இந்தியாவின் 'டெக்30' இல் இடம்பெற்று, வெற்றி பெற உடனே விண்ணப்பியுங்கள்...

0

Forus Health, Capillary Technologies, MoonFrog Labs, Coverfox, Innovaccer, மற்றும் Little Eye Labs  ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான பொதுவான விஷயம் என்ன?

இந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வெற்றிகரமான தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களின் நீண்ட பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளன. மேலும் அவை யுவர்ஸ்டோரி தேர்ந்தெடுக்கும் TECH30 நிறுவனங்கள் ஆகும். 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் யுவர் ஸ்டோரி உலகளவில் வெற்றிபெறக்கூடிய திறன் கொண்ட ஆரம்ப நிலையிலுள்ள 30 தொழில்நுட்ப நிறுவனங்களை அடையாளம் கண்டு TECH30 என்கிற பெயரில் வெளியிட்டு வருகிறது.

TECH30 இந்தியாவின் பிரம்மாண்டமான மற்றும் மிகப்பெரிய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸில் ஒரு முக்கிய அங்கமாகும். உலகெங்கிலுமிருந்து வந்து குவியும் விண்ணப்பங்களிலிருந்து சிறந்த டெக் ஸ்டார்ட்-அப்’கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த நிறுவனங்கள் வளர்ச்சியடையவும் வெற்றி பெறவும் யுவர் ஸ்டோரி இந்நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிகிறது.

தொழில்முனைவோர், வழிகாட்டிகள், துறைசார் நிபுணர்கள், முதலீட்டாளர்கள் என குழுமியிருக்கும் பங்கேற்பாளர்களுடன் TECH30 நிறுவனங்களுக்கு ஒரு நிகரற்ற அனுபவம் கிடைக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த உயர்மட்ட க்ளப்பில் 210 நிறுவனங்கள் பங்கேற்று ஒட்டுமொத்தமாக 750 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது அல்லது வெற்றிகரமாக வெளியேறியுள்ளது.

Tech30 முன்னால் உறுப்பினரான கேப்பிலரி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான கிருஷ்ணா மெஹ்ரா டெக்30 ஸ்டார்ட் அப்களில் இரண்டு ஸ்டார்ட் அப்களுக்கு முதலீடு செய்துள்ளார்.

2016-ம் ஆண்டிற்கான Tech30-க்கு 2,500க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்கள் விண்ணப்பித்தனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே நீங்கள் எதற்காக காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆகஸ்ட் 20, 2017, ஞாயிற்றுக்கிழமை இரவு 11:59 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். உடனே விண்ணப்பிக்கவும்!

நீங்கள் TECH30 2017 பட்டியலில் இடம்பெற்றுவிட்டால் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகளில் சில:

• டெக்ஸ்பார்க்ஸ் 2017 மேடையில் உங்களது ஸ்டார்ட் அப் குறித்து உலகிற்கு வெளிப்படுத்த நேரம் ஒதுக்கப்படும்

• டெக்ஸ்பார்க்ஸ் பார்ட்னர்களுடன் (ஊடகங்கள், முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள் போன்றோர்) பிரத்யேக சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்

• பரிசுகள் வெல்லலாம்

கடந்த வருடம் TECH30 நிறுவனங்கள் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிகழ்வின் பார்வையாளர்கள் மத்தியில் தங்களது ஸ்டார்ட் அப் குறித்து வெளிப்படுத்திய பிறகு அவர்கள் அடைந்த பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

வட்ட மேஜை, வொர்க்ஷாப்கள், வழிகாட்டும் அமர்வுகள், இந்தியாவின் தொழில்முனைவோர் இகோசிஸ்டத்தின் முக்கிய புள்ளிகளிடமிருந்து குறிப்பிடத்தக்க உரைகள் மற்றும் விவாதங்கள் என டெக்ஸ்பார்க்ஸ் 2017 வழங்கும் அனைத்தையும் அருகிலிருந்து காணலாம்.

மற்ற தளங்களில் ஸ்டார்ட் அப்கள் இறுதி நிலையில் மட்டுமே இணைக்கப்படுவார்கள். ஆனால் TECH30 நிறுவனங்களை ஒன்றிணைத்தே எங்களது பயணத்தைத் துவங்குகிறோம். இன்றே TECH30-ல் பங்கேற்க விண்ணப்பிக்கவும்.

TECH30-யில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வரைகூறுகள்:

• தயாரிப்புகளில் புதுமைகளின் அளவு (தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு)

• சந்தையின் திறன் (இலக்காகக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், போட்டி, வளர்ச்சிக்கான திறன், ஒழுங்குமுறை சூழல் மற்றும் லாபத்திற்கான பாதை)

• குழு வலிமை (நிறுவனர்களின் பின்னணி, குழுவின் முக்கிய பலம், குழுவின் கூட்டமைப்பு)

• வருவாய் மாதிரி (உருவாக்கப்பட்ட மதிப்பு, நிலைத்தன்மை, லாபம் அல்லது ஆதாயத்தின் அளவு)

• தயாரிப்பு / நிறுவனம் இருக்கும் நிலை (வாடிக்கையாளர்களை கவர்தல், தயாரிப்பின் வெர்ஷன், வளர்ச்சியின் காலவரிசை (வெர்ஷன்கள், வகைகள், புதிய தயாரிப்புகள்), விரிவாக்க திட்டம்)

யுவர் ஸ்டோரியின் வருடாந்திர TECH30 அறிக்கை டெக்ஸ்பார்க்ஸ் முடிந்தபிறகு வெளியிடப்படும். இது ஆரம்பக் கட்ட தொழில்நுட்ப வென்சர்களுக்கு அளவுகோலாக விளங்கும் இந்தியாவின் முதல் ஆவணமாகும். இந்தியா முழுவதுமுள்ள 2,000 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களிடமிருந்து பெறப்பட்ட தரவு புள்ளிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.  

TECH30-யில் பங்கேற்கத் தகுந்த நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்க இந்த லிங்கை அவர்களுக்கு அனுப்பி வைக்கவும்.

டெக்ஸ்பார்க்ஸ் 2017 குறித்த மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.