சதவீத வளர்ச்சியாகும். ஆண்டு அடிப்படையில் சீனா அதிகபட்சமாக 28 சதவீத வளர்ச்சியை பெற்றது. இந்தியா 15 சதவீத வளர்ச்சியை பெற்றது.

இந்த அறிக்கைபடி, 2017 ல் இந்தியா ஒருவருக்கு ஒரு பார்சல் எனும் விகிதத்தில் அனுப்பியது. 

“இருப்பினும் உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் இந்திய சந்தையின் வளர்ச்சி வாய்ப்பு குறித்து உற்சாகம் கொள்கின்றனர் மற்றும் நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் துறையில் கணிசமான முதலீடு செய்துள்ளன,”

என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் லாஜிடிக்ஸ் சந்தையில் நிறைய ஸ்டார்ட் அப்கள் நுழைந்துள்ளன. இவை தங்கள் தொழில்நுட்ப திறனை கொண்டு வருகின்றன. லீப் இந்தியா, போர்டிகோ, பிளாக்பக் மற்றும் ஷேடோபாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பிரிவில் செயல்படுகின்றன.

இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை, இ-காமர்ஸ் நிறுவனங்களை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் ஜிஎக்ஸ்பிரஸ் உள்ளூர் சந்தையில் நுழையும் போது விற்பனையாளர் பிரிவில் கவனம் செலுத்தும் என்கிறார்.

வருவாய் வளர்ச்சி

வர்த்தக வளர்ச்சியைப் பொருத்தவரை, ஜிஎக்ஸ்பிரஸ் முதல் ஆண்டு செயல்பாட்டில் ரூ.6 கோடியை தொட்டது. அடுத்த ஆண்டு ரூ.9 கோடியை தொட்டது. லாபம் ரூ.20 முதல் 25 லட்சமாக இருந்தது. இந்த நிதியாண்டில் ரூ.15 கோடி வருவாயை எதிர்பார்க்கிறது. தற்போது 20 பணியாற்றுகின்றனர். விரிவாக்கத்திற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜிஎக்ஸ்பிரஸ் விரைவில் உள்ளூர் சந்தையிலும் நுழைய திட்டமிட்டுள்ளது, கூரியர்வாலா எனும் பெயரில் செயல்பட உள்ளது. ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க இது உதவும் என்கிறார் பிரவீன். உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் பணியாளர் விரிவாக்கத்தில் ஈடுபட இருப்பதால் வெளி நிதியையும் எதிர்பார்த்திருக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா பூஜாரி | தமிழில்; சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL